தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

புலவர்களின் அருந்தமிழ்ப்பணிகள்



        புலவர்களின் அருந்தமிழ்ப்பணிகள் 


                           நமது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விதமாகப் புலவர்கள் பாடிய நூல்கள் மற்றும் அவர்களைப் பற்றிய தகவல்களை இங்கே படித்து இன்புறலாம்,  வாருங்கள்!!! 

1.  அதியமானைப் புகழ்ந்து ஒளவையார் பாடிய பாடல்கள் : 23.

2. சங்கப்பாடல்களில் ஒளவையார் பாடியவை : 59.

3.  'எவ்வழி நல்லை ஆடவர் 
      அவ்வழி வாழிய நிலனே'  என்று பாடியவர் : ஒளவையார்.

4.  அதியமானிடம் ஒளவையாரிடம் பெற்றது 'நெல்லிக்கனி'  ஆகும்.

5.  ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதிநூல்களை இயற்றியவர் : சங்க கால ஒளவையாருக்குப் பிற்காலத்தவரான மூன்றாவது ஒளவையார் ஆவார்.

6.  ஞானக்குறள், வேழமுகம், விநாயகர் அகவல் போன்றவற்றை இயற்றியவர் இயற்றியவர் : நான்காம் ஒளவையார்.

7.  ஒளவையார் பதிகம் என்னும் நூலை இயற்றியவர் : தவத்திரு தண்டபாணிகள் ஆவார்.

8.  ஒட்டக்கூத்தர் அவைப்புலவர்விக்கிரம சோழனின் அவைப்புலவர்.

9.  ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த பெருங்கவிஞன் : கம்பன்.

10.  கவிராட்சதன், கவிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டவர் : ஒட்டக்கூத்தர்.  /  ஊர்:  திருவெறும்பூர்.

11.  'தேடற்கவிச்  சக்கரவர்த்தி'என்று பாராட்டப்படுபவர் : செயங்கொண்டார்.  /  பாராட்டியவர் : ஒட்டக்கூத்தர்.

12.  ஒட்டக்கூத்தர் எழுதிய நூல்கள் சில: மூவருலா, தக்கயாகப் பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், அரும்பைத் தொள்ளாயிரம்.

13.  முதன்முதலில் மன்னனின் பெயரால் பிள்ளைத்தமிழ் பாடிய புலவர் : ஒட்டக்கூத்தர்.

14.  புகழேந்திப் புலவர் பிறந்த ஊர் : போன் விளைந்த களத்தூர்  /  இவரை ஆதரித்தவர் : சந்திரன் சுவர்க்கி என்ற மன்னன்.

15.  நளவெண்பாவை இயற்றியவர் : புகழேந்திப் புலவர்.

16.  புகழேந்திப் புலவர் பாடிய நூல்கள் சில : பவளக்கொடி மாலை, அள்ளியராசானி மாலை,  வனவாசம், புலேந்திரன் தூது, ஏணியேற்றம், செஞ்சிக்கலம்பகம் ஆகிய நூல்கள்.

17.  'ஆசு கவியாலகில வுலகெங்கும் வீசுபுகழ்....'  எனப்படுபவர் : காளமேகம்.

18.  காளமேகப்புலவரின் இயற்பெயர் : வரதர்.  /  இவருக்குப் பரிசளித்த வள்ளல் : ஆமூர் முதலி.

19. திருவானைக்கா உலா பாடியவர் : காளமேகப் புலவர்.

20.  இரட்டையர்களின் பெயர் : இளஞ்சூரியர், முதுசூரியர் ஆவர்.

21.  இரட்டையர்கள் பாடிய நூல்கள் சில : சுயம்பு உலா, மூவரம்மானை, ஏகாம்பர நாதருலா ஆகிய நூல்கள்.

22.  இரட்டையர்கள் பாடிய கலம்பக நூல்கள் : கச்சிக்கலம்பகம், தில்லைக் கலம்பகம், திருவாமாத்தூர்க் 
கலம்பகம் ஆகியன.

23.  சிவப்பிரகாசர் சார்ந்த சமயம் : வீரசைவ மதம்.

24. சிவப்பிரகாசர் பாடிய நூல்கள் சில : பிரபுலிங்க லீலை, திருக்கூவப் புராணம், சீகாளத்தி புராணம், நெஞ்சு விடு தூது, நன்னெறி ஆகியன.

25.  மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் பாடியவர் : குமரகுருபரர்.

26.  'தொடுக்கும் கடவுட் பழம்பாடல்'  பாடியவர் : குமரகுருபரர்.

27.  குமரகுருபரர் பாடிய நூல்கள் சில : முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், கயிலைக் கலம்பகம், காசிக்கலம்பகம் ஆகியன.

28.  குமரகுருபரர் பாடிய கோவைகள் : சிதம்பர மும்மணிக்கோவை, பண்டார மும்மணிக்கோவை.

29.  குமரகுருபரர் பாடிய மாலைகள் : திருவாரூர் நான்மணி மாலை, சகலகலாவல்லி மாலை ஆகியன.

30.  திருப்புகழைப் பாடியவர் : அருணகிரிநாதர்.

                                                             


                                  இதன் தொடர்ச்சி  அடுத்த பதிவில்...

                                         


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,