நீர்நிலைகள் : அணைகள்,நீர்த்தேக்கங்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நீர்நிலைகள்
நீர்நிலைகளுக்கு அருவி, ஓடை, கிணறு, ஏரி, கடல், துரவு ( பழைய சொல்; இதன் பொருள் : பாசனத்திற்கு நீர் பாய்ச்சுகிற கிணறு ) என்று பலவிதமான பெயர்கள் உள்ளன. இவற்றுள் மழை நீரைத் தேக்கி வைக்கும் முக்கியமான நீர்நிலைகள் பற்றி மட்டும் இங்கே காண்போம்.
ஏரி : சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நீர்நிலை ஆகும். பெரும்பாலானவை நன்னீர் ஏரிகளாக இருக்கும். சில நேரங்களில், பெரிய ஏரிகள் சிறிய கடல் என்று அழைக்கப்படுகின்றன. அதேசமயம், நிறைய ஏரிகள்
1. நீர் விநியோகிக்க
2. மின் ஆற்றல் உற்பத்தி செய்ய
3. பொழுதுபோக்கு இடங்களாக / சுற்றுலாத் தலமாக
என்று செயற்கையாகக் கட்டப்படுகின்றன.
நீர்த்தேக்கம் : நிலத்தில் விழும் மழைநீரை மற்றும் ஆற்றுநீரை,
நிலத்திலேயே திறந்தவெளியில் தேக்கி வைக்கும் இடம்.
பெரிய நீர்த்தேக்கங்கள் :
1. நீர் விநியோகிக்க
2. மின் ஆற்றல் உற்பத்தி செய்ய
3. பொழுதுபோக்கு இடங்களாக / சுற்றுலாத் தலமாக.
4. நீர்ப்போக்குவரத்து.
5. வெள்ளப் பாதுகாப்பு.
6. நீர் வளமாகக் குறிப்பிட என்று அமைகின்றன.
சிறிய நீர்த்தேக்கங்கள்
1. மக்களுக்கு, தொழில் நிறுவனங்களுக்கு நீர் வழங்க.
2. விவசாயத்திற்கு என்று அமைகின்றன.
அணைகள்
தமிழ் நாட்டில் சுமார் 7.50 கோடி மக்கள் வாழ்கின்றோம். இங்கே உள்ள அணைகள் மூலம் பெறுகின்ற நீரானது,
1. குடிநீர்த் தேவைக்கான நீரைச் சேமித்து வைக்க
2. நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக
3. நீரிலிருந்து மின்சாரம் தயாரிக்க..
4. நீரின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த
5. நீரோட்டத்தின் திசையை மாற்ற
6. வெள்ள அபாயத்தைக் குறைக்க
என்று பயன்படுகின்றன. இவை, ஆற்றின் குறுக்கே கட்டப்படுகின்றன.
2019 கணக்கெடுப்பின்படி, தற்போது இந்தியாவில் கட்டிமுடிக்கப்பட்ட பெரிய அணைகள் 4710
கட்டுமானத்தின் கீழ் : 390 உள்ளன.
தமிழ்நாட்டில் மன்னர்கள் ஆண்ட காலத்தில் என்னும்பொழுது சோழர்காலத்தில் கரிகால் சோழன் கல்லணையைக் கட்டினார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முல்லைப் பெரியாறு, மேட்டூர் போன்ற அணைகள் கட்டப்பட்டன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஒவ்வொரு மாநிலத்தை ஆளுகின்றவர்களின்கீழ் அணைகள் கட்டப்பட்டன. அதன்படி ஓமந்தூரார், குமாரசாமி இராஜா, காமராசர் முதலானோரின் காலகட்டங்களில் அணைகள் கட்டப்பட்டுள்ளன.
தமிழ் நாட்டில் சுமார் 69 அணைகள் உள்ளன. இவற்றுள், மின்சாரம் தயாரிக்கப் பத்து அணைகள் பயன்படுகின்றன. வைகை, தாமிரபரணி, வெள்ளாறு, பெண்ணையாறு, அமராவதி ஆகியவை ஆற்று நீர்ப் பாசனங்களான உள்ளன.
தமிழ் நாட்டில் உள்ள அணைகள்
கல்லணை / இரண்டாம் நூற்றாண்டு / கரிகாலன் கட்டியது.
மேட்டூர் அணை வைகை அணை
அமராவதி அணை ஆத்துப்பாளையம் அணை
சாத்தனூர் அணை மணிமுத்தாறு அணை
பாபநாசம் அணை ஆழியாறு அணை
பெருஞ்சாணி அணை பவானிசாகர் அணை
பெருஞ்சாறு அணை நீராறு அணை.
பேச்சிப்பாறை அணை பரம்பிக்குளம் அணை
சோலையாறு அணை கொடுமுடியாறு அணை
அடவிநயினார் அணை சேர்வலாறு அணை
இராமநதி அணை குண்டாறு அணை.
கருப்பாநதி அணை கடனாநதி அணை
.வீராணம் / பண்டைக்காலம்
/ சென்னை.
கல்லணை / சோழர் காலம் / கரிகால்
வளவன் / திருச்சி.
செம்பரம்பாக்கம் / பல்லவர்காலம்
/ காஞ்சிபுரம்
செங்குன்றம் 1876 / திருவள்ளூர்.
சோழவரம் / 1877-க்கு முன்பு / திருவள்ளூர் மாவட்டம்)
பெரியாறு 1897 / தமிழ்நாடு
- கேரளா எல்லை.
பேச்சிப்பாறை 1906 / கன்னியாகுமரி.
வெலிங்டன் / 1923
/ கடலூர்.
மேட்டூர் அணை 1934 / சேலம்.
பூண்டி 1944 / திருவள்ளூர்
மாவட்டம்)
பெருஞ்சாணி 1952 / கன்னியாகுமரி.
பவானிசாகர் 1955 / ஈரோடு.
மணிமுத்தாறு 1958 / திருநெல்வேலி.
சாத்தனூர் 1958 / திருவண்ணாமலை
கிருஷ்ணகிரி 1958 கிருஷ்ணகிரி - தருமபுரி சாலை / பெரியமுத்தூர்.
அமராவதி 1958 / உடுமலைப்பேட்டை,
திருப்பூர்
வீடூர் 1959 திண்டிவனம்
வைகை அணை 1959 / தேனி.
ஆழியாறு 1962 / கோயம்புத்தூர்.
சாத்தையாறு 1965 / பாலமேடு,
மதுரை.
கோமுகி அணை 1965 கல்வராயன் மலை அடிவாரம், விழுப்புரம்.
தூணக்கடவு 1965 / தமிழக
கேரள எல்லை, கோயம்புத்தூர்.
திருமூர்த்தி அணை 1967 / திருப்பூர்
மாவட்டம்.
பரம்பிக்குளம் 1967 / தமிழக
கேரள எல்லை, கோயம்புத்தூர்.
மஞ்சளாறு 1967 / தேனி.
உப்பாறு 1968 / தாராபுரம்,
திருப்பூர்.
மணிமுத்தாறு அணை 1970 விழுப்புரம்.
பெருவாரிப்பள்ளம் 1971 / தமிழக
கேரள எல்லை, கோயம்புத்தூர்.
சோலையாறு 1971 / கோயம்புத்தூர்.
சிற்றாறு-1 அணை 1972 / கன்னியாகுமரி.
சிற்றாறு-2 அணை 1972 / கன்னியாகுமரி
கடனாநதி அணை 1974 / ஆழ்வார்குறிச்சி / திருநெல்வேலி.
ராமநதி அணை 1974 / திருநெல்வேலி.
பரப்பலாறு 1974
/ திண்டுக்கல்.
பொன்னியாறு அணை 1974 / கரூர்.
மேல் நீராறு கலிங்கு 1975 / கோயம்புத்தூர்.
பிளவுக்கல் பெரியாறு
/ 1976 / விருதுநகர்
பிளவுக்கல் கோவிலாறு 1976 / விருதுநகர்.
கருப்பாநதி 1977 / கடையநல்லூர் / திருநெல்வேலி.
பஞ்சப்பள்ளி அணை 1977 / கிருஷ்ணகிரி
வரட்டுப்பள்ளம் 1978 / அந்தியூர்,
ஈரோடு.
பாலாறு-பொருந்தலாறு 1978 / பழனி,
திண்டுக்கல்
வட்டமலைக்கரை ஓடை 1978 / திருப்பூர்.
குண்டேறிப்பள்ளம் 1978 / கோபிச்செட்டிப்பாளையம்,
ஈரோடு
வரதமாநதி 1978 / திண்டுக்கல்.
மருதாநதி 1979 / திண்டுக்கல்.
கீழ் நீராறு கலிங்கு 1982 / கோயம்புத்தூர்.
குண்டாறு 1983 / செங்கோட்டை,
திருநெல்வேலி.
பாம்பாறு 1983 / கிருஷ்ணகிரி.
தும்பலஅள்ளி அணை 1983 / தருமபுரி
குல்லூர்சந்தை 1984 / விருதுநகர்
வெம்பக்கோட்டை 1985 / விருதுநகர்.
வாணியாறு அணை 1985 / அரூர் / தருமபுரி.
கேசரகுழிபள்ளம் அணை 1985 / பாலக்கோடு / தருமபுரி.
உப்பாறு (திருச்சி) 1986 / திருச்சி.
சூளகிரி சின்னாறு 1986 / கிருஷ்ணகிரி
தொப்பையாறு அணை 1986 / தருமபுரி
நாகாவதி அணை 1986 / தருமபுரி
கெலவரப்பள்ளி / ஆவளப்பள்ளி அணை / கிருஷ்ணகிரி.
சித்தமல்லி அணை 1987 / அரியலூர்.
ஆனைக்குட்டம் 1989 / விருதுநகர்
பெரும்பள்ளம் 1990 / சத்தியமங்கலம்,
ஈரோடு.
குதிரையாறு 1990 / திண்டுக்கல்.
நொய்யல் ஆத்துப்பாளையம் 1991 / கரூர்.
நொய்யல் ஒரத்துப்பாளையம் 1992 / திருப்பூர்
மாவட்டம்.
கோல்வார்பட்டி 1992 / விருதுநகர்
குடகனாறு 1993 / திண்டுக்கல்
மாவட்டம்
கரியகோயில் அணை 1993 / சேலம்.
ஆனைமடுவு அணை 1993 / சேலம்.
ராஜாத்தோப்பு கானாறு 1997 / வேலூர்
நம்பியாறு 2000 / களக்காடு,
திருநெல்வேலி
பொய்கையாறு 2000 / ஆரல்வாய்மொழி,
கன்னியாகுமரி.
மோர்தானா 2001 / வேலூர்.
சோத்துப்பாறை 2001 / தேனி.
அடவிநயினார்கோயில் 2003 / செங்கோட்டை,
திருநெல்வேலி.
வடக்கு பச்சையாறு 2003 / களக்காடு,
திருநெல்வேலி
கொடுமுடியாறு 2003 / திருக்குறுங்குடி,
திருநெல்வேலி.
.சண்முகாநதி 2004 / தேனி.
நகரியாறு சாஸ்தாகோயில் 2004
/ விருதுநகர்.
மிருகண்டா அணை /2005/மேல்சோழங்குப்பம், திருவண்ணாமலை
செண்பகத்தோப்பு அணை 2007 / போளூர் / திருவண்ணாமலை.
வள்ளிமதுரை அணை 2007 / வேலூர்.
ஆண்டியப்பனூர் ஓடை 2007 / திருப்பத்தூர்.
நங்காஞ்சி ஆறு 2007 / திண்டுக்கல்.
நல்லதங்காள் ஓடை 2007 / திருப்பூர்
மாவட்டம். இவற்றை மாவட்டங்கள்வாரியாக எனில்,
ஈரோடு - 6
கன்னியாகுமரி - 6
கிருட்டிணகிரி - 5
கோவை - 5
சேலம் - 1
தஞ்சை - 1
தருமபுரி - 9
திண்டுக்கல் - 5
திருச்சி - 3
திருநெல்வேலி - 4
திருப்பூர் - 4
திருவண்ணாமலை - 5
தேனி - 4
நீலகிரி - 3.
பெரம்பலூர் - 4
விருதுநகர் - 1
விழுப்புரம் - 2.
வேலூர் - 1.
என்று அறியலாம்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான அணைகள் மாநில அரசுகள் மூலம் பராமரிக்கப்படுகின்றன.
மேலும் சில அணைகள் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் (BBMB), தாமோதர் பள்ளத்தாக்கு கழகம்
(DVC) மற்றும் நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NHPC) மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.
அணைப் பாதுகாப்புச் சட்டம் ஆகஸ்ட் 2, 2019 இல் அணைகளின் பாதுகாப்பிற்காக மத்திய அரசால் இயற்றப் பெற்றது. அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 5254 அணைகள் உள்ளன. சுமார் 450 அணைகள் புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தச் சட்டம், அணைகளின் பாதுகாப்பைத் தரப்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும் தேசிய அணைப் பாதுகாப்பிற்கான தேசியக் கமிட்டி கொள்கைகளை உருவாக்கும்; தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் அவற்றைச் செயல்படுத்தும்.
1. கொள்கைகள், செயல்பாடுகள்
, பிரச்சனைகள், விபத்துகள் குறித்த தகவல்களை, 'தகவல் களஞ்சியம்' என்பதன்மூலம் சேகரித்து
வைக்கப்படும்.
2. அணையின் உரிமையாளர்தான்
அணைப் பாதுகாப்பிற்குப் பொறுப்பாளர் ஆகிறார்.
3. இரு மாநிலங்களிடையே ஏற்படும்
சிக்கல்களை, பிரச்சனைகளைச் சரிசெய்யும்.
4. இதன்மூலம் மாநிலக் கமிட்டியும் மாநில மதிப்பும் அமைக்கப்படும்.
5. அணையின் கொள்ளளவு, எவ்வளவு தண்ணீர் வரக்கூடும், வெளியேற்றப்படும் என்ற தகவல்களை அவ்வப்பொழுது வெளிப்படையாக வைத்திருந்து தெரிவித்தல் வேண்டும்.
6. அணைக்குரிய அபாயக் கணிப்பு அறிக்கை, நெருக்கடி கால நடவடிக்கை முதலானவற்றை ஐந்தாண்டுகளுக்குள் உருவாக்கி இருத்தல் வேண்டும்; புதிய அணைகள் கட்டப்படுவதற்கு முன் இவற்றை உருவாக்க வேண்டும்.
7. அணையின் பாதுகாப்பு குறித்த
அறிக்கையினைத் தன்னிச்சையான வல்லுநர் குழுவால்
ஐந்தாண்டுகளுக்குள் தயாரிக்கப்பட வேண்டும்; குறிப்பிட்ட கால இடைவெளியில் அடுத்த அறிக்கையைத்
தயாரித்தல் வேண்டும்.
தருமபுரி : கிருஷ்ணகிரி, தொப்பையாறு,
நாகாவதி, பாம்பாறு, கெலவரப்பள்ளி, கேசரளிகுல்லா, பஞ்சப்பள்ளி, வாணியாறு, ஈச்சம்பாடி
நீர்த்தேக்கம்.
திருவண்ணாமலை : சாத்தனூர் அணை
விழுப்புரம் : மணிமுத்தாறு, கோமுகி,
வீடூர் நீர்த்தேக்கம்.
சேலம் : மேட்டூர் அணை, வசிட்டா
நதி அணை
ஈரோடு : பவானிசாகர், வரட்டுப்பள்ளம்,
குண்டேரி பள்ளம், கொடிவேரி, ஓரத்துப் பள்ளம், உப்பாறு
நீலகிரி : அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்க்கன், குந்தா, சாண்டிநல்லா, பார்சன்ஸ்வேலி, பைக்காரா, போர்த்திமந்து, மரவகண்டி, முக்குருத்தி, மேல்பவானி நீர்த்தேக்கம்.
கோயம்புத்தூர் : அமராவதி, சின்னாறு,
பரம்பிக்குளம், ஆளியாறு, திருமூர்த்தி நீர்த்தேக்கம்.
தஞ்சாவூர் : கல்லணை
மதுரை : வைகை அணை
தேனி : மஞ்சளாறு அணை, வைகை அணை
விருதுநகர் : பிளவக்கல் அணை
திருநெல்வேலி : பாபநாசம், கடனாநதி,
இராமா நதி, கருப்பா நதி, சேர்வலாறு, குண்டாறு, மணிமுத்தாறு அணை.
கன்னியாகுமரி : பேச்சிப்பாறை அணை.
நீர்த்தேக்கமுள்ள, ஈரப்பதமான
மண் படிந்த நிலம் படுகை எனப்படும். இதன்மீது
செல்லுகின்ற நீர்ப் போக்கின்மீது அணைகள் கட்டப்படுவதுண்டு. எனவே, கட்டப்பட்ட அணைகள்; 2012 இல் 34 ஆக ஆற்றுப்படுகைகள்; இன்றைய நிலையில் சுமார் 50 உள்ளன. படுகை
என்கின்ற வகையில் ஆற்றுப்படுகைகள் பின்வருவனவாக அமைகின்றன.
வராக நதிப் படுகை : 1. வீடூர்.
பெண்ணையாற்றுப் படுகை
2. கிருஷ்ணகிரி 3. சாந்தனுள் 4. துன்பஹள்ளி
5. பாம்பார் 6. வாணியாறு.
வெள்ளாற்று நதிப் படுகை
7. வெல்லிங்டன் 8. மணிமுக்தா நதி 9. கோமுகி நதி
காவேரி நதிப் படுகை
10. மேட்டூர் 11. சின்னாறு 12. கேளிகுளிஹல்லா
13. நாகவதி 14. தொப்பையாறு 15. பவானி சாகர்
16. குண்டேசி பள்ளம் 17. வரட்டுப் பள்ளம்
18. அமராவதி 19. பாலாறு பொரந்தவாறு
20. வரதமா நதி 21. உப்பளம் (பெரியாறு மாவட்டம்)
22. வட்டலைக் கரை ஓடை 23. பரப்பலாறு
24. பொன்னையாறு 25. உப்பார் (திருச்சி மாவட்டம்)
வைகை நதிப் படுகை
26. வைகை 27. மஞ்சளாறு 28. மருதா நதி
வைப்பார் நதிப் படுகை
29. பிளவுக்கல் (பெரியாறு நீர்த்தேக்கம்)
30. பிளவுக்கம் (கோயிலாறு நீர்த்தேக்கம்)
31. வெம்பக்கோட்டை 32. குள்ளுச் சந்தை
தாமிரபரணி நதிப் படுகை
33. மணி முத்தாறு 34. கடனா 35. ராம நதி
36. கருப்பா நதி 37. குண்டாறு
கோதையாறு நதிப் படுகை
38. பேச்சிப்பாறை 39. பெருங்சாணி 40. சித்தாறு – ஐ
41. சித்தாறு – ஐஐ
மேற்கு நோக்கிப் பாயும் நதிகளைக்
கிழக்கே திருப்புதல்.
42. பெரியாறு
43. மேல் நீராறு அணைக்கட்டு
44. கீழ் நீராறு
சாலக்குடி நதிப் படுகை
45. சோலையாறு 46. பரம்பிக்குளம் 47. தூனக்கடவு
48. பெருவாரிப் பள்ளம்
பாரதப் புழை நதிப் படுகை
49. ஆழியாறு 50. திருமூர்த்தி.
டெல்டா : கழிமுகம். அதாவது, ஒரு முக்கோண வடிவிலான குறைந்த, தட்டையான நிலப்பரப்பு ஆகும். ஓர் ஆறு மலையில் பிறந்து மலைப்பகுதி, சமதளப் பகுதி முதலியானவற்றைக் கடந்து வரும்பொழுது கிளைகளாகவும் பிரிந்து செல்லும். அந்த அமைப்பைப் பார்ப்பதற்கு முக்கோண வடிவமாக இருக்கும். எனவே இது டெல்டா எனப்படுகிறது. Delta : Change ( கணிதத்தில் குறிக்கப் பெறுகிறது. )
இது தமிழ்நாட்டில் காணப்படும் மாவட்டங்கள் : தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகியன.
இங்கு நெல், உளுந்து, பாசிப்பயிறு, வாழை, கரும்பு, வயல்களில் மிதமான களிமண் எனில் நிலக்கடலை, மக்காச்சோளம்,எள் ஆகியனவும் காய்கறிகளில் கத்தரிக்காய், மிளகாய், கீரை வகைகள், பூக்களில் மல்லிகை, ரோசா, அரளி வகை மலர்கள் ஆகியனவும் பயிரிடப்படுகின்றன.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக