தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

மகாத்மா காந்தியடிகள் நினைவு தினம்.





மகாத்மா  காந்தியடிகள் நினைவு தினம். 
சனவரி  -  30

                                      
                           "சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!"  என்னும் நாமக்கல்   கவிஞர் இராமலிங்கனாரின்   முழக்கத்திற்கேற்ப,   காந்தியடிகள் தமது சத்திய சோதனையில் இது பற்றி  "விடை பெற்றுக் கொள்கிறேன்" என்னும் இறுதி இயலில் கூறுகிறார்.  இதோ அவரது எழுத்துகளின் வழியே ...

                                                "சத்தியத்தைத்  தவிர வேறு கடவுள் இல்லை என்பதை, ஒரே மாதிரியான என்னுடைய அனுபவங்களில் எனக்கு உறுதியாக உணர்த்தி    யிருக்கின்றன.  சத்தியத்தைத் தரிசிப்பதற்குள்ள ஒரே மார்க்கம் அகிம்சைதான்  என்பதை  இந்த அத்தியாயங்களின் ஒவ்வொரு பக்கமும் வாசகருக்கு அறிவுறுத்த  வில்லையாயின், இந்த அத்தியாயங்களை எழுதுவதற்கு நான்    எடுத்துக்கொண்ட சிரமமெல்லாம் வீணாயின என்றே கொள்ளுவேன்.
                                           பிரபஞ்சம் அனைத்திலும் நிறைந்து நிற்பதாக சத்தியத்தை     நேருக்கு நேராக ஒருவர் தரிசிக்க வேண்டுமாயின், மிகத்  தாழ்ந்த உயிரையும் தன்னைப்போலவே நேசிக்க முடிந்தவராக அவர் இருக்க வேண்டும்.  அந்த நிலையை அடைந்துவிட ஆசைப்படுகிறவர் யாரும் வாழ்க்கையின் இந்தத் துறையிலிருந்து விலகி நின்று விட முடியாது.       
                                          தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொண்டு விடாமல், எல்லா உயிர்களிடத்திலும் தன்னை ஒன்றுபடுத்திக் கொள்ளுவது என்பது முடியாத காரியம்.  தம்மைத் தாம் தூய்மைப்படுத்திக் கொள்ளாமல் அகிம்சை தருமத்தை அனுசரிப்போம் என்பது வெறும் கனவாகவே முடியும்.
                                   மனத்தூய்மை இல்லாதார் என்றுமே கடவுளை அரித்தல் இயலாது.  ஆகையால், தம்மைக்த் தாமே தூய்மைப்படுத்திக் கொள்ளுவது என்பது, வாழ்க்கையின் இல்லாத துறைகளிலும் தூய்மை அடைவதாகும்.  தூய்மைப்படுத்திக் கொள்ளுவது என்பது வெகு விரைவில் மற்றவர்களுக்கும் தொத்திக்கொள்ளும் தன்மை உடையது ஆகையால், ஒருவர் தம்மைத் தாமே தூய்மைப் படுத்திக் கொள்வதனால், அவசியமாகத் தம்முடைய சுற்றுச் சார்பையும் தூய்மைப்படுத்தி விடுவதாகிறது.
                                    பூரணத் தூய்மையை ஒருவர் அடைவதற்கு, அவர் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் காமக்  குரோதங்களை அறவே நீக்கியவராக இருக்க வேண்டும்.  அன்பு, துவேஷம், விருப்பு வெறுப்பு என்னும் எதிர்ப்புச் சுழல்களினின்று அவர் வெளிப்பட்டவராகவும் இருக்க வேண்டும்.  அம்மூவகைத் தூய்மையையும் அடைவதற்காக இடைவிடாது நான் முயற்ச செய்து கொண்டு வருகிறேனாயினும், அந்த மூன்று தூய்மைகளும் இன்னும் என்னுள் இல்லை என்பதை நான் அறிவேன்.  இதனாலதான், இவ்வுலகத்தின் புகழுரைகளெல்லாம் எனக்கு இன்பம் தருவதில்லை; உண்மையில் அவற்றால் எனக்கு அடிக்கடி மணக்க கஷ்டமே உண்டாகிறது.  ஆயுத பலத்தைக் கொண்டு உலகத்தையே வெற்றி கொண்டு விடுவதை விட, உள்ளுக்குள் இருக்கும் காமத் குரோத உணர்ச்சிகளை வென்று விடுவது அதிகக் கஷ்டமாக எனக்குத் தோன்றுகிறது.
                                      இந்தியாவிற்குத் திரும்பியதிலிருந்து என் உள்ளத்தினுள்ளே மறைந்து கொண்டு தூங்கி கிடைக்கும் ஆசாபாசங்களை நான் அனுபவித்து வருகிறேன்.  அவை இன்னும் என்னிடம் இருந்து கொண்டு தான் ருக்கின்றன என்னுதட்டைப் பற்றிய எண்ணம் நான் தோல்வியுறும்படி செய்து விடவில்லையாயினும், அவமானப்படும்படிச் செய்கிறது.
                                      அனுபவங்களும் சோதனைகளும் என்னை நிலைபெற்றிருக்கச்    செய்து எனக்கு ஆனந்தத்தையும் அளிக்கின்றன.  ஆனால், இன்னும் நான் கடக்க வேண்டிய மிக்க கஷ்டமான பாதை என் முன்னாள் இருக்கிறது என்பதை அறிவேன்.       
                                 என்னை நான் அணுவிற்கும் அணுவாக்கிக் கொண்டு விட வேண்டும், தன்னுடன் உயிர் வாழ்வன எல்லாவற்றிற்கும் தன்னைக் கடையனாகத் தானே விரும்பி ஒரு மனிதன் வைத்துக் கொண்டு விடாத வரையில் அவனுக்கு விமோசனம் கிடையாது.  அடக்கத்தின் மிகத் தொலைவான எல்லையே அகிம்சையாகும்.
                                    தற்போதைக்கேயாயினும் வாசகரிடம் நான் விடைபெற்றுக் கொள்ளுகிறேன்.  மனம்,  வாக்கு,  காரியங்களில் அகிம்சை விரதத்தை எனக்கு அருளுமாறு சத்தியமேயான கடவுளை பிரார்த்திக்கிறேன்.  அந்தப் பிரார்த்தனையில் என்னுடன் கலந்து கொள்ளுமாறு வாசகரைக் கேட்டுக் கொண்டு விடைபெற்றுக் கொள்ளுகிறேன்." என்று நிறைவு செய்கிறார் மகாத்மா காந்தியடிகள்!

                        "மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் 
                          இனந்தூய்மை தூவா வரும்"  
என்று திருவள்ளுவரும்  

                            "எல்லாச் செல்வங்களையும் அளித்த ஆண்டவர் அதை                                                              அழிப்பதற்காகவே ஆணவத்தையும் அளித்தார்.  
                              வாக்கு  மனம் செயல் ஆகிய மூன்றும் வேறுபடாமல்  
                              ஒன்றிய நிலையில் வாழ்பவனே நல்ல மனிதன்' 
என்று  இராமலிங்க வள்ளலாரும்

                                "மனதில் உறுதி வேண்டும்;
                                  வாக்கினிலே உறுதி வேண்டும்;
                                  நினைவு நல்லது வேண்டும்" 
என்று பாரதியாரும் இதனையே  வழிமொழிகின்றனர்.   நாமும்  அவ்வழிகளைத்    தொடர்ந்து செல்லுவோமாக! 

                                            

                        மேலும் இன்று,காந்தியடிகளின் சீரிய சிந்தனைகளை ஒட்டியே தியாகிகள் தினம்  /  சர்வோதய தினம்.  /  தீண்டாமை ஒழிப்பு தினம்   என்றெல்லாம் இந்தியர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,