தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

பூனை குறுக்கே சென்றால்?

                        

                          1.  பூனை குறுக்கே சென்றால் அபசகுனம்!

                        

                                             அந்தக் காலத்தில் மன்னர்கள், தாங்கள் ஆளுகின்ற நில எல்லையை விரிவுபடுத்தவும் செல்வங்களைச்  சேர்க்கவும்  இவற்றின் மூலம் தன் அதிகார பலத்தை நிலைநிறுத்தவும்  போர்களைக்  கையாண்டனர்.  அவ்வாறு, பிற நாட்டினருடன் போருக்காகச் செல்கின்ற வழியில் பூனையைப் பார்த்தால் அந்த வழியில் செல்ல வேண்டாம் என்று மன்னர் கூறி விடுவார்.

                        ஏனென்றால், மனிதர்கள் வாழ்கின்ற இடத்தில் பூனைகளின் நடமாட்டம் இருக்கும்.  அங்கே இருக்கும் ஆண்கள் போர்க்களத்திற்குச் சென்றிருப்பர்.  அதனால். அங்கே சிறுவர்கள், பெண்கள் மற்றும் வயதான பெரியவர்கள் மட்டுமே இருப்பர்.  படைகள்  அந்த வழியாகச் செல்லும்பொழுது  மேலே கூறப்பட்டோர் பாதிக்கப்படுவர்.  அதனால் மன்னர் அந்த வழியாகப்  படைகள் செல்ல வேண்டாம் என்று ஆணையிடுவார்.  மேலும்,  படைகள் வந்த  திசையை மாற்றி வேறு திசையில் செல்லுமாறு பணிப்பார்.

                        அதாவது,  பூனை குறுக்கே வந்துள்ளது.  எனவே இங்கு மேலே கூறப்பட்டோர்க்கு நம்மால்  தீங்கு நேரிடும் ( அபசகுனம் ) என்னும் பொருளில்!

                       இந்த மனிதாபிமானத்தின் அடிப்படையிலேயே  நம் முன்னோர்கள்,   "பூனை குறுக்கே சென்றால்,  அபசகுனம்" என்று கூறியுள்ளனர்.

                        இதனை நாம் புரிந்து கொள்ளாமல்,  பூனை குறுக்கே வந்து விட்டால்,  செல்ல இருக்கிறவரை உள்ளே வா,  வந்து உட்கார்ந்து தண்ணி குடிச்சிட்டுப் போ என்று கூறுகிறோம்.

                         நம் முன்னோர்கள்  எந்த ஒரு கருத்தைக் கூறினாலும் அதில் ஆயிரம் பொருள்கள் இருக்கும்.  அறிவியல். மனிதம் சார்ந்த அர்த்தங்கள் இருக்கும்.  நாம் தான் அவற்றைக் கண்டுகொள்வதில்லை.  அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவும் முயற்சி செய்வதில்லை.  

                    21 ஆம் நூற்றாண்டை நெருங்கி வாழ்ந்தும் தகவல் தொடர்புக் கருவிகளைப்  பயன்படுத்தியும்  எந்த ஒரு சிந்தனையும் இன்றி  அவை அனைத்தும் மூடப்பழக்கங்கள் என்று தவறான நோக்குடன் வாழ்ந்து வருகிறோம்.   

                    இனியாவது, இவற்றின் உண்மையான பொருள்களை அறிந்து கொள்வோம்.  அறிந்து தெளிந்தவற்றைப் பிறருக்கும் எடுத்துக் கூறுவோம்.            

                       இப்படி மாத்தி யோசிப்போமே ! ஒருவேளை    பூனை, தன் மனத்திற்குள் 'ஆஹா!  இவன் குறுக்கே வந்துட்டான்.  இனி நமக்கு எலி கிடைச்சா மாதிரிதான்' என்று நினைத்தால்?   எனவே,  நம் பகுத்தறியும் அறிவைக் கொண்டு நல்ல சிந்தனையுடன் நடை போடுவோம்!!!.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,