இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

குயில் பாட்டு - கதைச் சுருக்கம்

  சுப்பிரமணிய பாரதியார் பாடிய  குயில் பாட்டு  கதைச் சுருக்கம்   புதுவை நகரின் மேற்கில் ஒரு மாஞ்சோலை. அங்கு வேடர் வராத ஒரு நாளில் விந்தைக் குயிலொன்று பாடியது. "காதல் காதல் காதல்                                                                   காதல் போயின் காதல் போயின்                                                                  சாதல் சாதல் சாதல்"                என்று துள்ளும் இன்ப வெறியும் துயரும் கலந்த குரலில் குயில் பாடியதைக் கவிஞன் கேட்டான். குயிலே! உன் துயரம் யாது என்று அதனிடம் வினவினான்.  "நான் மனிதர்களின் மொழியெல்லாம் அறியும் பேறு பெற்றேன்; பாட்டில் நெஞ்சைப் பறி கொடுத்தேன்; இப்போது காதலை வ...

தேசியக் கவி சி. சுப்பிரமணிய பாரதியார் - குயில் பாட்டு

தேசிய க் கவி சி. சுப்பிரமணிய பாரதியார் குயில் பாட்டு 1. சோலைக் குயில் காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல் மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய          5 செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின் மேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை, நாற்கோணத் துள்ளபல நததத்து வேடர்களும் வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை; - அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே,         10 வேடர் வாராத விருந்துத் திருநாளில், பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில் வீற்றிருந்தே, ஆண்குயில்கள் மேனி புளகமுற, ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக, சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க்         15 காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க, இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல், மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய் வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள் இந்தவுரு வெய்தித்தான் ஏற்றம் விளங்குதல்போல்,         20 இன்னிசைத்தீம் பாடல் இசைத்திரு...