தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

UGC NET SLET TRB : தமிழ் மாதிரி வினாத்தாள் விடைகளுடன்

UGC NET SLET TRB :  தமிழ் மாதிரி வினாத்தாள் விடைகளுடன் 

 1.  'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்' : இடம்பெறும் நூல் 

நன்னூல் 

நேமிநாதம் 

வீரசோழியம் 

தொல்காப்பியம் 


2.'இருத்தலும் இருத்தல் நிமித்தமும்' : இது எத்திணைக்கு உரிய உரிப்பொருள்?

குறிஞ்சி 

பாலை 

முல்லை 

மருதம் 


3.  ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழை அறிவுறுத்தப் பாடிய புலவர் 

கபிலர் 

நக்கீரர் 

ஓரம்போகியார் 

மாமூலனார் 


4.  கவுந்தியடிகள் கண்ணகியையும் கோவலனையும் யாரிடம் அடைக்கலப் படுத்தினார்?

தேவந்தி 

மாடலமறையோன் 

மாதரி 

வசந்தமாலை 


5.  ஆசாரக்கோவையின்  நூலாசிரியர் யார்?

நல்லாதனார் 

பெருவாயின் முள்ளியார் 

காரியாசான் 

கூடலூர்க் கிழார் 


6.  திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய நூல் 

மீனாட்சிக் குறம் 

சரபேந்தர் பூபாலக் குறவஞ்சி 

குற்றாலக் குறவஞ்சி 

பெத்தலகேம் குறவஞ்சி 


7.  தென்திராவிட மொழிகளில் இடம்பெறுவது 

குடகு 

கூயி 

நாய்கி 

மால்டோ 


8.  மு. வ.,வின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம் 

மண்குடிசை 

கரித்துண்டு 

கள்ளோ காவியமோ 

அகல்விளக்கு 


9.  தாயுமானவரைப் பின்பற்றிப் பாடிய இசுலாமியப் புலவர் 

உமறுப்புலவர் 

சேக் அப்துல்காதர் 

ஞானியார் சாயுபு 

குணங்குடி மஸ்தான் 


10.  துள்ளல் ஓசைக்கு உரிய  பாவகை?

வெண்பா 

ஆசிரியப்பா 

வஞ்சிப்பா 

கலிப்பா 

11.  பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்று அறிவுறுத்தியவர் 

திரு. வி. க.,

வள்ளலார் 

தாயுமானவர் 

மு. வ., 


12.  உறுதிக்கூற்று : 1.  குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ 

2.  மிகுதியான பாடல்களைப் பாடியுள்ளார் 

1  சரி;  2  சரியன்று 

இரண்டும் சரி 

இரண்டும் சரியன்று 

1 சரியன்று; 2 சரி 


13.  கூற்று : 1.தாண்டக வேந்தர் எனப்பட்டவர் திருநாவுக்கரசர் 

கூற்று : 2.  தாண்டகம் என்னும் செய்யுள் வகையைச் சிறப்புடன் பாடியதால் 

இரண்டும் சரி 

இரண்டும் சரியன்று 

1  சரி; 2 சரியன்று 

1 சரியன்று; 2 சரி 


14.  நிரல்படுத்துக 

ஐம்பூதங்களின் வரிசை முறை 

நிலம், தீ, விசும்பு, நீர், காற்று 

காற்று, தீ, நீர், விசும்பு, நிலம் 

நிலம், நீர், தீ, காற்று, விசும்பு 

விசும்பு, காற்று, நீர், நிலம், தீ 


15.  யாப்பு உறுப்புகள் 

அசை, சீர், தளை, தொடை, எழுத்து, அடி 

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை 

சீர், தளை, அடி, தொடை, எழுத்து, அசை 

தளை, சீர், தொடை, அடி, அசை, எழுத்து 


16.  வெண்பா வகையின் வரிசை 

குறள், சிந்தியல், நேரிசை, இன்னிசை 

சிந்தியல், நேரிசை, இன்னிசை, குறள் 

நேரிசை, இன்னிசை, குறள், சிந்தியல் 

இன்னிசை, நேரிசை, சிந்தியல், குறள் 


17.  எழுவகைப் பெண் பருவங்கள் 

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் 

தெரிவை, பெதும்பை, பேதை, மங்கை, பேரிளம்பெண், மடந்தை, அரிவை 

மங்கை, அரிவை, மடந்தை பேரிளம்பெண், தெரிவை, பெதும்பை, பேதை 

மடந்தை, பேரிளம்பெண், மங்கை, தெரிவை, அரிவை, பேதை, பெதும்பை 


18.  பொருத்துக 

திருமுருகாற்றுப்படை  -  1.  நப்பூதனார் 

சிறுபாணாற்றுப் படை  -  2.  நக்கீரர் 

பெரும்பாணாற்றுப்படை  -  3.  நல்லூர் நத்தத்தனார் 

முல்லைப்பாட்டு  -  4. கடியலூர் உருத்திரங்கண்ணனார் 


1  4  3  2

2  3  4  1

4  2  1  3

4  3  2  1 


19.  பொருத்துக : பதிற்றுப்பத்தில் ..

இரண்டாம் பத்து   -  1.  பரணர் 

மூன்றாம்பத்து  -  2.  காப்பியாற்றுக் காப்பியனார் 

நான்காம் பத்து   -  3.  குமட்டூர்க் கண்ணனார்  

ஐந்தாம் பத்து  -  4.  பாலைக் கெளதமனார் 


3  4  2  1 

2  4  1  3

4  1  3  2

1  4  3  2


20.  பொருத்துக 

நான்மணிக்கடிகை  -  1.  முன்றுறை அரையனார் 

சிறுபஞ்சமூலம்  -  2.  கணிமேதாவியார் 

பழமொழி  -  3.  காரியாசான் 

ஏலாதி  -  விளம்பிநாகனார் 


4  2  3  1 

3  4  2  1

2  3  1  4

4  3  1  2 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,