மொழியியல் மாதிரி வினாத்தாள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கற்பது தமிழ்
மாதிரி வினாத்தாள் – 7
மொழியியல்
1. "உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே " என்று தமிழைப் பாராட்டி வியந்தவர் ?
அ. பாரதியார் ஆ. பாரதிதாசன்
இ. கவிமணி ஈ. மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை
2. தமிழிலிருந்து முதலில் பிரிந்த மொழி ?
அ. துளு ஆ. தெலுங்கு இ. கன்னடம் ஈ. மலையாளம்
3. தோடா மொழி பேசும் பழங்குடியினர் உள்ள மாவட்டம் ?
அ. நாகை ஆ. நீலகிரி இ. தஞ்சை ஈ. விழுப்புரம்
4. குழந்தைக்கும் மொழிக்குமான உறவை மிக அதிக அளவில் ஆய்வு செய்தவர்கள் ?
அ. சாம்ஸ்கி & பியாஜே ஆ. சம்ஸ்கி & ஸ்கின்னர்
இ. பியாஜே & ஸ்கின்னர் ஈ. ஸ்கின்னர் & விட்டெளசன்
5. பொருத்துக
1. ஆயா - அரேபியம்
2. இலாகா - போர்த்துக்கீசியம்
3. காகிதம் - பாரசீகம்
4. கல்லா - மராத்தி
அ. 3 1 4 2 ஆ. 2 1 4 3 இ. 4 2 3 1 ஈ. 1 3 4 2
6. பகுதியுடன் இடைநிலை, விகுதிகள் இணைந்து காணப்படும் மொழி?
அ. தனி நிலைமொழி ஆ. ஒட்டு நிலைமொழி
இ. உட்பிணைப்பு நிலைமொழி ஈ. எதுவும் இல்லை
7. பிராமி எழுத்தினைப் புகுத்தியவர்கள்?
அ. ஆரியர்கள் ஆ. சமணர்கள் இ. பெளத்தர்கள் ஈ. இ சுலாமியர்கள்
8. "குகைக் கல்வெட்டுகளின் எழுத்து பிராமி என்றும் மொழி தமிழ்
என்றும் கூறியவர் ?
அ. மு . வ., ஆ. கால்டுவெல் இ. தெ. பொ. மீ., ஈ. உ . வே . சா.,
9. பொருத்துக : மொழியைத் தந்தவர்கள்
1. தென்மொழி - லூதர்
2. இத்தாலி - சிவபெருமான்
3. ஆங்கிலம் - தாந்தே
4. ஜெர்மன் - சாசர்
அ. 2 1 4 3 ஆ. 2 3 4 1 இ. 2 4 1 3 ஈ. 2 4 3 1
10. ‘தொல்காப்பியம் அன்றைய சேர நாட்டுப் பகுதியில் இயற்றப் பட்டிருக்க வேண்டும்' என்று கூறுபவர் ?
அ. மு . இராகவய்யங்கார் ஆ. இரா . இராகவையங்கார்
இ. மு . வரதராசனார் ஈ. உ . வே . சாமிநாத ஐயர்
11. ஒப்பிலக்கண அறிஞர்கள், திராவிட மொழிகளின் மொழி அமைப்பு வேறுபாட்டின் அடிப்படையில் எத்தனை பிரிவுகளாக வகுக்கின்றனர் ?
அ. இரண்டு ஆ. மூன்று இ. நான்கு ஈ. ஐந்து
12. தமிழ் முதலிய மொழிகள் வடமொழியிலிருந்து வேறுபட்டவை என்று முதன்முதலில் கூறியவர் ?
அ. சாம்ஸ்கி ஆ. விட்டெளசன்
இ. வில்லியம் கேரி ஈ. கால்டுவெல்
13. தொண்ணூறு, தொள்ளாயிரம் என்பன முறையே தொம்பதி,
ஓம்பய்நூறு என்று எம்மொழியில் அமைகிறது ?
அ. தோடா ஆ. கன்னடம் இ. மலையாளம் ஈ. குடகு
14. பொருத்துக
1. கோலமி - ஒரிசா
2. கடபா - கருநாடகம்
3. பிராகுயி - மத்திய பிரதேசம்
4. துளு - பாகிஸ்தான்
அ. 3 1 4 2 ஆ. 2 1 4 3 இ. 4 2 3 1 ஈ. 1 3 4 2
15. மொழியியல் ஆய்வுக்காக 19 மொழிகளைக் கொண்டு ஆய்வு
செய்தவர்கள் ?
அ. எமனோ , பர்ரோ ஆ. எமனோ & சாம்ஸ்கி
இ. எமனோ மட்டும் ஈ. சாம்ஸ்கி மட்டும்
16. அங்காப்பு உயிர்கள் எனப்படுவன ?
அ. அ & இ ஆ. இ & ஈ இ. உ & ஊ ஈ. அ & ஆ
17. க் என்ற ஒலியனின் மாற்றொலிகள் எவை ?
அ. c & ch ஆ. k, g & h இ. b, p ஈ. d, dh, t
18. மொழியில் பொருள் உடையதாக அமைந்த மிகச் சிறிய சொற்கூற்றின் அமைப்பு,வகை & இயங்குமுறை குறித்த ஆய்வுமுறை ?
அ. ஒலியனியல் ஆ. உருபனியல் இ. தொடரியல் ஈ. மொழியியல்
19. சொல்லை மேலும் பிரிக்க இடம் தராத சொல் ?
அ. வேர்ச்சொல் ஆ. அடிச்சொல்
இ.ஒட்டு உருபன்கள் ஈ. எதுவும் இல்லை
20. ஆடினான் என்பதில் உள்ள இடைநிலை ?
அ. ஆடு ஆ. ன் இ. இன் ஈ. ஆன்
21. தமிழ்மொழியின் சில பண்புகளைக் கருத்தில் கொண்டு பண்டைத்தமிழ், இடைக்காலத் தமிழ், தற்காலத் தமிழ் ஆகியவற்றை முறையே சங்கத் தமிழ், தெய்வத் தமிழ், வளரும் தமிழ் என்று வழங்குவது மிகப் பொருத்தமாகும் என்று கூறுபவர்?
அ. மு. வரதராசனார் ஆ. அகத்தியலிங்கம்
இ. தெ. பொ. மீ., ஈ. திரு. வி. க.,
22. பல்லவர் காலத்தில் சொல்லின் இறுதியில் வாரா உயிர் எழுத்துகள்?
அ. அ & இ ஆ. எ & ஒ இ. அ & எ ஈ. இ & ஒ
23. னகரம் மற்றும் மகரம் ஆகியவற்றின் மாற்றொலியன்கள் முறையே
அ. நகரம் & ஙகரம் ஆ. ஙகரம் & மகரம்
இ. தகரம் & பகரம் ஈ. ணகரம் & ஙகரம்
24. தமிழன் என்ற சொல்லாட்சி முதன்முதலில் யாருடைய தேவாரத்தில் காணப்படுகிறது?
அ. சம்பந்தர் ஆ. நாவுக்கரசர்
இ. சுந்தரர் ஈ. காரைக்காலம்மையார்
25. தொல்காப்பியர் கூறும் வட்டாரக் கிளைமொழிகளின் எண்ணிக்கை?
அ. ஆறு ஆ. எட்டு இ. பத்து ஈ. பன்னிரண்டு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக