தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

சிற்றிலக்கியம் - பிள்ளைத் தமிழ் : முழுத் தகவல்கள்

 

பிள்ளைத்தமிழ் 

34.  பிள்ளைத்தமிழ் என்றால் என்ன?

ü  சிற்றிலக்கிய நூல் வகைகளுள் ஒன்று.

ü  புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், அரசர், புலவர் பெருமக்கள், சமய ஆச்சாரியர்கள்,  தமக்கு உதவி செய்தோர் ஆகியோரைக் குழந்தையாக உருவகித்துக் கற்பனை பல அமைத்துப் பாடுவது.

ü  குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.

 

35.  தமிழறிஞர்கள் எதனைப் பிள்ளைத்தமிழ் ஆகாது என்று கூறுவர்?

பாட்டுடைத் தலைவர்கள் செயற்கரும் செயல்களைக் குறித்துப் பிள்ளைத் தமிழில் பாடவில்லை எனில் ,

நூல் என்னும் அமைப்புக்குள் அமையாமல், வெறும் பருவங்கள் மட்டும் அமைவதையே . . .

 

36.  பிள்ளைத் தமிழின் பாடல் வரையறை குறித்து எழுதுக.

ü  பத்துப் பருவங்கள் : பாடல்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும். 

ü  இரட்டித்துப் பாடினால் ஓசை நீண்டு பாட வேண்டும் என்பது வரையறை.

ü  இவ்வரையறையை மீறி, பத்துப் பருவத்திற்கான பாடல் எண்ணிக்கையைக் குறைத்தும் கூட்டியும் பிள்ளைத் தமிழ் நூல்கள் அமைந்துள்ளன.

 

37.  பத்துப் பருவத்திற்கான பாடல் எண்ணிக்கையைக் குறைத்தும் கூட்டியும் எழுந்த பிள்ளைத் தமிழ் நூல்கள்?

சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் 

ஒவ்வொரு பருவத்திலும் 7 பாடல்கள்

கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்

ஒவ்வொரு பருவத்திலும் 5 பாடல்கள்

பழனிப் பிள்ளைத்தமிழ்  :  ஒவ்வொரு பருவத்திலும் 3 பாடல்கள்

திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமிழ் 

ஒவ்வொரு பருவத்திலும் 1 பாடல்

திருநாவுக்கரசர் பிள்ளைத்தமிழ்

ஒவ்வொரு பருவத்திலும் 1 பாடல்

ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

ஒவ்வொரு பருவத்திலும் மாறுபட்ட எண்ணிக்கையுள்ள பாடல்கள்.

 

38.  பிள்ளைத்தமிழ் குறித்துத் தொல்காப்பியர் தம் தொல்காப்பியத்தில் கூறியுள்ள கருத்துகள்?

  • கடவுள் மீது காமம் கொண்டு பாடுவதும் கைக்கிளை. கைக்கிளையின் புறம் பாடாண் திணை ஆகையால் கடவுள்மீது காமம் கொண்டு பாடுவதும் பாடாண் திணை.
  • இதில் கடவுளைக் குழந்தை வடிவமாக்கிப் பாடும் மரபும் உண்டு என்று தொல்காப்பியர் ...

"காமப் பகுதி கடவுளும் வரையார்

ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்"   (  தொல்.  புறத்.,  23 ) என்றும்

"குழவி மருங்கினும் கிழவது ஆகும்" ( தொல். புறத்.,  24 ) என்றும் இலக்கணம் தருகிறார்.

 39.  பிள்ளைத்தமிழ் குறித்து இலக்கணம் கூறிய நூல்கள்?

1.  வெண்பாப் பாட்டியல்

" சாற்றிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி

மாற்றாரிய முத்தமே வாரானை - போற்றாரிய

அம்புலியே யாய்த்த சிறுபறையே சிற்றிலே

பம்புசிறு தேரோடும் பத்து "

என்ற  நூற்பாவாலும்

பன்னிரு பாட்டியல்

"சிற்றில் இழைத்தல் சிறுசோறாக்கல்

பொற்பமர் குழமகன் புனைமணி ஊசல்

ஆண்டு ஈறாறதில் இழிற்காமன் நோன்போடு

வேண்டுதல் தானுள விளம்பினர் புலவர்"

இலக்கண விளக்கப் பாட்டியல்

" பின்னைய மூன்றும் பேதையர்க் காகா

ஆடுங் கழங்கு அம்மானை ஊசல்

பாடுங் கவியால் பகுத்து வகுப்புடன்

அகவல் விருத்தத் தாள் கிளையளவாம்"

 40.  பிள்ளைத்தமிழ் பாடப்பட வேண்டிய வரையறை?

