இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

2021 முக்கிய நிகழ்வுகள்

                                                      2021 முக்கிய நிகழ்வுகள்                                 2021 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை நினைந்து திரும்பிப் பார்க்கிறேன்.. என்னால் விடுபட்ட அல்லது உங்களுக்குத் தெரிந்த முக்கிய நிகழ்வுகளைக் கீழே உள்ள கருத்துப் பெட்டியில் தெரிவியுங்கள். ஜனவரி 20 : அமெரிக்காவின் 46ஆவது அதிபராகப் பொறுப்பேற்றார் திரு ஜோ பைடன்.                         'விடுதலைப் போரில் தமிழகம்' என்னும் புகைப்படக் கண்காட்சி நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கப் பட்டது.                         தஞ்சாவூரில் 1965 இல் இந்திய உணவுக் கழகம் தொடங்கப்பட்டது.  இதில் 'உணவு  அருங்காட்சியகம்' நவம்பரில் தொடங்கப்பட்டது.           ...

பத்ம விருதுகள் : 2019 - 20

 பத்ம  விருதுகள் : 2019 - 20                   இந்தியாவின்   உயரிய   சிவிலியன்   விருது  ( Civilized Awards ) களில் ஒன்று.    ஆண்டுதோறும்   குடியரசு தினத்தையொட்டி அறிவிக்க ப்படுகின்றது.     1.  மிக  அரிய  மற்றும்  தலைசிறந்த சேவை  :  ‘பத்ம விபூஷன்’  2.  மிக உயரிய வகையில் தலைசிறந்த சேவை :  ‘பத்ம பூஷன்’   3.  எந்தத் துறையிலும் தலைசிறந்த சேவை :   ‘பத்மஸ்ரீ’  என்று பத்ம விருதுகள் வழங்கப் படுகின்றன.                    ஆண்டுதோறும் மார்ச் / ஏப்ரல்   மாதத்தையொட்டி, உள்துறை அமைச்சகத்தால் PIB  ( Press Information Bureau ) மூலம் அறிவிக்கப்படுகிறது.     இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியானது குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவரால் வழங்கப் படும்.                   ...

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

சுப்பிரமணிய பாரதியார்                           நாம் நினைப்பதை, சமுதாயத்தில் நடப்பதை அப்படியே எழுத்துகளில் கொண்டு வருவது என்பது மிகவும் கடினம்!  ஆனால், கவிஞர் ஒருவரால் மட்டுமே இயலும்.  அவர்களுள்ளும் பாரதியாரின் கவிதைகள்..நம்மைச் சிந்திக்கத் தூண்டுவன;                           மீசைக்கவிஞர், முண்டாசுக் கவிஞர் என்றெல்லாம் மிக எளிதில் அறிந்திடச் செய்கிற தோற்றம் கொண்டவர்!  புறத் தோற்றம் முக்கியம்தான் என்றாலும் அதைவிட அகத் தோற்றமே  முக்கியம் என்று வாழ்ந்து காட்டியவர்!  ஆம்!                       "கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி" என்று பிறருக்குச் சொல்லியதுடன் தாமும் அதுபோன்றே சான்றாக வாழ்ந்து காட்டியவர்!                       இப்பொழுதெல்லாம் புன...

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

  சொல்லத் துடிக்குது மனசு  பூவே செம்பூவே உன் வாசம் வரும்  வாலிபக் கவிஞர் வாலி  கே. ஜே. யேசுதாஸ்  இளையராஜா   பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே நிழல் போல நானும் ஆஆஆஆஹா. நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது நான் வாழும் வாழ்வே உனக்காக தானே நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும் இந்நாளும் எந்நாளும் உல்லாசமே...

நீர்நிலைகள் : அணைகள்,நீர்த்தேக்கங்கள்

                                                               நீர்நிலைகள்                               நீர்நிலைகளுக்கு அருவி,  ஓடை, கிணறு, ஏரி, கடல், துரவு ( பழைய சொல்; இதன் பொருள் : பாசனத்திற்கு நீர் பாய்ச்சுகிற கிணறு ) என்று பலவிதமான பெயர்கள் உள்ளன. இவற்றுள் மழை நீரைத் தேக்கி வைக்கும் முக்கியமான நீர்நிலைகள் பற்றி மட்டும் இங்கே காண்போம். ஏரி :  சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நீர்நிலை ஆகும். பெரும்பாலானவை நன்னீர் ஏரிகளாக இருக்கும்.  சில நேரங்களில், பெரிய ஏரிகள்  சிறிய கடல் என்று அழைக்கப்படுகின்றன. அதேசமயம், நிறைய ஏரிகள் 1. நீர் விநியோகிக்க   2.  மின் ஆற்றல் உற்பத்தி செய்ய  3.  பொழுதுபோக்கு இடங்களாக /  சுற்றுலாத் தலமாக  என்று செயற்கையாகக்  கட்டப்படுகின்...