அலெக்சாண்டர் கிரகாம்பெல்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அலெக்சாண்டர் கிரகாம்பெல்
ஹாய்! எல்லாருக்கும் வணக்கம்!
நான், அலெக்சாண்டர் கிரகாம்பெல் பேசுறேன். இன்று என்னோட பிறந்த நாள்!
இன்றைக்கு விரல் நுனியில் உலகத்தையே வைத்திருக்கும் உங்களுக்கு இதன் மூல காரணம் தொலைபேசி தான் என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்! ஆமாம், கிட்டத்தட்ட முப்பது கண்டுபிடிப்புகளைத் தந்திருக்கிறேன். ஆனாலும் நீங்கள் என்னைத் " தொலைபேசி " என்பதில் தான் மிக நன்றாக நினைவில் வைத்திருக்கிறீர்கள்! பரவாயில்லை, இதற்கும் நன்றியே!
நான், இந்த நாளில் 1847 இல் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க்கில் பிறந்தேன். என்னுடைய அம்மாவிற்குக் காது கேட்காது. எனக்குப் படிப்புப் பிடிக்கும். கூடவே பியானோவும் நல்லா வாசிப்பேன். இருந்தாலும் என்னோட அப்பாவுடன் சேர்ந்து காது கேளாதவர்களுக்குப் பேசக் கற்றுத் தருவதில் இருந்தேன். என்னோட 23 வயசில் எனக்குக் காசநோய் வந்தது. அதனால, 1870 இல் கனடாவிற்கு வந்துவிட்டோம்.
பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்தாலும் எனக்கு அறிவியல் ஆராய்ச்சிதான் பிடிக்கும்.
எனக்கு உதவியாக, வாட்சன் என்பவர் இருந்தார். ஒரு நாள் நான் என் வீட்டின் மேல் அறையிலும் வாட்சன் கீழ் அறையிலும் இருந்து கொண்டு கம்பி வழியாக இன்னொருவரிடம் பேச முடியுமா ன்னு ஆராய்ச்சி பண்ணிண்டிருந்தோம். நீங்கள்லாம் தீக்குச்சி டப்பாவை நூல்ல கட்டி விளையாடுவீங்க இல்ல அந்த மாதிரி... ஆக நாங்க ரெண்டு பேரும் இதே ஆராய்ச்சி தான் நாள்கணக்கா ஓடிண்டிருந்தது.
பார்த்தீங்கன்னா, வாட்சன் காதில் வைத்திருந்த கருவியில் "திரு. வாட்சன் அவர்களே, தயவுசெய்து இங்கே வாருங்கள்; நான் உங்களைப் பார்க்க வேண்டும்" என்று நான் பேசியது கேட்டது. அவ்ளோதான் உடனே மாடிக்கு வந்து என்னிடம் சொன்னார். இது நடந்தது 1876, மார்ச் 7!
அதேசமயம், பேச்சையெல்லாம் மின் ஒலியாக மாற்றுகின்ற ஆராய்ச்சியில் இருந்தபொழுது காது கேளாத பெண்ணை விரும்பினேன்; அவர்களையே திருமணமும் செய்து கொண்டேன். என்னோட அம்மா, என்னோட மனைவி இவங்களோட இந்த மாற்றுத் திறமைதான் நான் இந்தத் தொலைபேசி கண்டுபிடிப்பதற்கு ஊக்கமாக இருந்தது என்று நினைக்கிறேன்.
காதில் கேட்கும் கருவி என்றும் வாயில் வைத்துப் பேசும் கருவி என்றும் இரண்டு பகுதிகளாக இந்தத் தொலைபேசி இருக்கும். கீழே உள்ள படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.
நான் என்னுடைய இந்தக் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை வாங்கலாம்னு பதிவு அலுவலகத்திற்குப் போனா அங்கே எனக்கு முன்னால எலிசா கிரே என்பவர் எலக்ட்ரிக்கல் ஸ்பீச் மெஷினுக்கு உரிமை வாங்கிக்கிட்டுப் போய்ட்டாங்க என்றனர். போராடிப் போராடி, சுமார் பத்து வருஷம் கழிச்சு எனக்குத் தான் உரிமம் கிடைத்தது.
அதுக்கப்புறம் நான் ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இண்டக்க்ஷன் பாலன்ஸ், வாக்ஸ் ரிக்கார்டிங் சிலிண்டர், கிராமபோன் அப்படின்னு சுமார் முப்பது வகைகளைக் கண்டுபிடிச்சேன். அவற்றில் பதினெட்டு வகைகளுக்கு மட்டும் என்னோட பெயரில் காப்புரிமை செய்திருக்கிறேன்.
மெட்டல் டிடக்டர் கிராமபோன்
எய்லிரான் னா என்ன என்று யோசிக்கிறீர்களா? விமானம் மேல் நோக்கி எழுவதற்கு அல்லது கீழே இறங்குவதற்கு அல்லது பக்கவாட்டில் திரும்புவதற்கு விமானத்தின் வால் பகுதி இருக்கும். அந்த வால் பகுதிதான் எய்லிரான் எனப்படும். இதனால பார்த்தீங்கன்னா, நிறைய பெரிய பெரியா விமானங்கள் கண்டுபிடிக்க ஆரம்பிச்சாங்க.
Legion Of Honour ( French Govt., ), ராயல் சொசைட்டி ஆப் ஆர்ட்ஸ் ( லண்டன் ), Academic Francis Award, ஆல்பெர்ட் பதக்கம், முனைவர்ப் பட்டம் ( உர்ஸ்பர்க் பல்கலைக் கழகம் ), எடிசன் பதக்கம் முதலான சிறப்புகளைப் பெற்றிருக்கிறேன்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் நான் கண்டுபிடித்த தொலைபேசியானது இன்றைக்கு நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் கண்டுபிடிப்புகளெல்லாம் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்; உங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகத் தானே??!!
ஆனால், நீங்கள் பயன்படுத்தும் விதத்தால் தொலைபேசியைத் "தொல்லைபேசி" என்று கேலி செய்கிறார்கள்; இது பரவாயில்லை... இன்னும் சிலரோ இந்தத் தொலைபேசியைக் கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையில் கிடைச்சான்ன்னா என்று கோபமாக என்னைத் தேடுகிறார்கள்.
எனவே, இது போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை நல்ல செயல்களுக்கு ... ஆக்க முறைகளுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
சிறப்புச் செய்தி : அலெக்சாண்டர் கிரஹாம் பெல் 1922 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி ( அமெரிக்காவில் )
மறைந்தார். அந்த நாளன்று அமெரிக்காவில் உள்ள தொலைபேசிகள் அனைத்தும் ஐந்து நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தின.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்




கருத்துகள்
கருத்துரையிடுக