  • பத்துப் பருவங்களில் தான் அமைய வேண்டும்.
  • பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்கள் இவ்வாறே . . .
  • ஆண்டாள் பிள்ளைத்தமிழ்  :  11 பருவங்கள்
  • தில்லை சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ் :  12 பருவங்கள் கொண்டதாக . . . .

 41.  பிள்ளைத்தமிழின் வகைகள் யாவை?

ஆண்பாற் பிள்ளைத்தமிழ்  &  பெண்பாற் பிள்ளைத்தமிழ்

 42.  பிள்ளைத் தமிழில் மூன்றாம் திங்களிலிருந்து முதல் பருவத்தைத் தொடங்குவது ஏன்?

தமிழர் பண்பாட்டில் முதல் 2 திங்கள் குழந்தையை வெளியில் கொண்டு வர மாட்டார்கள். எனவே, . . .

 43.  பிள்ளைத்தமிழ் பாடப்படும் தன்மை?

ü  மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தை

ü  பத்துப் பருவங்களாகப் பிரித்து

ü  ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்து .

ü  திங்கள்  :  மாதம்

ü  3   -  ஆம் திங்கள்          : காப்பு

ü  5  -  ஆம் திங்கள்            : செங்கீரை

ü  7-   ஆம் திங்கள்             : தாலாட்டு

ü  9-   ஆம் திங்கள்             : சப்பாணி

ü  11-  ஆம் திங்கள்           : முத்தம்

ü  13-  ஆம் திங்கள்           : வருகை

ü  15-  ஆம் திங்கள்           : அம்புலி

ü  17-  ஆம் திங்கள்           : சிற்றில்  ( ஆண் ) / நீராடல் ( பெண் )

ü  19-  ஆம் திங்கள்           : சிறுபறை ( ஆண் ) / நீராடல் ( பெண் )

ü  21-  ஆம் திங்கள்           : சிறுதேர் ( ஆண் ) / நீராடல் ( பெண் )

44.  இருபாற் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை? அவை யாவை?

பொதுவான பருவங்கள்  :  ஏழு

காப்பு,                    செங்கீரை,           தால்,         சப்பாணி,     

முத்தம்,                  வருகை,                 அம்புலி

 45.  பிள்ளைத்தமிழின் முதல் ஏழு  பருவங்களின் விளக்கங்கள்?

1. காப்புப்பருவம்

பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முதல் பருவம்

பிள்ளைத்தமிழ் இலக்கியம் சிறக்கவும் பாட்டுடைத்தலைவன் மேன்மையடையவும்  இறைவனை வேண்டுதல்

பின் வரும் பருவங்களுக்கெல்லாம் இப்பருவமே முதல் நாடியாக அமைதல்.

காக்கும் தொழிலை மேற்கொண்டுள்ள திருமாலே காக்கும் பருவத்தில் முதற்கடவுளாகப் போற்றப்படுதல்.

" அவன்தான்

காதற்கிழவன் ஆகலானும்

பூவின் கிழத்தியைப் புணர்த லானும்

முடியும் கடகமும் மொய்பூந் தாரும்

குழையும் நூலும் குருமணப் பூணும்

அணியும் செம்மல் ஆகலானும்

முன்னுற மொழிதற்குரியன என்ப" 

என்று பன்னிரு பாட்டியல் குறிப்பிடுகிறது.

ஆயினும் வேறு கடவுள். அடியவர் ஆகியோரைக் காப்பாகக் கூறும் வழக்கமும் உள்ளது . 

2. செங்கீரைப் பருவம்

  • இரண்டாவது பருவம்   :  குழந்தையின் ஐந்தாம் திங்களில்
  • "கீர் என்பதற்கு சொல் எனப் பொருள் கொண்டு இது குழந்தைகள் மழலையை விட இனிமையான பொருள் தெரியாத ஓசையை எழுப்பும் பருவம்" என்றும்,
  • "ஆடுக செங்கீரை எனப்பாடுவதால் குழந்தை ஒருகாலை உயர்த்தியும் ஒருகாலை மடக்கியும் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி முகத்தை மேலே உயர்த்தி ஆடுதலாகிய பருவம்" என்றும்,
  • "அவ்வாறு ஆடும் பொழுது சுற்றத்தார் சிறந்த சொற்களை மழலை கூற வேண்டும் என்று வேண்டிக் கொள்வர்" என்றும் கலைக்களஞ்சியம், 7 ஆவது தொகுதி கூறுகிறது .

          குழந்தை தலையெடுத்து முகத்தை அசைத்தாடும் நிலையே பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்களில் கூறப்படுகிறது.

3. தாலப்பருவம்

v  மூன்றாம் பருவம் :  குழந்தையின் ஏழாம் திங்களில்

v  நிகழ்வது ஆகும்.

v  தால் :  நாக்கு. நாக்கை அசைத்துத் தாலாட்டி குழந்தைகளைத் தூங்க வைத்தல்.

v  நாளடைவில் இப்பருவம் தனியொரு சிற்றிலக்கியமாக உருப்பெற்றது.

4. சப்பாணிப் பருவம்

§      நான்காம் பருவம்  :  குழந்தையின் ஒன்பதாம் திங்களில்

§      ஒன்பதாவது மாதத்தில் குழந்தை உட்காரத் தொடங்கிய பிறகு "மகிழ்ச்சியால் கை கொட்டுதல், கையாட்டுதல் போன்ற விளையாட்டுகள் அதனிடம் இயல்பாகத் தோன்றும். பெற்றோரும் மற்றோரும் கைதட்டிக் காட்டிக்  குழந்தையை அழைப்பதோடு குழந்தையையும் கை தட்டும்படி வேண்டுவர். குழந்தை அதற்கேற்ப " சப்" என்ற ஒலி உண்டாகும்படி "பாணி" யைக் / கையைக் கொட்டி முழக்கும்.

§      குழந்தை நிமிர்ந்து அமர்ந்திருப்பதை 'சப்பாணி' என்று கூறுவதும் உண்டு.

5.  முத்தப்பருவம்

*      ஐந்தாவது பருவம்  :   பதினோராம் திங்களில்

*      பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் முத்தப்பருவம் சிறந்த பருவமாக

*      குழந்தையைப் பாராட்டி மடியில் தூக்கி வைத்துக் கொண்டு, அதன் மலரினும் மெல்லிய இதழ்களால் முத்தம் பெற்று மகிழ்தலே

6. வருகைப்பருவம்

  • ஆறாவது பருவம்   பதின்மூன்றாம் திங்களில்
  • வேறு பெயர் :  வாரானைப் பருவம்
  • வரவேற்றல் என்பது தமிழர் பண்பாட்டில் தலை சிறந்த ஒன்று.
  • தத்தித் தத்தி தளர்நடை இட்டு வரும் குழந்தையை அருகில் வருக! வருக! என வாய் குளிர மெய்மகிழ அழைத்தல்.
  • அவ்வாறு வரவேற்கும் பொழுது குழந்தையின்  சிறப்புகளை எடுத்துச் சொல்லுவர்.

7. அம்புலிப்பருவம்

*      ஏழாவது பருவம்  :  பதினைந்தாம் திங்களில்

*      அம்புலி :  நிலா /  நிலவு 

*      நடக்கக் கற்றுக் கொண்ட குழந்தை அங்குமிங்கும் சென்று காட்சிகளைக் காண மிகுதியாக விரும்பும்.

*      அதனால். விண்ணில் இருக்கும் நிலவைக் குழந்தையுடன்  விளையாட வருமாறு அழைத்தல்.

46.  அம்புலிப் பருவத்தின் சிறப்புகள்?

'பிள்ளைக்கவிக்குஅம்புலி புலியாம்'

வெண்ணிலவை குழந்தையுடன் விளையாட வருமாறு அழைக்கும் பொழுது,

1.  குழந்தையுடன் சரி நிகராக அம்புலியை எண்ணுதல்

2.  அம்புலியும் குழந்தையும் வேறுபடுதல்

3.  விளையாட வருவதனால் ஏற்படும் நன்மைகளைக் கூறுதல்

4.  வருந்தி அழைத்தும் வரவில்லையாயின் இன்ன தண்டனை பெறுவாய் என்று கூறுதல்

5. இவற்றைச் சாம பேத தான தண்ட முறையில் பாடுதல்

6.   சிலேடை முதலிய அணி இலக்கணங்கள் அழகுற அமைத்துப் பாடுவதும் உண்டு.

 

46.  ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கு உரிய இறுதி மூன்று

        (  8, 9 & 10 ) பருவங்கள்?

8.  சிற்றில் இழைத்தல் / சிற்றில் சிதைத்தல்

9.  சிறுபறை முழக்கல்

10. சிறு தேர்ப்பருவம்

8.  சிற்றில் இழைத்தல் / சிற்றில் சிதைத்தல்

  • எட்டாவது பருவம்  :  பதினேழாம் திங்களில்
  • இதன் முந்தைய பருவத்தில் அம்புலியை விளையாட அழைத்து அது வாராத போது கோபம் கொண்ட குழந்தை பெண்குழந்தைகள் கட்டிய சிற்றிலை சிதைத்தல்.
  • அப்போது அதனைக் கட்டிய பெண்மக்கள் எல்லாம் எம் சிற்றிலைச் சிதைக்க வேண்டாம்! என வேண்டுமுகமாகப் பாடப் படுவதே
  • மற்ற பருவங்கள் எல்லாம் பெற்றோரும் மற்றொரும் பாடுவதாக அமைய இப்பருவம் மட்டும் சிறுமிகள் பாடுவதாக அமையும்.

9. சிறுபறை முழக்கல்

  • ஒன்பதாவது பருவம்  :  பத்தொன்பதாம் திங்களில் நிகழ்வதாகும். இப்பருவத்தில்
  • ஒலி இன்பங்கள் குழந்தையை மிகவும் ஈர்க்கும். ஆதலால் குழந்தை சிறு பறை முதலியவற்றைக் கொட்டிக்கொண்டு விளையாடுதல்.
  • அவ்வாறான கருவிகளைக் கொடுத்து ஒலி முழக்குமாறு செய்து மகிழ்விப்பதே . . . .

10 சிறுதேர்ப் பருவம்

ü  பத்தாவது பருவம்  :  21  ஆம் திங்களில்

ü  மரத்தாலான சிறிய தேரினை உருட்டி மகிழும்படி குழந்தையை வேண்டிப்பாடுதல்.

ü  மடநடை பயிலும் பருவத்தில் உள்ள குழந்தைகளின் நடைப் பயிற்சிக்கு உதவும் பொருட்டு சிறு தேரினை ஓட்டி மகிழச் செய்வர்.

ü  வளர வளர "நடந்து செல்லுதல் மட்டுமின்றி தேர் முதலியவற்றின்மீது ஊர்ந்து செல்லுதலை"யும் குழந்தை விரும்புதல்.

ü  இவ்விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு தேர் முதலியவற்றினை உருட்டி குழந்தையை அமரச் செய்து மகிழ்வூட்டுவர்.

ü  'இலக்கண விளக்கப்பட்டியல்'  :  குழந்தையின் ஏழாம் ஆண்டில் நிகழும் என்று . . .

 47.  பெண்பால் பிள்ளைத்தமிழுக்கு உரிய இறுதிப் பருவங்கள் 

        ( 8, 9 & 10 ) குறித்து?

காப்பு -  அம்புலி  :  ஏழு பருவங்கள் பொது

பெண்பால் பிள்ளைத்தமிழுக்கு உரிய இறுதிப் பருவங்கள்

8.  நீராடல்

9. அம்மானை

10. ஊசல் ஆகியன

8. நீராடல்

எட்டாவது பருவம்  :  பதினேழாம் திங்களில்

குழந்தையை நீர் நிலைகளில் நீராட வேண்டிப் பாடும் பருவம்

9. அம்மானை

  • ஒன்பதாவது பருவம்  :  19 ஆம் திங்களில் 
  • கழங்கு என்றும் கூறுவர்.
  • கழங்கு :  மரம்
  • கழங்குக் காய்கள் கொண்டு ஆடுதல்.
  • அல்லது ஈயம் போன்ற பொருள்களால் பந்து போன்று உருண்டையாகச் செய்து அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக மேலே எறிந்து கையால் பிடித்து விளையாடுதல்.
  • பேதை அல்லது பெதும்பைப் பருவ மகளிர் அம்மானை ஆடுவர் :  உலா நூல்களில்
  • கலம்பகம் என்ற சிற்றிலக்கிய உறுப்புகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.
  • மகளிர் விளையாட்டு என்ற நிலை மாறி கதை அமைப்பை இசையோடு கூறும் இலக்கியம் என்ற நிலை . . .
  • அம்மானைப் பாடல்கள் தொடக்கத்தில் நாட்டுப் புறப் பாடல்களாகவே இருந்திருத்தல் வேண்டும் என்றும் . . .

                    வேறொரு வகையில் கழங்கு விளையாடப்படும் முறை

             மகளிர் மூவர் கூடி தம் தலைவனைக் குறித்து மூவரில் ஒருத்தி வினா எழுப்ப, மற்றொருத்தி அதற்கு விளக்கம் சொல்ல, வேறொருத்தி இவ்விருவருக்கும் விடை கூறி அம்மானைக் காய்களை எறிந்து ஆடி மகிழ்வர்.

