புலவர்களின் அருந்தமிழ்ப்பணிகள் தொடர்ச்சி
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
புலவர்களின் அருந்தமிழ்ப்பணிகள்
தொடர்ச்சி
31. கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்பு, மேல்விருத்தம் ஆகிய நூல்களை இயற்றியவர் : அருணகிரிநாதர்.
32. தாயுமானவ அடிகளின் ஊர் : திருமறைக்காடு / கண்ட சைவம் : சித்தாந்த சைவம் / இவரது ஆசிரியர் : திருமூலர் மரபில் வந்த மெளன குரு தேசிகர் ஆவார்.
33. வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் நீந்திக் கடந்தவர் : தாயுமானவர்.
34. 'தமிழ் மொழியின் உபநிடதம்' என்று அழைக்கப்படுகின்ற பாக்கள்: தாயுமானவரின் பாக்கள்.
35. 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே' என்று பாடியவர் : தாயுமானவர்.
36. பத்துக் கம்பன், தமிழ்க் காளிதாசன், தமிழ் வியாசன் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் : திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
37. சூத் சங்கிதை, குசேலோபாக்கியானம், கந்தர் சஷ்டி கவசம் மூன்றையும் வல்லூர் தேவராசர் வெளியிட மனமுவந்து கொடுத்தவர் : மீனாட்சிசுந்தரனார்.
38. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் : மருதூர்.
39. 'திருவருட்பா' பாடியவர் : இராமலிங்க அடிகள்.
40. சீவகாருணிய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் ஆகியவற்றின் ஆசிரியர் : இராமலிங்க அடிகள்.
41. இராமலிங்க அடிகளின் ஆன்மீக நெறி : ஆன்மீக நேய ஒருமைப்பாடு.
42. நீதிபதி வேதநாயகம் பிள்ளை அழைக்கப்படும் விதம் : மாயூரம் வேதநாயகம் பிள்ளை. / அவரது சொந்த ஊர் : குளத்தூர்.
43. பிரதாப முதலியார் சரித்திரம் எழுதியவர் : மாயூரம் வேதநாயகம் பிள்ளை. / தமிழின் முதல் நாவல்.
44. தமிழின் முதல் சட்ட நூலான 'சித்தாந்த சங்கிரகம்' எழுதியவர் : மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
45. மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய வேறு சில நூல்கள் : பெண்மதி மாலை, பெண் கல்வி, பெண் மானம், சுகுணசுந்தரி, நீதிநூல், திருவருள் அந்தாதி, பெரியநாயகி பதிகம் ஆகியன.
46. தமிழறிஞர் உ. வே. சா. அவர்களின் முழுப்பெயர் : உத்தமதானபுரம் வேங்கட சுப்பனார் மகனார் சாமிநாதனார். / அதாவது அவரது இயற்பெயர் : வேங்கடராமன் ஆகும்.
47. அறிவியல் நோக்கில் அமைந்த பதிப்பு முறையின் தந்தை : தமிழறிஞர் உ. வே. சா.,
48. சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றைப் பதிப்பித்தவர் : தமிழறிஞர் உ. வே. சா.,
49. 'சங்க காலத் தமிழும் பிற்காலத்துத் தமிழும்', 'திருவள்ளுவரும் திருக்குறளும்', 'என் சரிதம்' என்னும் வாழ்க்கை வரலாற்று நூல் போன்றவற்றின் ஆசிரியர் : தமிழறிஞர் உ. வே. சா.,
50. சிலப்பதிகாரக் கதைச்சுருக்கம், மணிமேகலைக் கதைச் சுருக்கம், உதயணன் கதைச் சுருக்கம் ஆகியவற்றை வெளியிட்டவர் : தமிழறிஞர் உ. வே. சா.,
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக