2021 முக்கிய நிகழ்வுகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
2021 முக்கிய நிகழ்வுகள்
2021 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை நினைந்து திரும்பிப் பார்க்கிறேன்.. என்னால் விடுபட்ட அல்லது உங்களுக்குத் தெரிந்த முக்கிய நிகழ்வுகளைக் கீழே உள்ள கருத்துப் பெட்டியில் தெரிவியுங்கள்.
ஜனவரி 20 : அமெரிக்காவின் 46ஆவது அதிபராகப் பொறுப்பேற்றார் திரு ஜோ பைடன்.
'விடுதலைப் போரில் தமிழகம்' என்னும் புகைப்படக் கண்காட்சி நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கப் பட்டது.
தஞ்சாவூரில் 1965 இல் இந்திய உணவுக் கழகம் தொடங்கப்பட்டது. இதில் 'உணவு அருங்காட்சியகம்' நவம்பரில் தொடங்கப்பட்டது.
கொரோனா மற்றும் உடல்நலப்பிரச்சனையால், நடிகர்கள் விவேக், இயக்குநர் விசு, நெடுமுடி வேணு, ஆர்.என்.ஆர்.மனோகர், காமெடி நடிகர் பாண்டு, வெங்கட்சுபா, இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், கே.வி.ஆனந்த், தாமிரா, ஜோக்கர் துளசி, ‛நல்லெண்ணெய்' சித்ரா, பழம் பெரும் நடிகர் ஸ்ரீகாந்த், மாறன் மற்றும் நிதிஷ் வீரா, பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் ஆகியோரின் மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கு பெரும் இழப்பாக அமைந்தது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஒமிக்ரான்' வகை கரோனா தற்போது உலகை அச்சுறுத்தி வருகிறது.பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ள நாடுகள், சர்வதேச விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக