TET PSYCHOLOGY PAPER - 1
ஆசிரியர்த் தகுதித் தேர்வு
உளவியல் : தாள் - 1
ஒரு வரித் தகவல்கள்
- உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் : சிசுப்பருவம்.
- வளர்ச்சி நிலைகளில் ஏற்படும் சிக்கல் : வளர்ச்சிசார் சிக்கல்கள்
- மனித வளர்ச்சியின் பருவங்கள் : எட்டு.
- சிசுப்பருவம் : 0 - 1 ஆண்டுகள்
- குறுநடைப் பருவம் : 1 - 3
- பள்ளிமுன் பருவம் : 3 - 6
- பள்ளிப்பின் பருவம் : 6 - 10
- குமரப்பருவம் : 10 - 20
- கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படுவது : 14 ஆண்டுகள் வரை.
- குழந்தையின் உடல் வளர்ச்சி முதலில் தலையிலிருந்து தொடங்கி பாதங்களை நோக்கி வளருகிறது.
- தொடக்கக் கல்வி பயில வரும் குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி : 90 %.
- எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூகக் கோட்பாடு என்பதன் நிலைகள் : எட்டு.
- குழந்தை, தனியான ஒரு சொல் பேசும் மாதம் : 18 மாதங்கள் வரை.
- சிறு வாக்கியங்களைப் பேசத் தொடங்கும் மாதம் : 18 - 24 மாதங்கள்.
- ஒரு குழந்தை, வளர்ந்தவர்களைப் போன்று மொழியைக் கையாளும் ஆண்டுகள் : 5 - 6 ஆண்டுகள்.
- குழந்தை வெளி உலகத்திலிருந்து பிரிந்து தன்னை அடையாளம் கொள்ளுவதன் பெயர் : தன்னடையாளம்.
- தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடும் என்று கூறியவர் : எரிக்சன்.
- மாணவ ஆசிரியர், கற்பித்தல் பயிற்சிக்குச் சென்று குழந்தைகளின் எடை, உயரம் காணும் முறை : உற்றுநோக்கல்.
- 3 - 6 வயதுள்ள குழந்தைகள் பயிலும் பள்ளி :முன்-தொடக்கப் பள்ளி
- குழந்தைகளுக்கான கற்கும் உரிமையை ஐ. நா. சபை அறிவித்த ஆண்டு : 1959, நவம்பர் 20.
- உடல் வளர்ச்சியில் தேக்கநிலை ஏற்படும் பருவங்கள் : பள்ளிப்பருவம் முதல் குமரப்பருவம் வரை.
- நாளமில்லாச் சுரப்பிகள் சுரப்பது : வளர்ச்சி ஹார்மோன் ( வேதி )
- நாளமுள்ள சுரப்பி சுரப்பது : நொதி.
- பிட்யூட்டரியில் ஹார்மோன் அதிகமாகச் சுரந்தால் : உடல் பருமன் / அசாதாரண உடல் வளர்ச்சி
- பிட்யூட்டரியில் ஹார்மோன் குறைவாகச் சுரந்தால் : குள்ளத்தன்மை
- அட்ரினல் சுரப்பி சுரப்பது : அட்ரினலின்.
- அட்ரினலின் பயன் : உடல் அவசர காலங்களைச் சமாளிக்க.
- தைராய்டு சுரப்பி சுரப்பது : தைராக்சின்
- தைராக்சின் பயன் : எலும்புகள் & நரம்பு மண்டல வளர்ச்சிக்கு
- பாராதைராய்டு சுரப்பது : பாராதைராக்சின்
- பாராதைராக்சின் : பயன் : கால்சியம், பாஸ்பரஸ் கட்டுப்படுத்தி எலும்பு வளர்ச்சிக்கு.
- தைராக்சின் ( குழந்தைகளுக்கு ) அதிகமாகச் சுரந்தால் ஏற்படும் கெடுதல் : கிரிட்டினிசம்
- தைராக்சின் குறைவாகச் சுரந்தால் ஏற்படும் கெடுதல் : முன்கழுத்துக் கழலை.
- நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு : நியூரான்.
- தூண்டல்களைப் பெறும் நியூரானின் பகுதி : டென்டிரைட்.
- நியூரானின் உடல் பகுதியின் பெயர் : சோமா.
- சொற்கள், உருவங்கள் போன்றவற்றைக் குழந்தைகள் பயன்படுத்தும் திறனின் பெயர் : குறியீட்டுச் சிந்தனை.
- குறியீட்டுச் சிந்தனையின் வளர்ச்சியின் பெயர் : தர்க்கமுறைச் சிந்தனை.
- குறியீடுகளில் வரிசைத் தொடரை ஏற்படுத்தி முடிவெடுக்கும் திறனின் பெயர் : தர்க்கமுறைச் சிந்தனை.
- குறியீட்டுச் சிந்தனை என்பது : பின்பற்றிச் செய்தல், பாவனை விளையாட்டு, மொழிப் பரிமாற்றம்.
- குறியீடுகளைக் கற்பதால் வளர்ச்சி அடையும் திறன் : சிந்தனைத் திறன்.
- குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிப்பதால் 'தானே தொடங்கும் திறன்' ஏற்படும் வயது : 2 - 3 ஆண்டுகள்.
- குழந்தை ஒரு பொருளுக்கு ஓர் எண்ணைத் தொடர்புபடுத்திப் பார்க்கும் : வயது 3 - 6.
- ஆரம்பக் கல்வியில் குழந்தைகள் ஒழுக்கம் பற்றிய சார்பு நோக்கத்தை அடையும் வயது : 11 - 12.
- ஆசிரியர் கருத்துகளைக் கூறினால் மறுப்பின்றி ஏற்றுக்
- கொள்ளும் பருவம் : ஆரம்பக் கல்வி நிலை
- ஒழுக்கப்பயிற்சியில் பெரும்பங்கு இதற்கு உண்டு :
- பார்த்துச்செய்தல்.
- அறிதல் திறன் வளர்ச்சி பற்றிக் கூறுபவர் : பியாஜே.
- பியாஜேயின் 'ஒருவருடைய அறிவுசார்' என்றசொல் குறிப்பது:ஸ்கீமா
- பியாஜே கூறும் அறிதல் திறன் வளர்ச்சியின் படிநிலைகள் : நான்கு.
- அறிதல் திறன் வளர்ச்சியின் முதல் படிநிலையின் பெயர் : புலன் இயக்கப்படுதல் / 0 - 2 ஆண்டுகள்.
- அறிதல் திறன் வளர்ச்சியின் இரண்டாம் படிநிலையின் பெயர் : மனச் செயல்பாட்டுக்கு முந்தைய நிலை / 2 - 7 ஆண்டுகள்.
- அறிதல் திறன் வளர்ச்சியின் மூன்றாம் படிநிலையின் பெயர் : கண்கூடாகப் பார்ப்பதைக் கண்டுணரும் பருவம் / சிந்தித்துச் செயல்படுதல் : 7 - 12 ஆண்டுகள்.
- அறிதல் திறன் வளர்ச்சியின் இறுதிப் படிநிலையின் பெயர் : முறையான மனச் செயல்பாட்டுப் பருவம் / எண்ணங்களின் அடிப்படையில் செயல்படுதல்: 12 ஆண்டுகளுக்கு மேல்.
- குழந்தைகள் 'பின்பற்றிக் கற்றலு'க்கு உதாரணமாக இருப்பவர்கள் : பெற்றோர்கள், ஆசிரியர்கள்.
- கற்றல் என்பது : இயக்கமுள்ள உள்ளார்ந்த செயல்.
- கருத்தியல் தோன்றுவது : 10 வயதிற்கு மேல்.
- ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு : பற்றுகள்.
- நல்லொழுக்கத்திற்கான விதைகள் ஊன்றும் கல்வி நிலை : ஆரம்பக் கல்விநிலை.
- கற்கும் பொருளுக்கு வலமாக அமைவது : இயற்கைப் பொருள்கள்.
- ஒழுக்க வளர்ச்சியைப் பற்றிக் கூறிய உளவியல் அறிஞர் : பியாஜே.
- மனித வளர்ச்சி என்பது : மரபு நிலை + சூழ்நிலை
- மாணவர்களின் சமூகப் பண்புகளை வளர்ப்பவை : அறிவு வளர்ச்சி & ஒழுக்க வளர்ச்சி
- குழந்தை பிறந்த 2 - 3 ஆம் ஆண்டுகளில் ஏற்படும் பிரச்சினை : சுதந்திரமாக இயங்குதல் / வெட்கப்படுதல்.
- குழந்தை பிறந்த 3 - 5 ஆண்டுகளில் ஏற்படும் பிரச்சினை : தானே செயலாற்றுதல் / குற்ற உணர்வு.
- பின்முதிர்ப் பருவத்தில் ஏற்படும் பிரச்சினை : நேர்மை அல்லது நம்பிக்கை : இழத்தல்.
- மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நனவு நிலை : மனவெழுச்சி ஆகும்.
- மனவெழுச்சியின் செயல்பாடு : உடல், உள்ளத்தைக் கிளர்ச்சி அடையச் செய்யும்.
- நிறையாளுமை பெற்றவரின் பண்புகள் : நம்பிக்கை, தன்னாட்சி, கடின உழைப்பு போன்றவை.
- குறையாளுமை பெற்றவரின் பண்புகள் : அவநம்பிக்கை, குற்ற உணர்வு, தாழ்வுணர்வு போன்றவை
- உடலால் செய்யும் செயல்கள் : நடத்தல், நீந்துதல்.
- பலபுலன்வழிக் கற்பதன் பயன் : வெகு நாள்கள் வரை நினைவில் இருக்கும்.
- பாடம் கற்பித்தலின் முதல் படி : ஆயத்தம்.
- நினைவு கூர்தலின் முதல் படிநிலை : கற்றல்.
- ஒருவரின் ஆளுமைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைவது : மனவெழுச்சி அதிர்வுகள்.
- மாணவர்களின் மனவெழுச்சிகளைக் கட்டுப்படுத்துதல், பயன்படுத்துதல், பொருத்தமாக வெளிப்படுத்துதல் ஆகியவற்றில் வழிகாட்டுவது : ஆசிரியரின் கடமை ஆகும்.
- அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய விரும்பக்கூடிய ஒரே மொழி : அன்பு.
- ஓர் இலக்கை அடைய முயன்று வெற்றி பெறும் உணர்ச்சி : மகிழ்ச்சி.
- தன்னையும் பிறரையும் கெடுத்து எப்பொழுதும் துன்பத்தை நீடிக்கச் செய்யும் உணர்வு : சினம்.
- சினங்களின் வகைகள் : 3 : திக்கற்ற சினம், பேச மறுக்கும் சினம், பழிவாங்கும் சினம்.
- ஓரளவு அச்சமும் சினமும் கலந்த சிக்கலான வீணான மனவெழுச்சி : பொறாமை.
- மனிதர்களிடம் காணப்படும் வெறுப்பூட்டும் எதிர்மறை மனவெழுச்சி : அச்சம்.
- நினைப்பதற்கும் நடப்பதற்கும் இடையே காணப்படும் முரண்பாடுகளின் மனவெழுச்சி : கவலை.
- பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை : தரும சிந்தனை
- பயம் என்பது உண்மை போல் தோன்றும் உணர்வு : பொய்.
- ஆரோக்கியமற்ற உறவு, தாழ்வு மனப்பான்மை : பிரச்சினையின் ஆணிவேர்.
- மனநலத்தின் வெளிப்பாடுகள் : உற்சாகமான மனநிலை, உணவில் திருப்தி, நல்ல உறக்கம்.
- திருடுதல் என்பது : நெறிபிறழ் நடத்தை
- பதற்றம் என்பது : மிதமான மனநோய்.
- மனச்சிதைவு என்பது : தீவிரமான மன நோய்.
- பொய்ப் பேசுதல் : பிரச்சினை நடத்தை
- ஒழுக்கமின்மை : பிரச்சினை நடத்தை
- ஆங்கிலத்தில் நடத்தையின் குறிப்பு எழுத்துகள் : S R
- பயம், பதற்றம், தாழ்வு மனப்பான்மை, துக்கம் காரணமாக ஏற்படும் நோய் : சுவாச மண்டல நோய்.
- தீவிர உணர்ச்சிகள் நரம்பு மண்டலத்தை அதிகமாக முடுக்குவதால், நாளமில்லாச் சுரப்பிகள் அதிக அளவில் சுரப்பதால் ஏற்படும் நோய் : நீரிழிவு நோய்.
- ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல், மனத்தினுள் அடக்குவதால் ஏற்படும் நோய் : ஜீரண மண்டல நோய்.
- தோல் அழற்சி, அரிப்பு, வீக்கம் போன்றவற்றால் ஏற்படும் நோய் : தோல் நோய்.
- மன அழுத்தம், மன உளைச்சல், அதிகளவு பயம் ஆகியவற்றால் ஏற்படும் நோய் : தசை, மூட்டு நோய்கள்.
- மன அழுத்தங்கள், பகைமை உணர்வு, குற்ற உணர்வுகளால் ஏற்படும் நோய் : இதய இரத்த நாள நோய் / உயர் இரத்த அழுத்தம்.
- மனத்தில் மறைத்து வைத்து தீவிரமான மன உணர்வுகளால் ஏற்படும் நோய் : மாதவிடாய் சார்ந்த நோய்
- புதிய சூழலோடு ஒத்துப் போகும் உறவின் பெயர் : இணக்கம்.
- பிறக்கும்பொழுது குழந்தையின் மூளையின் எடை : 350 கிராம்.
- பருவமடைந்தபின் மூளையின் எடை : 1260 - 1400 கிராம்.
- ஒருவன் தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் புரிந்து கொண்டு செயல்படும் திறன் : தன்னை அறிதல் திறன்.
- SWOT என்பதன் விரிவு : Strength Weakness Opportunity Threat
- ஒரு தனிப்பட்ட மன வன்மையின் பெயர் : கவனம் ஆகும்.
- ஒரு பொருளையோ செயலையோ தெளிவாக அறியச் செய்யப்படும் முயற்சியின் பெயர் : கவனித்தல்.
- மனத்தில் சேமித்து வைத்துள்ள விவரங்களின் பெயர் : நினைவு.
- பொருளுணர்ந்து கற்பதன் விளைவு : நீண்ட நாள் நினைவில் இருத்தல்.
- நம் புலன்களில் ஏற்படும் தூண்டல்கள் அனைத்தும் முதலில் செல்லும் பகுதி : குறுங்கால நினைவுப் பகுதி.
கருத்துகள்
கருத்துரையிடுக