தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

1801 - 1900

                                                             "ஆண்டுக்குறிப்புகள்"

                                                  ( உதவி : மெய்யப்பன் தமிழாய்வக வெளியீடு  )

                                                                                    1801  -  1900 


                      இந்த நூற்றாண்டை,  "கண்டுபிடிப்புகளின் காலம்"  என்பர்.இந்த நூற்றாண்டில்தான் தந்தி, தொலைபேசி, வானொலி, கார் முதலான பயன்பாட்டுப் பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டன.  இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் மற்றும் உலக அளவிலும் நடைபெற்ற மாற்றங்கள், முக்கிய நிகழ்வுகள் பற்றிக் காண்போம்.

1801  :  இந்தியாவில் திரட்டிய நூல்கள், கையெழுத்துப் படிகள் மற்றும் பிற ஆவணங்களை பாதுகாக்கும் நோக்கத்தில் 'இந்திய அலுவலக நூலகம்'  ( India  Office  Library  ) என்ற நூலகத்தைக்  கிழக்கிந்தியக் கம்பெனி இலண்டன் லேடன்ஹால் தெருவில் நிறுவியது.  இந்நூலத்திற்கு ஏராளமான நூல்கள் வந்து குவிந்தன.  இப்போது அதில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான ஆவணங்கள் உள்ளன.  1947 ஆம் ஆண்டுக்கு முந்தைய இந்தியாவைப் பற்றிய தகவல்களை அறிய, இது ஒரு இன்றியமையாத தகவல் மையமாக விளங்கி வருகிறது.    

                    திசம்பர் 26,  சாசனத்தின்படி  வங்காளத்திலும்  சென்னையிலும்  உச்சநீதிமன்றங்கள்  தொடங்கப்பட்டன.  இச்சாசனத்தின்படி மாவட்டங்களிலும் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.  இவை இங்கிலாந்து அரசின் நீதிமன்றங்களாகும்.  கிழக்கிந்தியக் கம்பெனியின் நீதிமன்றங்கள் ஆளுநர் ஆட்சியின்கீழ் தனியாகச் செயல்பட்டன.     

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,