                    இவ்வாறு அமையும் பாடலின் இறுதிச் சீரில் அம்மானை என்ற சொல் அமையும்.

10. ஊசல்

ü  பத்தாவது பருவம்  :  21  ஆம் திங்களில்

ü  ஊசல் :  ஊஞ்சலில் ஆடுதல்

ü  குழந்தையை ஊஞ்சலாடி மகிழும்படி வேண்டும் பருவம்

ü  குழந்தையை ஊஞ்சலில் அமர்த்தி தாதியர் முதலானோர் அக்குழந்தையின் சிறப்புகளையெல்லாம் எடுத்துரைத்து ஊஞ்சலை ஆட்டிக்  குழந்தையை மகிழ்விப்பர்.

ü  ஊஞ்சல் அமைக்கும் வகை, ஆடும் வகை, குழந்தையின் சிறப்பு, காண்போருக்கு விளையும் கருத்து ஆகியன. . .

 48.  சிறுதேர் என்றால் என்ன?

தமிழ்நாட்டின் சில கிராமங்களில் மட்டும் இந்த நடைவண்டி பயன்பாட்டில் உள்ளது.

சங்ககாலத்தில் இதனை முக்கால் சிறுதேர் என்றனர்.

காவிரிப்பூம்பட்டினத்தில் சிறுவர்கள் தங்கக் காப்புகளைக் காலில் அணிந்துகொண்டு  முக்கால் சிறுதேர் உருட்டி விளையாடியதாக . .

 

49.  சிறுசோறாக்கல் என்றால் என்ன?

கூட்டாஞ்சோறு என்பது கூட்டாகச் சேர்ந்து சோறாக்கி உண்ணும் ஒரு விழா.

பெரியவர்கள் கூட்டாகச் சேர்ந்து சோறாக்கி உண்பதைக் குழந்தைகள் இவ்வாறு நடித்து விளையாடுவது . . .

சில பிள்ளைத்தமிழ் நூல்கள் சிறுசோறாக்கல் என்னும் பருவமாக வைத்து . . .

 50.  தமிழில் தோன்றிய முதலாவது பிள்ளைத்தமிழ் நூல்?

குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்

ஆசிரியர்  :  ஒட்டக்கூத்தர் /  காலம்  :  கி.பி 12ஆம் நூ.,

பாட்டுடைத் தலைவன்  :  இரண்டாம் குலோத்துங்கன்

 

51.  முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

குமர குருபரர்

நூலின் பாட்டுடைத்தலைவன் முருகன்; பாடப்பட்டுள்ள அவனது பருவங்கள் பத்து.

 

52.  பிள்ளைத் தமிழ் என்னும் சிற்றிலக்கியத்தின் முன்னோடி யார்?

பெரியாழ்வார்

 53.  சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எழுதியவர் யார்?

திரிசிபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

பாட்டுடைத் தலைவன்  :  சேக்கிழார்

பக்திச் சுவை நனி சொட்ட சொட்டப் புராணம் பாடியதைச் சிறப்பிக்கும் விதமாக . . .

 54.  திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் எழுதியவர் யார்?

பகழிக் கூத்தர்  /  காலம் 15  ஆம் நூ.,

பாட்டுடைத் தலைவன்  :  திருச்செந்தூர் முருகன்

பாடல்களின் எண்ணிக்கை  :  3  +  103.

 55.  ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் ஆகியவற்றைத் தவிர பிற்காலத்தில் எழுந்த பிள்ளைத்தமிழ் நூல் வகைகள்?

இறைவன் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்

இறைவி பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்

கவிஞர் அல்லது சான்றோர் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்

அரசன் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்

மக்கள் தலைவர் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்

என வகைப்படுத்துவர்.

 56.  புகழ் பெற்ற சில பிள்ளைத்தமிழ் நூல்கள் சிலவற்றைத் தருக.

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்

திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் - பகழிக்கூத்தர்

சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்

திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் - கவிராசப் பண்டாரத்தையா.

மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் - சி அன்பானந்தம்

குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் - ஒட்டக்கூத்தர்

கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் - சிவஞான முனிவர்

திரௌபதியம்மன் பிள்ளைத்தமிழ் - இரட்டணை நாராயணகவி


குறிப்பு :  இப்பக்கத்தை விட்டு நீங்கும்முன் உங்கள் கருத்தைக் கூறுங்களேன்!  கருத்து கூறியமைக்கு நன்றி!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,