புலவர்களின் அருந்தமிழ்ப்பணிகள் தொடர்ச்சி ( நிறைவுப்பகுதி )
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
புலவர்களின் அருந்தமிழ்ப்பணிகள்
தொடர்ச்சி
நிறைவுப்பகுதி
51. 'சிவகாமி சரிதை', மனோன்மணீயம் எழுதியவர் : பெ. சுந்தரனார்.
52. நூல் தொகை விளக்கம், திருவாங்கூரின் பழைய அரசர்கள், ஞான சம்பந்தரின் காலம் என்ற மூன்று நூல்களையும் எழுதியவர் : பெ. சுந்தரனார்.
53. பரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் : வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகள்.
54. நாடக இலக்கண நூலான, 'நாடகவியல், ரூபாவாதி, கலாவதி ஆகிய நூல்களின் ஆசிரியர் : பரிதிமாற் கலைஞர். / சிறப்புச் செய்தி : ரூபாவாதி என்னும் நாடகம் எழுதி, தாமே ரூபாவாதியாகவும் நடித்துக் காட்டியவர் இவர்.
55. மறைமலை அடிகளின் இயற்பெயர் : வேதாசலம்.
56. இளமையில் முருகவேள் என்னும் பெயரில் கட்டுரைகள் எழுதியவர் : மறைமலை அடிகள் ஆவார்.
57. முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை, பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை : மறைமலை அடிகள்.
58. சாகுந்தலத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் : மறைமலை அடிகள் ஆவார்.
59. சாதி வேற்றுமையும், போலிச் சைவமும் என்ற நூலின் ஆசிரியர் : மறைமலை அடிகள்.
60. மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை, தொலைவில் உணர்தல், மனவசியம், யோகா நித்திரை, இறந்தபின் இருந்த நிலை, கோகிலாம்பாள் கடிதங்கள் ஆகிய நூல்களின் ஆசிரியர் : மறைமலை அடிகள்.
61. வடமொழி - தமிழ்மொழி அகராதி வெளியிட்டவர் : நீலாம்பிகை அம்மையார். ( மறைமலை அடிகளாரின் மகள் ஆவார், இவர் ).
62. சைவ சித்தாந்த சண்டமாருதம் எனப்படுபவர் : சோமசுந்தர நாயகர்.
63. திரு. வி. க. அவர்களின் முழுப்பெயர் : திருவாரூர் விருத்தாசல முதலியார் மகனார் கல்யாண சுந்தரனார்.
64. இந்தியாவில் முதன்முதலில் தொழிற்சங்கம் அமைத்தவர் : திரு. வி. க. ஆவார்.
65. திரு. வி. க. எழுதிய சமுதாய நூல்கள் மற்றும் சீர்திருத்த நூல்கள் : பெண்ணின் பெருமை, காதலா முடியா சீர்திருத்தமா, சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, என் கடன் பணிசெய்து கிடப்பதே, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்.
66. திரு. வி. க எழுதிய சமய நூல்கள் : முருகன் அல்லது அழகு, சைவத்திறவு, சைவத்தின் சமரசம், இமயமலையும் தியானமும், உள்ளொளி.
67. திரு. வி. க. எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் : தமிழ்நாடும் நம்மாழ்வாரும், நாயன்மார் வரலாறு.
68. திரு. வி. க. பாடிய செய்யுள் நூல்கள் : முருகன் அருள் வேட்டல், கிறித்து அருள் வேட்டல்.
69. பெரிய புராணத்தைப் பதிப்பித்தவர் : திரு. வி. க. அவர்கள்.
70. முத்தைத்தரு என்று தொடங்கிப் பாட ஆரம்பித்தவர் : அருணகிரிநாதர்.
71. அதிமதுரைக் கவிராயரோடு வாதிட்டு எமகண்டம் பாடி அவனைத் தோற்கடித்தவர் : காளமேகம் ஆவார்.
72. நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும் என்று சிலேடை பாடியவர் : காளமேகம்.
73. கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான் தன்சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் அரிசிவரும். என்றெல்லாம் எழுதியவர் : காளமேகம்.
74. சைவ சித்தாந்த சிறுகாப்பியம் என்று அழைக்கப்படுவது : பண்டார மும்மணிக்கோவை ஆகும்.
75. நீரோட்டக யமக அந்தாதி, கற்பனைக்கு களஞ்சியம் : பாடியவர் : சிவப்பிரகாசர் ஆவார்.
76. நெஞ்சகமே கோவில்; நினைவே சுகந்தம்! பாடியவர் : தாயுமானவர்.
77. நவீன கம்பர் : மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஆவார்.
78. சேக்கிழார் பிள்ளைத்தமிழ் பாடியவர் : மீனாட்சி சுந்தரனார்.
79. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன், ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும், அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்ற அடிகளுக்குச் சொந்தக்காரர் : இராமலிங்க அடிகள் ஆவார்.
80. இங்கித மாலை, சர்வ சமய சமரசக் கீர்த்தனை பாடியவர் : வேதநாயகம் பிள்ளை அவர்கள்.
இவற்றுடன் புலவர்களின் அருந்தமிழ்த் தொண்டு நிறைவு பெற்றது.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக