மீள்பார்வை - 2020
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இந்த ஆண்டு - 2020 - பெறுவதற்கரிய முத்துகளை நாம் இழந்துள்ளோம். எனினும், சிறப்புமிகு செயல்களால் என்றும் நம்முடனே அவர்கள் வாழ்ந்திருப்பர்.
டி. எஸ் . இராகவேந்தர் ( ஜனவரி 30, 2020 ) : நடிகர், பாடகர், இசையமைப்பாளர். 'வைதேகி காத்திருந்தாள்' படத்தில் ரேவதி கதாபாத்திரத்தின் தந்தையாக நடித்தவர். யாகசாலை, உயிர் ஆகிய படங்களில் இசையமைத்திருக்கிறார்.
விசு ( மார்ச் 22, 2020 ) : தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா ஆவார். இவரது, சம்சாரம் அது மின்சாரம் இந்திய அளவில் பேசப்பட்டு, பிற மொழிகளிலும் எடுக்கப்பட்டுள்ளது.
வி. சேதுராமன் ( மார்ச் 26, 2020 ) : மருத்துவர். சேது என்ற திரைப்படம் மூலம் நடிகராக ஆனார்.
பரவை முனியம்மா ( மார்ச் 29, 2020 ) : நாட்டுப்புறப் பாடகி. தூள், பூ முதலான திரைப்படங்களில் நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் கிராமத்துச் சமையல் நிகழ்வை நடத்தினார் 
பேராசிரியர் அய்க்கண் 👆 ( ஏப்ரல் 11 ) சிறந்த தமிழ் எழுத்தாளர். மண்ணின் மலர்கள் முதலான சிறுகதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார். இவர் எழுதிய மண் சிறுகதை நடப்பு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடமாக உள்ளது.
பி. கண்ணன் ( ஜூன் 13, 2020 ) : தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர். நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், மண்வாசனை உள்ளிட்ட சுமார் 30 திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். "அந்தக் கண்களுக்கு மட்டும்தான் ஆகாயத்தின் மறுபக்கத்தையும் பார்க்கத் தெரியும்" என்னும் பாரதிராஜாவின் கூற்றிற்கேற்பச் சிறந்த ஒளிப்பதிவாளர் ஆவார்
ஏ. எல். இராகவன் 👆 ( ஜூன் 19, 2020 ) : பழம்பெரும் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர். " எங்கிருந்தாலும் வாழ்க " என்னும் பாடலின் மூலம் அறியப்பட்டாலும் அனைவரையும் கவர்ந்தவர். கொரோனாத் தொற்று காரணமாக ஜூன் 19, 2020 அன்று மறைந்தார்.
மன்னர் மன்னன் - கோபதி ( ஜூலை 6, 2020 ) தமிழறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், விடுதலைப் போராட்ட வீரர். இவற்றையெல்லாம் விட பாரதிதாசனின் ஒரே மகன் ஆவார். கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்

ஹெச். வசந்தகுமார் 👆 ( ஆகஸ்ட் 28, 2020 ) : தொழிலதிபர், அரசியல்வாதி. நிறுவனர் : வசந்த & கோ மற்றும் வசந்த் தொலைகாட்சி. கொரோனாத் தொற்று காரணமாக ஆகஸ்ட் 28, 2020 அன்று மறைந்தார்.
வடிவேல் பாலாஜி ( செப்டம்பர் 10, 2020 ) : தொலைக்காட்சி மற்றும் திரைப்படநகைச்சுவை நடிகர். நடிகர் வடிவேலுவின் குரலைப் போன்று பின்பற்றி நடித்ததால் இப்பெயர் ஏற்பட்டது.
எஸ். பி. பாலசுப்ரமணியம் ( செப்டம்பர் 25, 2020 ) : பின்னணிப் பாடகர், பின்னணிக் குரல் தருபவர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர். 1966 முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாள மொழிகளில் பாடியுள்ளார். கொரோனாத் தொற்று காரணமாக செப்டம்பர் 25 , 2020 அன்று மறைந்தார்.
அ. மா. சாமி அக்டோபர் 8 தினத்தந்தி நாளிதழில் செய்தியாளராகச் சேர்ந்து ராணி வார இதழின் பொறுப்பாசிரியராக உயர்ந்தவர். தமிழ் இதழ்கள் வரலாறு முதலான நூல்களை எழுதியுள்ளார்.
அ. மா. சாமி 👉
க்ரியா எஸ். இராமகிருஷ்ணன் 👆 ( நவம்பர் 17, 2020 ) : தமிழ்ப் பதிப்பாளர். க்ரியா பதிப்பகம் தொடங்கி, க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி உள்ளிட்ட பல நூல்களை வெளியிட்டவர்.
டீகோ மாரடோனா ( நவம்பர் 25, 2020 ) : அர்ஜெண்டினாவின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர்.
அப்துல் ஜப்பார் ( டிசம்பர் 22 ) : அகில இந்திய வானொலியில் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து, பின் ESPN, NEO Sports, Sun Tv, Zee Tv ஆகியவற்றில் தொடர்ந்து வர்ணனையாளாராகப் பணியாற்றினார்.
தொ. பரமசிவன் ( டிசம்பர் 24, 2020 ) : தமிழறிஞர், பேராசிரியர், பண்பாடு-சமயங்கள் தொடர்பான ஆய்வாளர். இவரது, 'அழகர் கோவில்' என்னும் ஆய்வு நூல் மிகவும் புகழ் பெற்றதாகும். ஜாகிர் உசேன் கல்லூரி ( இளையான்குடி ), தியாகராசர் கல்லூரி ( மதுரை ), மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ( பேராசிரியர் - திருநெல்வேலி ) ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ளார்.
இவர்கள் மட்டுமன்று, இந்த ஆண்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளால் உயிரிழந்தவர்களுக்கும் எதிரிகளால் தாக்கப்பட்டுத் தங்கள் இன்னுயிர் இழந்த இராணுவ வீரர்களுக்கும் இப்பதிவின் மூலம் ஆழ்ந்த இரங்கலையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் சுருக்கமாக!
https://kavibharathinoolagam.blogspot.com/2020/12/2020_31.html
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்





கருத்துகள்
கருத்துரையிடுக