சிற்றிலக்கியங்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கற்பது
தமிழ்
TNPSC, TET 1 & 2,
UG TRB, PG TRB,
College TRB, SET, SLET
& UGC NET Paper 2 Tamil
சிற்றிலக்கியங்கள்
மாதிரி
வினாத்தாள்
1. தத்துவக் கருத்தை உணர்த்தும்
சிற்றிலக்கியத்துக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
மோக வதைப் பரணி
2. உடல் உறுப்புகளைப் புகழும் நோக்கில்
இயற்றப்பெற்ற சிற்றிலக்கிய வகைகள் இரண்டினைக் குறிப்பிடுக.
பாதாதி கேசம் & அங்க மாலை.
3. இசைநாடகச் சிற்றிலக்கிய வகைகளுக்கு இரண்டு
சான்றுகள் தருக.
பள்ளு & குறவஞ்சி
4. பள்ளி எழுச்சி என்ற இலக்கிய வகை எத்
துறையிலிருந்து தோன்றியது?
துயிலெடை நிலை
5. ஒரே பொருண்மையில் பாடப்பட்ட வெவ்வேறு இலக்கிய
வகைகள் யாவை?
தசாங்கம்,
தசாங்கப்பத்து,
தசாங்கத்தயல்,
சின்னப்பூ.
6. குறிப்பிட்ட பாடல் எண்ணிக்கையில் இலக்கியம்
படைக்க வேண்டும் என்ற நோக்கில் எழுந்த இரு சிற்றிலக்கிய வகைகள்
பதிகம் & சதகம்
7. சிற்றிலக்கியம் என்றால் என்ன?
· அளவில் சுருங்கியதாக அமைவது.
· அகப்பொருள் அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமைவது.
·
பாடப்பெறும்
கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே . . .
·
அறம்,
பொருள்,
இன்பம்,
வீடு எனும் நான்கு
உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது.
8. பிரபந்தம் என்றால் என்ன?
§
சிற்றிலக்கியங்கள்
வடமொழியில் பிரபந்தங்கள் . . .
§ பிரபந்தம் : "கட்டப்பட்டது" எனப் பொருள்படும்.
§
இலக்கிய
வகைகள் பலவற்றைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயர்
9. பிரபந்தம் குறித்து அறிஞர் மு .
அருணாச்சலம் அவர்களின் கருத்து?
§
சிற்றிலக்கியம்
என்னும் பெயர் 19 ஆம்
நூ., உருவானது.
§
அதற்கு
முன்பிருந்த பெயர் ’பிரபந்தம் என்ற சொல் வடமொழி. செம்மையாக்கப்பட்டது என்பது இதன்
பொருள்.
§
இக்காலத்தில்
இதைச் சிற்றிலக்கியம் என்று சொல்கிறோம். காப்பியங்களைப் பேரிலக்கியங்கள் என்று
சொல்லி
§ பிரபந்தத்தைச் சிற்றிலக்கியம் என்று சொல்கின்ற மரபு புதிதாகப் படைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
10. சிற்றிலக்கியங்கள் குறித்துத் தமிழறிஞர்கள் கூறுவன?
ü
சிற்றிலக்கியங்கள்
: தமிழில் சங்க காலத்திலேயே தோன்றி படிப்படியாக வளர்ந்து ஐந்தாம் நூ., க்குப் பின் தனி வடிவமாக இலக்கணம்
அமைக்கப்பட்ட ஓர் இலக்கிய வகை.
ü
வடிவ
அடிப்படையில் அடையாளம் காணப்படும் பலவகையான நூல்களின் தொகுப்புப் பெயரே
சிற்றிலக்கியம்.
ü
அந்த
இலக்கணம் முழுமையானதோ, திட்டவட்டமானதோ அல்ல. காலந்தோறும் அது வளர்ந்து
மாற்றமடைகிறது.
ü பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள், புராணங்கள் ஆகியவை அல்லாத சிறியவகை நூல்களைக் குறிக்கின்றன.
11. பத்துப்பாட்டு அடிப்படையில் கூறப்படும் சிற்றிலக்கியம் குறித்த கருத்துகள்?
§
பத்துப்பாட்டில்
10 நூல்கள் உள்ளன.
§
அவற்றுள்
5 நூல்கள் ஆற்றுப்படை என்ற சிற்றிலக்கிய வகையைச்
§
ஆற்றுப்படை
நூல்கள் சங்க காலத்தின் இறுதியில் தோன்றியவை. இவை தொடர்செய்யுள்கள் & காவியம் என்பதன் தொடக்க கால
வடிவங்கள்.
§
இவற்றுக்கு
நிலையான ஒரு வடிவம் உள்ளது.
§
இதுவே
சிற்றிலக்கியம் என்று வளர்ந்தது.
திருமுருகாற்றுப்படை : நக்கீரர்
பொருநர் ஆற்றுப்படை : முடத்தாமக் கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை : நத்தத்தனார்
பெரும்பாணாற்றுப்படை :கடியலூர்
உருத்திரங் கண்ணனார்
கூத்தராற்றுப்படை : இரணிய முட்டத்துப்
பெருங்குன்றூர்
பெருங்கௌசிகனார்
12. பதினெண்கீழ்க்கணக்கு அடிப்படையில் கூறப்படும் 'சிற்றிலக்கியம்
' குறித்த கருத்துகள்?
§
காலம் :
சங்கம் மருவிய காலத்து நூல்களின் தொகுப்பு
§
நானூறு,
நாற்பது என நூல்களை
தொகுப்பது சமணர்களின் வழிமுறை.
§
கருத்து & எண்ணிக்கை அடிப்படையில்,
இனியவை நாற்பது : மதுரைத் தமிழாசிரியர் மகனார்
பூதஞ் சேந்தனார்
இன்னா நாற்பது : கபிலர்
கார் நாற்பது : கண்ணங் கூத்தனார்
களவழி நாற்பது : பொய்கையார்
13. பக்தி இயக்கக் காலத்தில் காணப்படும் சிற்றிலக்கியங்கள்?
நாயன்மார்கள்
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் : காரைக்கால் அம்மையார்
திருத்தாண்டகம் : திருநாவுக்கரசர்
திருத்தசாங்கம் : மாணிக்கவாசகர்
திருக்கோவையார் : மாணிக்கவாசகர்
ஆழ்வார்கள்
திருக்குறுந்தாண்டகம் : திருமங்கை ஆழ்வார்
திருநெடுந்தாண்டகம் : திருமங்கை ஆழ்வார்
14. பொதுவாகச் சிற்றிலக்கியங்களை வகைப்படுத்தி இலக்கணம் வகுக்கும் நூல்கள்
என்னவென்று அழைக்கப்படுகின்றன?
பாட்டியல் நூல்கள்
என்று அழைக்கப்படுகின்றன
15. பாட்டியல் நூல்கள் முதலில் எந்தச் சிற்றிலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்தன?
பிள்ளைத்தமிழ்
16. தெளிவான இலக்கண வடிவமைப்பு மற்றும் பொதுவான இலக்கண வரையறை கொண்டவை என்று
கூறப்படும் சிற்றிலக்கியங்கள்?
தெளிவான இலக்கண வடிவமைப்பு
: பிள்ளைத்தமிழ் & கலம்பகம்
பொதுவான இலக்கண வரையறை
: உலா,
தூது,
மாலை,
அந்தாதி
மற்றும் பிற . . . .
17. சிற்றிலக்கியங்கள் குறித்து உ .
வே . சா . காட்டும் சான்று?
ü "பிரபந்தங்கள் 96 என்பது பிற்காலத்துக் கணக்கு" என்று படிக்காசுப்
புலவர் ’தொண்ணூற்றாறு கோல பிரபந்தங்கள் கொண்ட பிரான்’ என்னும் உலா நூலில் குறிப்பிடுகிறார்.
ü
படிக்காசுப்புலவர்
தன்னை ஆதரித்த சிவந்தெழுந்த பல்லவராயன் என்னும் சிற்றரசன் மீது பாடிய உலா நூல். / 1686
ü இக்கருத்தை, உ.வே.சாமிநாதய்யர் சுட்டிக் காட்டுகிறார்.
18. சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை கூறும் நூல்கள்?
பிரபந்தத் திரட்டு பிரபந்த
தீபம், பிரபந்த தீபிகை, பிரபந்த மரபியல் என்னும் இலக்கண
நூல்களில் பலவகையான 200க்கு மேற்பட்ட சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம்
கூறப்பட்டுள்ளது.
19. சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை குறித்த கருத்து?
குறைந்தபட்சம் 186
&
417 அதிகப்பட்சம் என்று . . .
20. பிரபந்த மரபியல் சிற்றிலக்கியங்கள் 96
என்னும் எண்ணிக்கையைக் குறிப்பிடும் தொடர்?
"பிள்ளைக் கவி முதல் புராணம் ஈறாக
தொண்ணூற்றாறெனும் தொகையதான
முற்பகரியல்பு முன்னுற கிளர்க்கும்"
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக