சிற்றிலக்கியம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சிற்றிலக்கியங்கள்
மாதிரி வினாத்தாள்
21. 96 என்று கூறப்பெறும் சிற்றிலக்கிய வகைகள்?
1. அகப்பொருட்கோவை 2. அங்கமாலை
3. அட்டமங்கலம் 4. அரசன்விருத்தம்
5. அலங்காரபஞ்சகம் 6. அனுராகமாலை
7. ஆற்றுப்படை 8. இணைமணி மாலை
9. இயன்மொழி
வாழ்த்து 10.
இரட்டைமணிமாலை
11. இருபா இருபது 12. உலா
13. பவனிக் காதல் 14. உலாமடல்
15. உழத்திப்பாட்டு 16. உழிஞைமாலை
17. உற்பவமாலை 18. ஊசல்
19. ஊர் நேரிசை 20. ஊர்வெண்பா
21. ஊரின்னிசை 22. எண்செய்யுள்
23. ஐந்திணைச் செய்யுள், 24. ஒருபா ஒருபது
25. ஒலியந்தாதி 26. கடைநிலை
27. கண்படைநிலை 28. கலம்பகம்
29. காஞ்சிமாலை 30. காப்புமாலை
31. குழமகன் 32. குறத்திப்பாட்டு
33. கேசாதிபாதம் 34. கைக்கிளை
35. கையறுநிலை 36. சதகம்
37. சாதகம் 38. சிறுகாப்பியம்
39. சின்னப்பூ 40. செருக்களவஞ்சி
41. செவியறிவுறூஉ 42. தசாங்கத்தயல்
43. தசாங்கப்பத்து 44. தண்டகமாலை
45. தாண்டகம் 46. தாரகைமாலை
47. தானைமாலை 48. எழுகூற்றிருக்கை
49. தும்பைமாலை 50. துயிலெடை நிலை
51. தூது 52. தொகைநிலைச்செய்யுள்
53. நயனப்பத்து 54. நவமணிமாலை
55. நாமமாலை 56. நாழிகைவெண்பா
57. நான்மணிமாலை 58. நானாற்பது
59. நூற்றந்தாதி 60. நொச்சிமாலை
61. பதிகம் 62. பதிற்றந்தாதி
63. பரணி 64. பல்சந்தமாலை
65. பன்மணிமாலை 66. பாதாதிகேசம்
67. பிள்ளைக்கவி 68. புகழ்ச்சி மாலை
69. புறநிலை 70. புறநிலைவாழ்த்து
71. பெயர் நேரிசை 72. பெயரின்னிசை
73. பெருங்காப்பியம் 74. பெருமகிழ்ச்சிமாலை
75. பெருமங்கலம் 76. போர்க்கெழுவஞ்சி
77. மங்கலவள்ளை 78. மணிமாலை
79. முதுகாஞ்சி 80. மும்மணிக்கோவை
81. மும்மணிமாலை 82. முலைப்பத்து
83. மெய்க்கீர்த்திமாலை 84. வசந்தமாலை
85. வரலாற்று வஞ்சி 86. வருக்கக் கோவை
87. வருக்கமாலை 88. வளமடல்
89. வாகைமாலை 90. வாதோரணமஞ்சரி
91. வாயுறைவாழ்த்து 92. விருத்தவிலக்கணம்
93. விளக்குநிலை 94. வீரவெட்சிமாலை
95. வெட்சிக்கரந்தைமஞ்சரி 96. வேனில் மாலை
மற்றும் வண்ணம்
22. இறுதியாகக் கூறப்பெற்ற வண்ணம் குறித்து?
இதுவும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று
இதன் இரு வகைகள்
: பொருள்நோக்கு வண்ணம் & சொல்நோக்கு வண்ணம்
பாடல் பகுதியில் வினாவோ,
வினவுவது போன்ற
செய்தியோ கூறப்பட்டிருக்கும்.
இரண்டொரு சொல்லில் விடையும் சொல்லப்பட்டிருக்கும்.
சான்று : இரட்டைப்புலவர் பாடிய ஏகாம்பரநாதர் வண்ணம்
24. சொல்நோக்கு வண்ணம் என்பது?
இசைப்பாடலின் இடையே, அடியின் இறுதியில் தனிச்சொல்லோ,
தனிச்சொல் தொடரோ
அமைந்திருக்கும்.
சான்று : அருணகிரிநாதர்
& வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாடல்கள்
பிரபந்த
தீபிகை :
பதினாறை
யாறிற் பெருக்கிப் பிரபந்தாதி
பலவகை
எடுத்துரைக்கின்"
குடுமியான்மலை சுப்பிரமணிய பாரதியாரின் பொருட்டொகை நிகண்டு
பிரபந்தம்
தொண்ணூற்றாறாம்
சாதகம்
பிள்ளைக் கவியே ...."
பொருள் அடிப்படையில்
: அகப்பொருள்,
புறப்பொருள்,
துதிப்பொருள்
எண்ணிக்கை அடிப்படையில்
: பத்து,
பதிகம்,
சதகம்,
பஞ்சகம் ..
யாப்பு : அந்தாதி, ஊர் வெண்பா, ஊரின்னிசை, ஊர் நேரிசை ..
பொருண்மை : தூது, உலா, பிள்ளைத்தமிழ் முதலியன
சொல் முடிபு : மாலை,
வாழ்த்து,
செய்யுள்,
நிலை முதலியன
விளையாட்டு : ஊசல், அம்மானை முதலியன
நாட்டுப் புற இலக்கிய வகை
: பள்ளு,
குறவஞ்சி,
குறம்
கதைப் பாடல் : அல்லி அரசாணி மாலை, பெரிய எழுத்து புனைந்திரன் தூது
பெண்கள் தொடர்பானவை : புகழ்ச்சி மாலை,
தாரகை மாலை
இசை அடிப்படையில்
: தெம்மாங்கு,
கும்மி,
சிந்து,
கீர்த்தனை
இசை நாடகம் :
பள்ளு, குறவஞ்சி
நீதி : தண்டலையார்
சதகம்
பக்தி : மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
தத்துவம் : நெஞ்சுவிடு தூது
சமுதாயம் : பழையதுவிடு தூது,
செருப்புவிடு தூது
தொழில் அடிப்படையில்
: ஓடப்பாட்டு,
வண்டிக்காரன் பாட்டு
செயல்கள் அடிப்படையில்
: பாட்டுடைத் தலைவனைத்
தூக்கத்திலிருந்து எழ வேண்டுதல் : பள்ளியெழுச்சி
பெண்கள் ஆடும் ஊசல் விளையாட்டில் பாட்டுடைத் தலைவனைப்
புகழ்ந்து பாடுதல் : ஊசல்
புகழ்தல் : உடல் உறுப்புகளைப் புகழுதல்
பொது : அங்க மாலை. சிறப்பு
: கேசாதிபாதம் & பாதாதிகேசம்.
அரசனின் குடை, கொடி, முரசு, தேர்,யானை, படை, குதிரை, செங்கோல், நாடு, நகரம் முதலிய பத்து உறுப்புகளைப் பாடும் அடிப்படை : தசாங்கம், தசாங்கப்பத்து, தசாங்கத்தயல் சின்னப்பூ
& நயனப் பத்து
27. சிற்றிலக்கியத்தின் தோற்றத்திற்கு உரிய காரணிகள் யாவை?
- இலக்கண இலக்கிய மூலங்களை அடியாகக் கொண்டு
- அரசியல் சூழல்கள்
- சமுதாய மாற்றங்கள்
/ அரசனைப் பாடும் நிலை மாறி இறைவனைப்
பாடும் நிலை : துயிலெடை நிலை .. பள்ளியெழுச்சி
- முந்தைய
இலக்கியங்களில் உறுப்பாக அமைவனவற்றைத் தனி இலக்கிய வகையாக :
காப்பு, காப்பு மாலை
- மரபுவழியாக வந்த இலக்கியங்களை இணைத்துப் புதிய இலக்கியம் படைத்தல் :
மறக் கள வழி, களவேள்வி -
பரணி
- சங்க அகப்பொருள் துறைகளைத் தனி இலக்கியமாகப்
படைத்தல் : வேனில் மாலை
- அகப்பொருள் துறைகளைத் தொடர்ச்சியாகப் பாடும்
முயற்சியின் விளைவு : கோவை
- புறப்
பொருண்மையில் தனி இலக்கியம் படைத்தல்
: தானைமாலை
- அகப்
பொருண்மையில் தனி இலக்கியம் படைத்தல்
: எண் செய்யுள்
- சிற்சில துறைகளை இணைத்து :
கனவு, உலா :
அனுராகமாலை
- சமய
உணர்வு : பிள்ளைத்தமிழ்
- தத்தம் சமயங்களிலும் : திருவரங்கக் கலம்பகம்,
திருவருணைக்
கலம்பகம்
- தல
இறைவனை : தலக் கோவை
- இறைவனின் அவதாரச் சிறப்பு :
உற்பவ மாலை
- இலக்கியத்தின் உள்ளடக்கம் : புறப்போர் அகப்போராக ...
இரணியவதைப் பரணி
- கட்டுப்பாட்டை விரும்பாமை : இரண்டு வகை
- பாட்டுடைத் தலைவனின் இயற்பெயருக்கு ஏற்ப எதுகை
அமைத்து பாடுதல் : வளமடல்
- இக்கட்டுப்பாட்டை விரும்பாத நிலை : உலாமடல்
- ஓர் இலக்கிய வகைக்குப் போட்டியாக :
இரு வகை
- ஆடவரைப் புகழ்ந்து
பாடுதல் : நாம மாலை
- பெண்டிரைப் புகழ்ந்து பாடுதல் : புகழ்ச்சி மாலை
- புலமை விளையாட்டு
- மரபுவழி, நாட்டுப்புறம் & பல்வேறு பாவினங்கள் : கலம்பகம்
- மடக்கு, திரிபு, யமகம் முதலான சொல்லணிகள் : வருக்கக் கோவை
- வாழ்வியல் நிகழ்ச்சிகள் : பள்ள , உழத்திப் பாட்டு
- மகளிர்
விளையாட்டுகள் : ஊசல்,
அம்மானை
- சமுதாய வழக்குகள் :
சாதகம், பல்லாண்டு, குறத்திப்பாட்டு
- உறுப்புகளை : நயனப் பத்து,
பயோதரப் பத்து,
அங்கமாலை
- பாதாதிகேசம், கேசாதிபாதம்
- குறிப்பிட்ட எண்ணிக்கையில் : அட்டமங்கலம், நவமணி மாலை, தாரகை மாலை
- வேறுவேறு பாக்களை இணைத்து : இரட்டை மணி
மாலை, இணை மணி மாலை, நான்மணி மாலை
- பல்வேறு
சந்தங்கள் : பல்சந்த மாலை
- பல்வேறு
யாப்புகள் : பன்மணி மாலை
- ஒரே வகை யாப்பு
& நூறு பாடல்கள்
: நூற்றந்தாதி
- ஒரே
பொருண்மை & யாப்பினால் வேறுபடுத்துதல் :
தசாங்கம் - தசாங்கத்தயல்
- ஒரே
பொருண்மையில் பல்வேறு இலக்கிய வகைகளாக
: தசாங்கம் , தசாங்கப் பத்து, தசாங்கத்தயல், சின்னப்பூ
- பல்வேறு பாவகைகளை
அமைத்து : அலங்காரப் பஞ்சகம்
- குறிப்பிட்ட எண்ணிக்கையில் பாடுதல் : நாற்பது, இருபது, பத்து 28. சிற்றிலக்கியத்தின் சிறப்புகள் யாவை?
- ü சங்க காலம் முதலே தோற்றம் பெற்ற பெருமைக்கு உரியது.
ü பல்வேறு இலக்கிய வகைகளை உள்ளடக்கியது.
ü பல சமயத்தவர்களும் போற்றுதற்கு உரியது
ü இலக்கியச் சுவையில் பேரிலக்கியத்திற்கு ஈடுகொடுக்கும்
இயல்பு உடையது
ü அரசியல், சமயம், பொருளாதாரம், சமுதாயம் என்று பல்வேறு துறைகளிலும் பாடப்படுவது
ü இறைவன், மன்னன் முதல் சாதாரண மக்கள் வரை பாட்டுடைத் தலைவனாக
அமைதற்கு ஏற்றது
ü இந்திய மொழிகள் பலவற்றில் காணக் கிடைப்பது
ü சிறந்த மக்கள் தொடர்புச் சாதனமாகவும் திகழ்வது
ü நாட்டுப்புறக் கூறுகளை உள்ளடக்கிப் பாமர மக்களையும் கவருவது
ü பண்பாட்டைப் பறை சாற்றுவது
ü சமுதாய அரசியல் நிலைகளைப் புலப்படுத்துவது
ü பிறநாட்டு அறிஞர்களாலும் இயற்றப்படுவது
ü இன்று வரையிலும் தோன்றிக் கொண்டிருக்கும் இயல்பை உடையது
போன்ற சிறப்புகள் உடையது
29. யாருடைய ஆட்சிக்காலம் சிற்றிலக்கிய காலம் என்று
அழைக்கப்படுகிறது?
நாயக்கர்கள் ஆட்சிக் காலம்
/ கி.பி. 1350 - கி.பி. 1750
30. சிற்றிலக்கிய வேந்தர் என்று பாராட்டப்படுபவர்?
மா. திருநாவுக்கரசு அவர்கள் /
திருமழபாடி : அரியலூர் மா.,
31. மா. திருநாவுக்கரசு இயற்றிய பிற நூல்கள்?
v பண்ணாராய்ச்சி வித்தகர் ப. சுந்தரேசனார்
அன்னம்விடுதுதூது / 1991
v முத்துக்குமார் இலக்கண வினா - விடை / 1991
v திருமகள் மலர்விடு தூது
/ 1994
v நல்லாசிரியர் இரத்தினசபாபதியார் சங்குவிடு தூது / 1997
v மருத்துவ வள்ளல் விசுவநாதம் கொண்டல்விடு தூது / 1998
v திருப்பூசை செல்வர் மூக்கப்பிள்ளை சந்தனவிடு தூது / 2003
v பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத்தமிழ் / 2003
v அருள்மிகு அழகம்மை பிள்ளைத்தமிழ் / 2004
v அருள்மிகு பழநியப்பர் பொன்விடு தூது
v பெருந்தலைவர் காமராசர் மயில்விடு தூது
v நேரு மாமா பாடல்கள்
v பழங்கதைகளும் புதிய பாடல்களும்
v கப்பலோட்டிய தமிழன் பிள்ளைத் தமிழ் / அச்சில்
32. தமிழ் வேந்தர் என்று அழைக்கப்படுபவர் யார்?
திருநாவுக்கரசர் / திருவாமூர், கடலூர் மா., / அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்
33. இலக்கிய வேந்தர் என்று அழைக்கப்படுபவர்?
பாவலர் மணிவேலன் / பெ. இரத்தினவேலு / அரூர் : தருமபுரி மா.,
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக