- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அகர வரிசை முதலாகச் சொல்லித் தந்த ஆசிரியரே
ஆங்கிலம் எனினும் விளங்கிட நடத்தியவரே
இனிய தமிழ் பயிற்றுவித்த தமிழாசிரியரே
இரு கண்களாம் எண்ணும் எழுத்துமாம் இதில்
கணக்கையும் கண்ணாய்க் கற்றளித்தவரே
வரலாறு புவியியலே பாரதமும் உலகும் என்று
மன்னர் ..போர்...என்று போரடிக்காமல் சொன்னீரே
மரம் மழை பூமி என்றெல்லாம் சூழலை உணர்த்தினீ ரே
இதுவே இயல்பு என இயற்பியலை இயம்பிய ஆசிரியரே
கரிம, கனிமத்தைக் கனிவாய்க் கூறியோரே
உயிரியலை உயிர்ப்பாய் நடத்திய ஆசிரியரே
இவர்களின் ஊடே .. .. ..
இசையும் மருந்தாகும் என்றே
இறைப்பாடல்களுடன் எங்களை இணைத்திட்ட ஆசிரியரே
தாயும் தந்தையும் பண்பு வளர்ப்பர் எனினும்
அன்பு ஒழுக்கம் பிறர்க்குதவி என்று போதித்திட்ட
எத்தனை இருப்பினும்
சுவர் இருந்தால் தானே சித்திரம் என்று
உடம்பை உள்ளத்தை வலுவாக்கிட
உடற்கல்வியை ஊட்டிய ஆசிரியரே
இவையெல்லாம் பசுமரத்தாணியாய்
பாடங்களுடன் நீங்களும்
உங்களுடன் தலைமை ஆசிரியரும்
தலைமையுடன் பள்ளியும்
பள்ளியுடன் எங்கள் வாழ்க்கையும்
அடடா ! என்னே இனிமை! என்னே இனிமை!
நினைத்து வாழ்த்துகிறேன், இந்நாளில்
"இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்"
ஏற்றி வைத்த ஏணிகளாய் .... .. நீங்கள்
கரை சேர்த்த தோணிகளாய் .... நீங்கள்
செரித்திடச் செய்த நாரத்தைகளாய் .....நீங்கள்
அங்கே இருந்திட
இங்கே நானோ இன்று
ஆசிரியராய் இருக்கும்போதுதான் தெரிகிறது
நீங்கள் பட்ட சிரமங்கள்
மீண்டும் ஒருமுறை
தலை சாய்த்து வணங்குகிறேன்
வாழ்த்துகிறேன்
"இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்"
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

கருத்துகள்
கருத்துரையிடுக