தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

தங்கமே! ஏ....யு!

                                                                  

                                                                        கவிதை 

தங்கமே! ஏ....யு!     

 

                   ஒரு முறை (  May  2011, கரூர்   ) TATA GOLD PLUS இன்  'அனந்தா' என்னும் நகைத்திட்டத்திற்கான தொடக்க விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.   நானும் சென்றிருந்தேன்.  குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கான நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் நடைபெற்றன.   பின்பு, இத்திட்டம் பற்றிப் பேசத் தொடங்கினர்.  அப்போது, என்னையும் பேச அழைத்தனர்.  அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.   நேரம் மிக அதிகமாகி விட்டதால், ஒவ்வொருவருக்கும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே என்று ஒதுக்கினர். அதனால், பேசுவதைவிட ஏதேனும் மிகச் சிறிய கவிதையாக ஒரு நாலு வரி வாசிக்கலாம் என்று சிந்தித்ததன் விளைவுதான் ( கவிதை எழுதும் ஆசை ) கீழே உள்ள கவிதை....                                                                                                                                                                                                                                                                                  


தங்கமே .....என் தங்கமே....!

குழந்தைகளுக்கு உன்னைப் 

பலரும் பலவிதமாய்ப் பெயர்சூட்டி 

தங்கம்....தங்கமணி.  தங்கராசு,  தங்கமலர், ....

அழகு பார்த்தார்கள்.

ஆஹா...என்னா ...அழகு....!


உன்னுடைய விலைமதிப்பு  ( Value )!

மஞ்சள் நிறம்!   (  Brightness  )

,இதெல்லாம் அருமைதான்...

நல்லா இருக்கு!

ஆனா நீ...சந்தையில் உயரும்போது 

எந்தன் சிந்தை தடுமாறுதே....?!

எனக்கு மட்டுமன்று ...எல்லோருக்கும்..

இங்கு இருக்கின்ற எல்லோருக்கும் ...!


உன் வேதியியல் குறியீடு Au 

நீ இந்த மாதிரிச் சந்தையில் உயரும்போது 

உன்னை Ai  ( ஏய் ) ....U  ( You )

என்றுதான் கூப்பிடணும் போல இருக்கு...!


இரஷ்ய எழுத்தாளர் புஷ்கின் கூறுகிறார்...

எல்லாம் என்னுடையது என்றது தங்கம்....

எல்லாம் என்னுடையது என்றது வாள்.....

என்னால் எல்லாவற்றையும் வாங்க முடியும் ....தங்கம் 

என்னால் எல்லாவற்றையும் பறிக்க முடியும் ...வாள் 


சகோதரச் சகோதரியரே ...!

தங்கமா?  மனிதனா?

என்று கேட்கும்போது 

மனிதன் பக்கம் நில்லுங்கள்...ஏனெனில்..

உலோகங்களை விட

உயர்ந்தவன்  

மிக உயர்ந்தவன் மனிதன்...!!!


சந்தையில் எத்தனைபேர் 

விதவிதமாய் வந்தாலும்   

டாடாவின் நீதான் டாப்  ( TOP )

ஆமாம்..!

GOLDPLUS இல் 

தங்கம் வாங்கினால் 

அன்று முதல்...அந்த நிமிடம் முதல்...

ஆரம்பம்....

ஆனந்தம்...ஆனந்தம்...ஆனந்தமே...!


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,