தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

தொடர் : உரை : மறைந்து போன உரை நூல்கள் & நூல் பகுதிகள்

 

மறைந்து போன உரை நூல்கள் 

உரைகள் மட்டும் 

     மறைந்துபோன உரை நூல்களை அறிவதற்கு உரையாசிரியர்கள் பெரிதும் துணைபுரிகின்றனர்.

·         உரைச் சிறப்புப் பாயிரங்கள்,

·         ஏனைய உரைகளைச் சுட்டும் உரைப் பகுதிகள்

ஆகியவற்றின் துணைகொண்டு மறைந்துபோன உரை நூல்கள் . . .

குறுந்தொகை

பேராசிரியர்  &   நச்சினார்க்கினியர் உரைகள்

நச்சினார்க்கினியர் பழைய நூல்களுக்குச் செய்துள்ள உரைகளை,

                        பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும்

                        ஆரக் குறுந்தொகையுள் ஐஞ்ஞான்கும்-சாரத்

                        திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்

                        விருத்திநச்சி னார்க்கினிய மே"

என்ற வெண்பா தொகுத்துக் கூறுகின்றது.

இவ் வெண்பாவால், குறுந்தொகையுள் இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதினார் என்ற செய்தி வெளிப்படுகின்றது.

இவ்வாறு இருபெரும் உரையாசிரியர்களும் சேர்ந்து எழுதி முடித்த குறுந்தொகை உரை மறைந்து போய் விட்டது.

அகநானூறு   -  அகவல் உரை

உரை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை

உரைச் சிறப்புப் பாயிரம்   :  உரையாசிரியர் பெயர், ஊர், உரை எழுதிய செய்தி ஆகியவற்றை . . .

மணக்குடியான் பால்வண்ண தேவன் வில்லவ தரையன் அகநானூறு :  அகவற்பாக்களால் எழுதிய உரை

மலைபடுகடாம் உரை

ஆளவந்த பிள்ளை உரை  :  கிடைக்கவில்லை.

நச்சினார்க்கினியர் மலைபடுகடாம் உரையில்   :  ஆளவந்த பிள்ளை பற்றி . . . .

குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம் உரைகள்

மறைமலையடிகளார் பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை ( 1951 )  : முகவுரை :“இன்னும் யாம் எழுதி வைத்திருக்கும் குறிஞ்சிப்பாட்டு ஆராயச்சியுரையும், மலைபடுகடாம் ஆராய்ச்சியுரையும், இனி எழுத

நினைத்திருக்கும் ஆராய்ச்சியுரைகளும் விரைவில் வெளிவருவதற்குத் திருவருள் உதவி புரியுமென்று எதிர்பார்த்திருக்கின்றோம்” என்று கூறியுள்ளார்.

         ஆனால் மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சியுரைகள்  கிடைக்கவில்லை. 

                                 பதினெண் கீழ்க்கணக்கு :  பழைய உரைகள்

பதினெண் கீழ்க்கணக்கில் பலவற்றிற்குப் பழைய உரைகள் உள்ளன.

          பழைய உரைகள் கிடைக்காத நூலின் பகுதிகள்

ஏலாதி                                                         : 1 முதல் 8 பாடல்கள் உரை இல்லை.

திணைமாலை நூற்றைம்பது       : 128  -  150 வரை

திணைமாலை எழுபது                     : 25 - 70  வரை

கைந்நிலை                                              : 1 -  17, 27 - 34, 44 - 52

கார் நாற்பது                                          : 23 - 38    

                                  திருக்குறள் உரைகள்

பதின்மர் உரை  : 

                        தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்

                        பரிதி பரிமே லழகர்-திருமலையர்

                        மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற்கு

                        எல்லையுரை செய்தார் இவர்

என்ற வெண்பா குறிப்பிடுகின்றது.

பரிமேலழகர், மணக்குடவர், காலிங்கர், பரிதி, பரிப்பெருமாள் :  ஐவர் உரைகள் வெளிவந்துள்ளன.

தருமர், தாமத்தர், நச்சர், திருமலையர், மல்லர்  :  ஐவர் உரைகள் கிடைக்கவில்லை.

