தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

உளவியல் மாதிரி வினாக்கள்

 1.  உட்ஸ் டெஸ்பாட்ச் கல்வியின் மகாசாசனத்தின் ஆண்டு?


1854

1864

1874

1884

2. 'மனிதன் ஒரு சமூக விலங்கு'  என்று கூறியவர்?


அரிஸ்ட்டாட்டில் 

சாக்ரட்டீஸ் 

பியாஜே 

எவருமில்லை

3.  கற்றல் என்பது ஒருவனிடம் ஏற்படக் கூடிய ....மாற்றத்தைக் குறிப்பது 


மன 

உடை 

உடல் 

நடத்தை

4.  மொழிக் கற்றல் பற்றிய நடத்தைக் கொள்கையை வெளியிட்டவர்?


யூங் 

பியாஜே 

ஸ்கின்னர் 

மாண்டிசோரி 

5.  சராசரி நுண்ணறிவு ஈவு என்பது 


70  -  89

90  -  109

110  -  129

130  -  140


101.  உயர்புலன் என்று குறிப்பிடப்படுவது

மூக்கு

வாய்

காது

கண்

 

102.  பொதுமைக் கருத்து எழுதுதலின் மைய நிலை

பொதுமைப் பிரித்தல்

புலன்காட்சி அனுபவங்களைப் பெறுதல்

கருதுகோளை உருவாக்குதல் சரிபார்த்தல்

 

103.  கவனமும் கவர்ச்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை - கூறியவர்

மக்டூகல்

பிராட்பேண்ட்

ஹெப்

கெடல்

 

104.  சூழ்நிலை ஒருவனது வளர்ச்சி இயல்பின் அடிப்படை மனநிலை அன்று : கூறியவர்

சூழ்நிலைவாதிகள்

மரபுநிலைவாதிகள்

மேற்கண்ட இருவரும்

எவருமில்லை

 

105.  எத்தனை தலைமுறையினரின் தாக்கம் ஒரு குழந்தையின் குணநலன்களில் ஏற்படுகிறது?

5

6

7

8

 

106.  கவனவீச்சறிக் கருவியை உருவாக்கியவர்?

ஹெப் கெடல்

மக்டூகல்

பிராட்பேண்ட்

 

107.  சிந்தனையின் எல்லையை மொழி நிருணயிக்கிறது என்று கூறியவர்?

வாட்சன்

வோர்ப்

வைகட்ஸ்கி

பியாஜே

 

108.  குழந்தையானது, பொருள்களின் மாறாத்தன்மையைப் பற்றி அறிந்து கொள்ளும் திறன்

புலனியக்க நிலை

செயலுக்கு முற்பட்ட நிலை 

பருப்பொருள் நிலை

கருத்தியல் நிலை

 

109.  வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும், நிகழ்ச்சியும் மரபு, சூழ்நிலை ஆகிய இரண்டின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன என்று கூறியவர்

மக்கிவர்

பேஜ்

மக்கிவர்  & பேஜ்

வாட்சன்

 

110.  வாகனங்களுக்கு 4 - 6 வரையிலான எண்கள் தரப்படுவதற்கான காரணம்

கவன மாற்றம்

கவனப்பகுப்பு

கவன வீச்சு

கவனக் குலைவு

 

111.  இயற்கையிலேயே மனிதர்கள் மொழியைக் கற்கும் திறன் பெற்றிருக்கின்றனர் என்று கூறுபவர்

ஸ்கின்னர்

சோம்ஸ்கி

ஆஸ்குட்

வாட்சன்

 

112.  கருவுற்ற முட்டையில் 23 ஜோடி குரோமோசோம்கள் காணப்படும் நிலையின் பெயர்?

Miasis

Meiosis

CellDivision

எதுவுமில்லை

 

113.  ஒருவனது வளர்ச்சி & நடத்தையை அவனுக்கு அகத்தே இருந்து கட்டுப்படுத்தும் காரணி

அடைவுநிலை

மரபுநிலை

செயல்நிலை

அவாவுநிலை

 

114.  பிற குழந்தைகளுடன் பழக மறுக்கும் குழந்தைகள் எதனை வளர்த்துக் கொள்வர்?

குற்ற உணர்வை

தனித்த நிலையை

தாழ்வு மனப்பான்மையை

நம்பிக்கை இன்மையை

 

115.  அழகுணர் கற்பனையில் 3 - 6 வயது வரை நீடிக்கும் நிலை

துணிச்சல்

குறிக்கோள் நிலை

பாவனை நிலை

எதுவுமில்லை

 

116.  பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின்

மனவெழுச்சி பற்றியது

மனவளர்ச்சி பற்றியது

உடல் வளர்ச்சி பற்றியது

அறிவு வளர்ச்சி பற்றியது

 

117.  தசைகள் & சுரப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

நரம்புத் தொகுதி

இயக்கு வாய்கள்

புகு வாய்கள்

நாளமில்லாச் சுரப்பிகள்

 

118.  கவனவீச்சினைப் பரிசோதனை செய்யும் கருவியின் பெயர்

டாஸிஸ்டாஸ்க்கோப்

டெலிஸ்க்கோப்

முல்லர் லேயர் கருவி

தெர்மாஸ்க்கோப்

 

119.  ஆர்வம் என்பது மறைந்திருக்கும் கவனம்; கவனம் என்பது ஆர்வத்தின் செயல் வடிவம்!  கூறியவர்

குரோ & குரோ

டிரெவர்

மக்டூகல்

ராஸ்

 

120.  உண்மை நிலையுடன் ஒத்துப்போகாத புலன் காட்சியின் பெயர்

திரிபுக்காட்சி

இல்பொருள் காட்சி

மனப் பிம்பம்

காட்சிச் சாயல்

121.  கற்பித்தலில் பொதுமைக் கருத்து வரைபடங்கள் உருவாக்கும் முறையை வித்திட்டவர்

ஆசுபெல்

காக்னே

நோவாக்

புரூனர்

 

122.  அறிவின் வாயில்கள் என்றழைக்கப்படுவன

அறிவின் ஊற்று

புலன் வாயில்கள்

புலன் உறுப்புகள்

புலன் உணர்வுகள்

 

123.  சமூக வளர்ச்சி என்பது சமூகத் தொடர்புகளில் முதிர்ச்சி பெறுதல் என்று கூறியவர்

ஹார்லாக்

எரிக்சன்

குரோ

அரிஸ்ட்டாட்டில்

 

124.  எரிக்சனின் சமூக வளர்ச்சி நிலைப்படிகளின் எண்ணிக்கை

5

6

7

8

 

125.  ஓர் இயல்பூக்கத்தின் உச்சகட்ட எழுச்சியின்போது ஒருவர் பெரும் உணர்வு அனுபவமே மனவெழுச்சி ஆகும் என்று கூறியவர்

மாரிஸ்

எரிக்சன்

மக்டூகல்

ஷால்ஸ்பெர்க்


1.  'ஒருவரிடம் அவருக்கே உரிய  சூழ்நிலைக்கேற்ற பொருத்தப்பாட்டினைத் தீர்மானிக்கின்ற அவருடைய உடல் மற்றும் உள்ளம் சார்ந்த அமைப்புகளின் செயல்படும் ஒருங்கிணைப்பு தான் அவரது ஆளுமை' என்று கூறியவர்

ஆல்போர்ட்

 

2.  பதற்றம், மிகை அச்சம் என்பன ..... என்னும் வகை ஆகும்.

மிதமான மனநோய்கள்

 

3.  மின்னியல் தூண்டல்கள் நிறைந்த சூழலில் கற்றல் நடைபெறுவது ...  ஆகும்.

இ. கற்றல்

 

4.  தனியாள் வேற்றுமைகள் ஆறு பரப்புகளில் காணப்படுகின்றன என்று கூறியவர்  ...  ஆவார்.

டைலர்

நுண்ணறிவு, பள்ளியில் அடைவுத் திறன், சிறப்புத் திறன்கள், ஆளுமை,ஆர்வமும் மதிப்புகளும், புலன்காட்சி

 

5.  'அக்கறை என்பது ஒருவரது உள்ளத்தில் இன்பமான உணர்வைத் தோண்டும் பொருளோ /  செயலோ ஆகும்' என்று கூறியவர்

டக்லஸ்ஃபிரையர்

 

6.  'குழந்தைகளின் நற்குணத்தை உருவாக்குவதே தனது பள்ளியின் நோக்கமாகக் கொண்டு முன்பருவத்திற்கான பள்ளியைத் தொடங்கியவர் ....  என்பவர் ஆவார்.

இராபர்ட் ஓவன்

 

7.  இந்தியாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் /

 ICDS தொடங்கப்பட்ட ஆண்டு

1978

 

8. குழந்தைகள்,  .... மற்றும் .....  என்னும் இவ்விரண்டு திறன்கள் பெற்ற பின்னரே எழுதுவதைக் கற்பிக்க வேண்டும்.

பேச்சு,  படிப்பு

 

9.  முதல் வகுப்பு மாணவர்களின் படித்தல் திறனை வளர்க்க ஆசிரியர், .... என்னும் இவற்றைப் பயன்படுத்தலாம்.

மின்னட்டைகள்.

 

10.  தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச் சத்துத் திட்டம் என்பது முதன் முதலில் தமிழ்நாட்டில் எங்குத் தொடங்கப்பட்டது?

மதுரை  /  1980

 

11.  வலுவூட்டிகளுள், 'திரும்பக் கூறல்' என்பதன் பொருள்

ஆசிரியர் கேட்ட வினாவிற்கு மாணவர் கூறிய சரியான விடையை அதனை வகுப்பு முழுமைக்கும் திரும்பக் கூறுகிறார். அப்பொழுது விடை கூறிய மாணவன் மகிழ்தல்.

 

12.  சினத்தைத் தன்னுள் அடக்குவதால் ஏற்படும் விளைவுகள்

இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் போன்றவை அதிகரித்தல்.

 

13.  அடைவூக்கம் பற்றி முதன்முதலில் கருத்தைக் கூறியவர்

அட்கின்சன்

 

14.  முதல் உலகப் போரின்போது அமெரிக்காவில் நடைபெற்ற சோதனைகள் ....  &  .....  என்பன ஆகும்.

 

Alpha   Test   Beta    Test

 

15.  Mnemonics என்பன எவை?

நினைவுச் சூத்திரங்கள்

 

16.  சமூகப் பின்னணியின் தாக்கத்தைத் தனிமனிதனிடம் காணப்படும்; இவ்வாறு இரு அமைப்புகளுக்கும் மாறுபடும் நிலையை உளவியலார் ...  என்று அழைக்கின்றனர்.

கொரோனா அமைப்பு

 

17.  ஆசிரியரின் ஒரே சீரான பேச்சு, ஒலிப்பு என்பது மாணவரின் கற்றலில் ...  தோற்றுவிக்கும்.

சலிப்புத் தன்மையைத்

 

18.  ஆசிரியர் ..... தயாரிக்கும் முன் பாடப் பொருளைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

அலகுத்திட்டம்

 

19.  ...... என்பாரின் கருத்துப்படி மனவெழுச்சிகள் ஒவ்வொன்றும் இருமுனைகளைக் கொண்டவை ஆகும்.

ஹெரால்ட்டு  ஷால்ஸ்பெர்க்

 

20.  'தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம்' எந்த நாளில் தொடங்கப்பட்டது?

காந்தியடிகளின் பிறந்த நாள் /  அக்டோபர் 2  /  1978

 

21.  ஆதரவு காட்டும் குழந்தைகள் பற்றி ஆய்வு செய்தவர்

ஸ்கோடாக்

 

22.  மரபு முற்றிலும் ஒரே மாதிரியாக இருக்கின்ற இரட்டையர்கள் .... என்போர் ஆவர்.

ஒரு கரு இரட்டையர்கள்

 

23.  முன்னேற்றமானது நேர்கோடாக அமையாமல், .... வடிவில் இருக்கும்.

சுருள்

 

24.  நடத்தைக் கோட்பாட்டிற்கு எதிராகத் தோன்றிய கோட்பாடு ...  ஆகும்.

முழுமைக் காட்சிக் கோட்பாடு

 

25.  கல்வியியலில், D E E என்பதன் விரிவு

Department  of  Elementary  Education

 

ஆசிரிய மாணவர்

ஆசிரிய மாணவர்  பெற்றிருக்க வேண்டிய ஒன்பது கற்பித்தல் திறன்கள்

தொடங்குதல் திறன்       

விளக்குதல் திறன்                  

பொழிப்புரைத் திறன்

வினாக் கேட்டல் திறன்                     

தூண்டல் மாற்றுத் திறன் மொழிசாராக் குறிப்புத் திறன்       வலுவூட்டல் திறன்    

முடிக்கும் திறன்                                  சரளமாகப் பேசும் திறன்

1.  தொடங்குதல் திறன்

முன்னறிவுத் தொடர்

ஏற்ற விடை தந்தமை

தொடர்ச்சி

பொருத்தமான தொடர் &  புறம்பான தொடர்

தொடங்கும்முறை

புதிய பாடத்துடன் தொடர்பு உடைய கருத்துகளைக் கூறித் தொடங்குதல்

வினாக்கள் கேட்டு விடைகளை வரவழைத்துத் தொடங்குதல்

விளக்குதல், வருணித்தல், சொற்பொழிவுகள் மூலம் தொடங்குதல்

கதை கூறித் தொடங்குதல்

நடித்தல் முறை மூலம் தொடங்குதல்

துணைக்கருவிகளைப் பயன்படுத்தித் தொடங்குதல்

செய்து காட்டலின் மூலம் தொடங்குதல்

2.  விளக்குதல் திறன்

தொடங்கும் தொடர்

இணைப்புச் சொற்கள்

முற்றுவிக்கும் தொடர்

விளக்குதலில் வினாக்கள்

3.  பொழிப்புரைத் திறன்

பொழிப்புரை

4.  வினாக்கேட்டல் திறன்

எளிய நிலை வினாக்கள்

இடைநிலை வினாக்கள்

உயர்நிலை வினாக்கள்

அறிவு நிலை வினாக்கள்

கருத்துணர்தல் வினாக்கள்

அறிவைப் பயன்படுத்தும் வினாக்கள்

சிந்தனை வினாக்கள்

5.  தூண்டல் மாற்றுத் திறன்

ஆசிரியர் ஒரே இடத்தில் நில்லாது நகருதல்

மெய்ப்பாடுகள்

குரலில் ஏற்றத் தாழ்வு

கவனம் ஈர்க்க : சொற்கள் / அடிக்கோடு & வண்ணங்களில் எழுதுதல் / வரைபடம் & படம்

இடைவினை மாற்றம்

தொடர்ந்து பேசிக் கொண்டிராமல் இடையில் சற்று நிறுத்துதல்

புலன் மாற்றம்

6.  மொழி சாராக் குறிப்புத் திறன்  / சைகை மொழிக் குறிப்புத் திறன்

விரலை நீட்டுதல்

சொடுக்குதல்

முகத்தைத் திருப்புதல்

முகபாவனைகள் மூலம் வெளிப்படுத்துதல்

ஓரக்கண்ணால் பார்த்தல்

முறைத்துப் பார்த்தல்

7.  வலுவூட்டல் திறன்

மொழிச் சார்புடைய வலுவூட்டி

திரும்பக் கூறல்

மாணவர் கூறிய விடையைச் செம்மையாக்கிக் கூறுதல்

மொழிச் சார்புடைய ஒலி மூலம் வலுவூட்டுதல்

சைகைகள் மூலம் வலுவூட்டுதல்

8. முடிக்கும் திறன்

கருத்துகளைத் தொகுத்துக் கூறுதல்

புதிய அறிவைப் பயன்படுத்த வாய்ப்பு தருதல்

முன்னறிவுடன் இணைத்துத் தருதல்

மேலும் கற்றலுக்கு வாய்ப்பு அளித்தல்

9.  சரளமாகப் பேசும் திறன்

தங்குதடை இன்றி

புரிந்து கொள்ளும் விதத்தில்

சரியான சொல் அமைப்பில்

பேசும்போது தலையை நிமிர்த்துப் பேசுதல் 


1.  இலக்கை அடைய ஓர் உயிரினம் மேற்கொள்ளும் முயற்சி  /  முயற்சிப் போக்குகளே ஊக்கம் ஆகும் என்று கூறியவர்

டால்மன்

2.  அறிவுசார்க் கற்றல் வகைகளில் இடம்பெறாதது ...  ஆகும்.

செய்து கற்றல்

3.  இந்தியாவில் நவோதயாப் பள்ளிகளைத் தொடங்கிய பிரதமர்?

இராஜீவ் காந்தி

4.  இருத்தல் கொள்கையின் தந்தை

ஜீன் பால் சார்த்

5.  பள்ளி இணைப்புத் திட்டத்தைப் பரிந்துரைத்த  குழு

கோத்தாரிக் குழு

6.  நுண்ணறிவுச் சோதனையான பீனே  -  சைமன் சோதனையில் இடம்பெறும் வினாக்கள்

30

7.  காது மற்றும் வாய் என்பவற்றில் மாற்றுத் திறன் பெற்ற ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட சோதனை .....  ஆகும்.

பிண்ட்னர்  -  பேட்டர்சன் சோதனை

8.  அறிவுசார் ஒவ்வாமையைப் பற்றிக் கூறியவர்

பெஸ்டிங்கர்

9.  சச்சீர் பராமரிப்புக் கோட்பாடு எதனை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது?

ஹெமஸ்டாசிஸ்

10.  ஒரு குறிப்பிட்ட தூண்டலானது வெவ்வேறு வகையான துலங்கல்கள் பலவற்றை வரவழைத்தல் என்பது  ...  ஆகும்.

விரிசிந்தனை

11.  மனிதனின் பார்வைக் கூர்மை, தலைச் சுற்றளவு என்பனவற்றைக் கொன்டு நுண்ணறிவைக் கணக்கிட்டவர்

பிரான்சிஸ் கால்டன்  /  1979

12.  மனச் சோதனைகளும் அளவிடுதலும்  என்னும் நூலை எழுதியவர்

கேட்டல்  /   1890

13.  மனிதன் தான் பெற்றிருக்கும் உள்ளத்திறனுக்கும் அவன் வாழுகின்ற சூழ்நிலைக்கும் இடையே நிகழும் இடைவினையால் எழும் தனித்தன்மையே அவனது ஆளுமை   எனப்படும் என்று கூறியவர்

பிரீமேன்

14.  நாளமில்லாச் சுரப்பிகளின் வேறு பெயர்

எண்டோகிரைன் சுரப்பிகள்

15.  ஆளுமை வகைப்பாடுகளில் இந்திய ஆளுமை வகைப்பாடுகளுள் ஒன்றான சாத்வா என்பதன் பண்புகள்?

பொறுமை, மென்மையான பேச்சு, நேர்மை & உண்மை

16.  தூண்டலுக்கும் துலங்கலுக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்துவதே கற்றல் என்று கூறியவர்

தார்ண்டைக்

 

17.  இணைத்த நீளமான குச்சியால் பழங்களைத் தொட்ட குரங்கின் பெயர்

சுல்தான்  /  மனிதக் குரங்கு /  கோஹ்லர்.

 

18.  மாஸ்லோவின் ஐந்து படிநிலைகளை ஏழு படிநிலைகளாக அமைத்தவர்

ரூட்

 

19.  W  A  I  S என்பதன் விரிவாக்கம்?

Wechsler  Adult  Intelligence  Scale

 

20.  Personality என்னும் சொல்லின் முழுமையான பொருள்?

ஒருவனது பண்புகளைக் குறிக்கும் வெளிப்பாட்டுத் தோற்றம்

 

21.  தண்டனை மற்றும் குறை கூறுதல் என்பவை எவ்வகை ஊக்கிகள்?

எதிர்மறை ஊக்கிகள்

 

22.  குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படும் பருவம்?

குமரப் பருவம்

 

23.  ஓவியர்கள், சிற்பிகள் முதலானோரிடம் காணப்படும் திறனை எவ்வகையான நுண்ணறிவு என்று   உளவியலார் வரையறுக்கின்றனர்?

இடரீதியான நுண்ணறிவு

 

24.  மாணவரின் ஆக்கத்திறனின் வளர்ச்சிக்கு வரமூட்டுதல், தூண்டுதல் போன்று அமையும் ஆசிரியர்களின் பங்கு பற்றிக் கூறியவர்கள்

டெமாஸ்  &  லோவின்

 

25.  மனநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

முற்சார்புக் காரணங்கள்

தூண்டுதலாக / சீர்கேட்டினை வெடிக்கச் செய்யும் உடனடிக் காரணிகள்.

 

26.  விலங்கு என்னும் பொதுவான சொல்லில் இருந்து பூனை என்னும் தனிப்பட்ட விலங்கின் தனிப்பட்ட பண்புகளை விளக்குகிறோம்.  இவ்வகைக் கற்பித்தல் முறையானது ....  எனப்படும்.

பகுத்தறிதல்

 

27.  குழந்தைகளுக்கு ஏற்ற கற்றல் பொருள்களை உருவாக்கித் தரும் கற்றல் என்பது ..... எனப்படும்.

தொடர்கற்றல்

 

28.  ஜேம்ஸ் லாங் மனவெழுச்சிக் கொள்கையின்படி செயல்படத் தூண்டுவது

மனவெழுச்சியின் காரணம்.

 

29.  கற்றல் பாதையில் X  அச்சு குறிப்பது  ......;   Y  அச்சு குறிப்பது .....  ஆகும்.

X  :  கற்கும் காலம் / முயற்சிகளின் எண்ணிக்கை

Y  :  கற்றுக் கொண்ட அளவு 

 

30.  P P E என்பதன் விரிவு

Programme  of  Pre - primary  Education


1.  இந்தியாவில் நடைபெறும் ஆக்கத்திறனுக்கான தரப்படுத்தப்பட்ட சோதனைகள்?

இரண்டு

பெக்கர்மேதி  படைப்பாற்றல் சோதனை

பாசி படைப்பாற்றல் சோதனை

2.  1930 இல் இலக்கு பற்றி ஆய்வு செய்தவர்

மாக்பால்ன்

3.  தனியாள் வேறுபாட்டினைக் குறைக்க உதவும் கற்பித்தல் கல்வி முறை

திட்டமிட்ட பாடப் பொருள் சார்ந்த கற்பித்தல் முறை

4.  ஒவ்வொரு பாடத்திற்கும் கட்டுப்பாட்டு மதிப்பு  உண்டு என்று கூறியவர்

ஜான் லாக்

5.  பயிற்சி மாற்றத்தில் செங்குத்து மாற்றம், பக்க மாற்றம் என்று இருவகைப்படுத்துபவர்

காக்னே

6.  கற்றல் செயல்பட ஊக்குவித்தல் அவசியம் என்று கூறும் தாண்டைக்கின் விதி

ஆயத்த விதி

7.  தன்னடையாளம் எதிர்மறையாக மாறும்போது ....   பாதிக்கப்படும்.

மனநலம்

8.  நியூரான்கள் செய்திகளை  /  தகவல்களை  .....  தான் கடத்தும்.

ஒரே திசையில்

9.  புத்தகச் சுமையைக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்த குழு

யஷ்பால் குழு

10.  ஒரு பொருளைக் கவனிக்கும்போது ..... தெரிவு செய்கிறோம்.

தூண்டலைத்

11.  சென்னை சோதனையை உருவாக்கியவர்

உட்பர்ன்  /  1922 

12.  நெறிபிறழ்வு என்பது

குழந்தைகளின் /  குமரப்பருவத்தினரின் தீவிரமான சமூக விரோத நடத்தை

13.  'கல்வி உளவியல்,  கல்வியுடன் சம்பந்தப்பட்ட நடத்தை மற்றும் ஆளுமைத் திறனின் முழு அளவையும் உள்ளடக்கியது' என்று கூறியவர்

ஸ்கின்னர்

14.  தருக்கவியல் என்பது  ...... என்னும் இயலின் ஒரு பகுதி ஆகும்.

மெய் விளக்கவியல்

15.  ஊசலாடும் கவனத்தின் பெயர்?

கவன மாற்றம்

16.  செய்தியை நினைவில் வைத்துக் கொள்ள உதவும் மிகவும் முக்கிய வழி  ....  ஆகும்.

உருவங்கள்

17.  வழிகாட்டலின் நோக்கம்

தனிநபர் நலம்  /  மாணவர் நலம்

18.  நாமே முயன்று மறப்பவை என்பது  ....  என்று அழைக்கப்படும்.

ஆக்க மறதி

19.  தாயின் வயிற்றிலேயே  ......  என்பதன் பாதிப்பு தொடங்கி விடுகிறது.

சூழ்நிலை

20.  'கல்வியில் சம வாய்ப்பு என்பது, "ஒவ்வொருவரும் தங்களின் உள்ளார்ந்த திறமைகளை உயரளவிற்கு வளர்த்திட வழங்கப்படும் கல்வி வாய்ப்புகள் ஆகும்"' என்று கூறியவர்

டாக்டர் இராதாகிருஷ்ணன்

21.  கற்றலுக்கான பள்ளி சார்ந்த காரணிகள்

வகுப்பறை

ஆசிரியர்

பள்ளியின் சுற்றுப்புறம்

விளையாட்டு மைதானம்

கலை  மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள்

பள்ளி நிருவாகம்

22.  பொருள் புரிந்து கற்றலின் மறத்தல் விகிதம் ....  பொருள் அற்ற கற்றலின் மறத்தல் விகிதம்  .... அமைகிறது.

குறைவாகவும்  &  அதிகமாகவும்

23.  நுண்ணறிவுப் படிநிலைக் கோட்பாட்டினைத் தந்த உளவியல் அறிஞர்

பிரிட்டீஸ்

24.  நேரு இளைஞர் மையங்கள் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

1973  /  Nehru  Yuva  Kendras  /  N  Y K

25.  D  T  E  R  T என்பதன் விரிவு

Directorate of Educational Research and Training  /  ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,