புலவர்களின் அருந்தமிழ்ப்பணிகள்
நமது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விதமாகப் புலவர்கள் பாடிய நூல்கள் மற்றும் அவர்களைப் பற்றிய தகவல்களை இங்கே படித்து இன்புறலாம், வாருங்கள்!!!
1. அதியமானைப் புகழ்ந்து ஒளவையார் பாடிய பாடல்கள் : 23.
2. சங்கப்பாடல்களில் ஒளவையார் பாடியவை : 59.
3. 'எவ்வழி நல்லை ஆடவர்
அவ்வழி வாழிய நிலனே' என்று பாடியவர் : ஒளவையார்.
4. அதியமானிடம் ஒளவையாரிடம் பெற்றது 'நெல்லிக்கனி' ஆகும்.
5. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதிநூல்களை இயற்றியவர் : சங்க கால ஒளவையாருக்குப் பிற்காலத்தவரான மூன்றாவது ஒளவையார் ஆவார்.
6. ஞானக்குறள், வேழமுகம், விநாயகர் அகவல் போன்றவற்றை இயற்றியவர் இயற்றியவர் : நான்காம் ஒளவையார்.
7. ஒளவையார் பதிகம் என்னும் நூலை இயற்றியவர் : தவத்திரு தண்டபாணிகள் ஆவார்.
8. ஒட்டக்கூத்தர் அவைப்புலவர்விக்கிரம சோழனின் அவைப்புலவர்.
9. ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த பெருங்கவிஞன் : கம்பன்.
10. கவிராட்சதன், கவிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டவர் : ஒட்டக்கூத்தர். / ஊர்: திருவெறும்பூர்.
11. 'தேடற்கவிச் சக்கரவர்த்தி'என்று பாராட்டப்படுபவர் : செயங்கொண்டார். / பாராட்டியவர் : ஒட்டக்கூத்தர்.
12. ஒட்டக்கூத்தர் எழுதிய நூல்கள் சில: மூவருலா, தக்கயாகப் பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், அரும்பைத் தொள்ளாயிரம்.
13. முதன்முதலில் மன்னனின் பெயரால் பிள்ளைத்தமிழ் பாடிய புலவர் : ஒட்டக்கூத்தர்.
14. புகழேந்திப் புலவர் பிறந்த ஊர் : போன் விளைந்த களத்தூர் / இவரை ஆதரித்தவர் : சந்திரன் சுவர்க்கி என்ற மன்னன்.
15. நளவெண்பாவை இயற்றியவர் : புகழேந்திப் புலவர்.
16. புகழேந்திப் புலவர் பாடிய நூல்கள் சில : பவளக்கொடி மாலை, அள்ளியராசானி மாலை, வனவாசம், புலேந்திரன் தூது, ஏணியேற்றம், செஞ்சிக்கலம்பகம் ஆகிய நூல்கள்.
17. 'ஆசு கவியாலகில வுலகெங்கும் வீசுபுகழ்....' எனப்படுபவர் : காளமேகம்.
18. காளமேகப்புலவரின் இயற்பெயர் : வரதர். / இவருக்குப் பரிசளித்த வள்ளல் : ஆமூர் முதலி.
19. திருவானைக்கா உலா பாடியவர் : காளமேகப் புலவர்.
20. இரட்டையர்களின் பெயர் : இளஞ்சூரியர், முதுசூரியர் ஆவர்.
21. இரட்டையர்கள் பாடிய நூல்கள் சில : சுயம்பு உலா, மூவரம்மானை, ஏகாம்பர நாதருலா ஆகிய நூல்கள்.
22. இரட்டையர்கள் பாடிய கலம்பக நூல்கள் : கச்சிக்கலம்பகம், தில்லைக் கலம்பகம், திருவாமாத்தூர்க்
கலம்பகம் ஆகியன.
23. சிவப்பிரகாசர் சார்ந்த சமயம் : வீரசைவ மதம்.
24. சிவப்பிரகாசர் பாடிய நூல்கள் சில : பிரபுலிங்க லீலை, திருக்கூவப் புராணம், சீகாளத்தி புராணம், நெஞ்சு விடு தூது, நன்னெறி ஆகியன.
25. மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் பாடியவர் : குமரகுருபரர்.
26. 'தொடுக்கும் கடவுட் பழம்பாடல்' பாடியவர் : குமரகுருபரர்.
27. குமரகுருபரர் பாடிய நூல்கள் சில : முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், கயிலைக் கலம்பகம், காசிக்கலம்பகம் ஆகியன.
28. குமரகுருபரர் பாடிய கோவைகள் : சிதம்பர மும்மணிக்கோவை, பண்டார மும்மணிக்கோவை.
29. குமரகுருபரர் பாடிய மாலைகள் : திருவாரூர் நான்மணி மாலை, சகலகலாவல்லி மாலை ஆகியன.
30. திருப்புகழைப் பாடியவர் : அருணகிரிநாதர்.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்...
Arummai
பதிலளிநீக்குநன்றி மா
பதிலளிநீக்கு