பதிபசு பாசப் பனுவல்

மறைஞான தேசிகர்  :  காண்டிகை உரை ( கண்ணழிவு உரை ) கிடைக்கவில்லை.   

வியாக்கியானங்கள்

கூரத்தாழ்வானின் மைந்தரான பராசரபட்டர்   :  திருநெடுந் தாண்டகம்  :  வியாக்கியானம் :  வண்ண நறுங்குஞ்சி’ ( 21 ) என்ற பாடல் தவிர ஏனைய வற்றிற்கு உரை  கிடைக்கவில்லை.

திருவிருத்தம்

நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, அழகியமணவாள சீயர், அப் பிள்ளை, பெரிய பரகால சுவாமி  :  ஐவர் உரை

பெரியவாச்சான் பிள்ளை உரை தவிர ஏனைய நான்கு பேர் இயற்றிய உரைகள் : மறைந்து போயின.

பரத சேனாபதீயம் உரை

உரையாசிரியர் பெயர் தெரியவில்லை  &  உரை கிடைக்கவில்லை.

பாயிரங்கள்  :  டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் நூல் நிலையம் வெளியிட்டுள்ளது.                                                 

இடைக்காடர் ஊசிமுறி

ஆறைப் பொறையிலான்  :  45 பாடல்கள்  : உரை  :  கிடைக்கவில்லை. 

இறையனார் களவியல் உரைகள்

நக்கீரர்  :  இறையனார் களவியல் உரை  :  கிடைக்கவில்லை

மதுரை மருதன் இளநாகனார் உரை  :  கிடைக்கவில்லை. 

                        தொல்காப்பியவுரை   : நுண்பொருள்மாலை

பரிமேலழகர் உரைக்கு நுண்பொருள்மாலை என்ற உரை விளக்கம்

எழுதிய இரத்தின கவிராயர்  :  உரையின் பெயர் : நுண்பொருள்மாலை :  கிடைக்கவில்லை.

அவிநய இலக்கணம்

மயிலைநாதருக்குமுன் சிறந்து விளங்கிய  அதன் உரை  :   கிடைக்கவில்லை.

நன்னூல்

ஆண்டிப் புலவர்  :  விருத்தப்பாவில் உரை :  ஒரே ஒரு விருத்தப்பா மட்டுமே கிடைத்துள்ளது. ஏனைய பகுதிகள் கிடைக்கவில்லை.

மறைந்துபோன உரைப் பகுதிகள்

·         இன்று கிடைத்துள்ள உரைகளில், சில பகுதிகள் மறைந்து விட்டன.

·         மறைந்துபோன உரைப் பகுதிகளை அறிய மற்றப் பகுதிகள் துணை செய்கின்றன.

·         உரையாசிரியர்கள் முன்னர்க் கூறினாம், பின்னர்க் கூறுவாம் என்று கூறிச் செல்வதிலிருந்து மறைந்துபோன உரைப்பகுதிகளை அறிய முடிகின்றது.

குறுந்தொகை உரை

ரா. இராகவையங்கார்  :  குறுந்தொகை முழுமைக்கும் . . .

ஆனால் 112 பாடலுக்கே இவர் உரை, நூல் வடிவம் பெற்று வெளிவந்துள்ளது.

குறுந்தொகை விளக்கத்தின் முகவுரையில்

டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார்  :   ‘அவ்வுரையில் அப்போது கிடைத்துள்ள ஒரு பகுதியாகிய நூற்றுப் பன்னிரண்டு பாடல்களின் உரை, இப்போது அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக வெளி வருகின்றது’ என்று கூறுகின்றார். 

அகநானூறு   -   பழைய குறிப்புரைகள்

பழைய உரைகள் இரண்டு   :   1.  குறிப்புரை  &  2.  சொல் விளக்கம் : அடிக்குறிப்பு கொண்ட எளியவுரை.

1.  குறிப்புரை, அகநானூற்றின் முதல் 90 பாடல்களுக்கே உள்ளது.

2.  எளியவுரை, தொடர்ச்சியாக இல்லாமல் ஆங்காங்கே சிலச்சில பாடல்களுக்கு மட்டுமே உள்ளன.

புறநானூறு   -   பழையவுரை

உரை   :  266  பாடல்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. 

                           பரிபாடல், பதிற்றுப் பத்து உரைகள்

நூல்கள் சிதைந்து போன பகுதிகளுடன் உரைகளும் மறைந்து போயின 

அடியார்க்கு நல்லார் உரை

சிலப்பதிகாரம் :  உரை   :  ஊர் சூழ்வரி என்ற பகுதி வரையில்தான் உள்ளது.

நடுவே கானல் வரி  :  உரை இல்லை.

நீலகேசி உரை

நீலகேசி  : ஒன்பதாம் பகுதி : வேத வாதச் சருக்கம் :  எட்டுச் செய்யுட்கள் ( 22 - 29 ) உரை : காணப்படவில்லை.

சீவக சிந்தாமணி  -  நச்சினாரக்கினியர் உரை 

தஞ்சைவாணன் கோவை

உரையாசிரியர்  :  சொக்கப்ப நாவலர் 

நச்சினார்க்கினியர் கூறிய உரையானும் அறிக” என்று கூறுகின்றார்.

இன்று அச்சில் வெளி வந்துள்ள சிந்தாமணி உரையில் சொக்கப்ப நாவலர் எடுத்துக் காட்டும் விளக்கம் இல்லை. 

நச்சினார்க்கினியர் உரை

ü  தொல்காப்பியம் முழுமைக்கும்   :  உரை :  நச்சினார்க்கினியர்.

ü  எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் ஆகிய இரு பகுதிகளுக்கும் முழுமையாகக் கிடைத்துள்ளன. பொருளதிகாரத்திற்கு முதல் ஐந்து இயல்களுக்கும், செய்யுளியலுக்கும் மட்டுமே இவரது உரை உள்ளது.

ü  மெய்ப்பாட்டியல், உவம இயல், மரபியல் ஆகிய மூன்று இயல்களுக்கும் உரை கிடைக்கவில்லை.

ü  செய்யுளியலிலும் சில சூத்திரங்களுக்கு இவரது உரை இல்லை.

பேராசிரியர் உரை

§      தொல்காப்பியம்  பொருளதிகாரம் :  முழுமைக்கும் உரை

§      பொருளதிகாரத்தின், பின்நான்கு இயல்கள் :  மெய்ப்பாட்டியல், உவம இயல் செய்யுளில், மரபியல் ஆகிய நான்கிற்கும் மட்டுமே பேராசிரியர் உரை உள்ளது.

§      ஏனைய இயல்களின் உரை மறைந்துவிட்டன.

                                    தொல்காப்பியம்  :  சொல் அதிகாரம்

கல்லாடர் உரை  :  கிளவியாக்கம் முதல் இடையியல் வரை மட்டுமே . . .

பின்னுள்ள பகுதிகளுக்கு இவ்வுரை இல்லை.

தொல்காப்பியம்  :  சொல்  :  பழைய உரை

கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல் :  மூன்றிற்கு மட்டுமே உள்ளது. 

பிற பகுதிகளுக்கு உரை கிடைக்கவில்லை

நன்னூல் மயிலைநாதர் உரை

நன்னூல்  :  எழுத்திகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரு பகுதிகள் தவிர மற்றவையும் மயிலைநாதர் உரையும் மறைந்து போயின.     

ஏட்டுச் சுவடிகளில் இருந்த பல உரைகள் மறைந்துபோனதற்குக் காரணங்கள்

போற்றுவார் இன்மை           வேற்று நாட்டவர் படையெடுப்பு

சமயக் காழ்ப்பு                         கல்லாத மக்களின் பொல்லாத மடமை

வெள்ளம்  &  தீ                           கறையான்கள்

பிற்காலத்தில் எழுந்த சமயப் பகைமை

புறச்சமய நூல்களைப் பயிலக்கூடாது என்று தடுத்தமை.

Ø  போற்றுவார் இன்மையால் சிதைந்துவரும் ஏட்டுச் சுவடிகளைப்பற்றித் தமிழறிஞர் ஒருவர், “நூல்களுள் ஒரு சில, எடுப்பாரும் எழுதுவாரும் படிப்பாரும் பாலிப்பாரும் அற்றுக் காலப் பழமையால் செல்லரித்து, இராமபாணங்களால் துளைப்புண்டு, உட்கி மட்கிப் பெயரளவினவாகி விட்டன.

Ø  சில அடி நுனியற்று முற்றும் கிடைப்பதற்கு அரியனவாய் விட்டன.

இன்னும் சில நூல்கள் ஒப்பு நோக்கிக்கொள்வதற்குக் கூட யாண்டும் அத்தகைய பிரிதொன்று கிடைப்பதற்கரிய நிலையில் அருகிவிட்டன” என்று எழுதியுள்ளார்.*

Ø  செ. சதாசிவம்   :  ‘சேர நாடும் செந்தமிழும்’  நூலில்,

                 திருவனந்தபுரம் அரண்மனையைச் சார்ந்து பழைய ஏட்டுப் பிரதிகள் அடங்கிய  சுவடிச் சாலை ஒன்று உண்டு;  அதில் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் என்னும் மூன்று மொழிகளிலும் அமைந்த ஏடுகள் ஏராளமாக  இருக்கின்றன.

Ø  அவற்றில் தமிழேடுகள் பலவும் கவனிப்பார் இல்லாமையால் அழிந்த போயின” என்று மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றார். 

Ø  மயிலை சீனி வேங்கடசாமி  :  ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்‘  நூலில்

·         திருக்குறளுக்குப் பழங்காலத்தில் தோன்றிய பத்து உரைகளும் தீயில் அகப்பட்டு அழிந்ததை, பின் வருமாறு கூறுகின்றார்;  அதிவீரராம பாண்டியனின் புத்தகசாலையில் இருந்த ஏட்டுச் சுவடிகள், பிற்காலத்தில் கோயில் அதிகாரிகளால் தீயில் இட்டுக் கொளுத்தப்பட்டனவாம்!

·         மதுரைத் தமிழ்ச் சங்கப் புத்தக சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஏட்டுச் சுவடிகள் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்துபோயின;  அதில் அச்சில் வராத சில பல ஏட்டுச் சுவடிகளும் இருந்தனவாம்.

·         திருக்குறள் பத்து உரைகளும் அதில் இருந்ததாகக் கூறப்படுகிறது;  வேறு அருமையான நூல்களும் இருந்தனவாம்!”

Ø  டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் :  என் சரிதம் :  மக்களின் அறியாமையால் தீக்கு இரையான ஏடுகளைக் குறித்து

·         பழங்காலத்தில் பழைய சுவடிகள் சிதிலமான நிலையில் இருந்தால் புதிய பிரதி பண்ணிக் கொண்டு பழம் பிரதிகளை ஆகுதி செய்வது ( நெருப்பில் இடுவது ) வழக்கம்.

·         புதுப் பிரதி இருத்தலினால் பழம்பிரதி போவதில் நஷ்டம் ஒன்றும் இராது. பிற்காலத்து மேதாவிகள் பிரதி செய்வதை மறந்துவிட்டு, சுவடிகளைத் தீக்கு இரையாக்கும் பாதகச் செயலைச் செய்தார்கள். என்ன பேதைமை! இத்தகைய எண்ணத்தால் எவ்வளவு அருமையான சுடிவகள் இந்த உலகிலிருந்து மறைந்தன!” என்று மனம் நொந்து எழுதுகின்றார்

Ø  இலக்கணக் கொத்தின் ஆசிரியர், “நன்னூல் சின்னூல் அகப்பொருள் காரிகை அலங்காரம் முதலிய இலக்கணங்களையும், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்க் கணக்கு, இராமன் கதை, நளன் கதை, அரிச்சந்திரன் கதை முதலான இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணி வாணாள் வீணாள் கழிப்பர்” என்று உரைக்கின்றார்.

Ø  சிவஞான முனிவர் :  சோமேசர் முதுமொழி வெண்பா  :

                                    சேக்கிழார் சிந்தா மணிப்பயிற்சி தீதுஎனவே

                                    தூக்கிஉப தேசித்தார் சோமேசா-நோக்கின்

இவ்வாறு புறக்கணித்துவிட்டதால், சைன பௌத்த சமய இலக்கியங்கள் &  அவற்றின் உரைகள்  போற்றுவாரின்றி மறைந்தன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,