கிருபானந்த வாரியாரின் பக்கம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
போட்டுக் கொள்ளுங்கள் / சாப்பிடுங்கள்
( கிருபானந்த வாரியாரின் அனுபவம்
ஒரு சமயம் திருச்சியிலிருந்து நான் ஈரோட்டிற்கு இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். அந்த இரயில் பெட்டிகள் நீளமாக இருக்கும். அப்பெட்டியில் பிரயாணம் செய்யும் ஒரு வாலிபர் எல்லாரிடத்திலும் தமாஷாகப் பேசிக் கொண்டிருந்தார். நான் அவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து, "ஐயா! உங்களை ஒரு கேள்வி கேட்பேன். தாங்கள் யோசிக்காமல் பதில் சொல்ல வேண்டும்" என்று ஒரு போடு போட்டார். நான் யோசிக்காமல் பதில் சொல்லுமாறு இவர் சொல்லுகின்றார்! என்ன கேட்பாரோ என்று எண்ணித் திகைத்தேன்.
"நல்லது, கேளுங்கள்! என்று சொல்லிவிட்டுச் சடக்கர மந்திரத்தை மனத்திற்குள் சொல்லிக் கொண்டிருந்தேன். அறிவுக்கறிவாக நின்று ஆண்டவன்தானே உணர்த்த வேண்டும்" என்று எண்ணினேன்.
அவர், "சட்டை போட்டுக் கொள்ளுங்கள்; அங்கவஸ்திரம் போட்டுக் கொள்ளுங்கள்; உருத்திராட்ச மாலை போட்டுக் கொள்ளுங்கள், செயின் போட்டுக் கொள்ளுங்கள் என்று நாம் கூறுகின்றோம். வாய் வழியாக உண்ணுகின்ற பாயாசம் சாப்பிடுங்கள் என்று கூறுகின்றோம். வெற்றிலைப்பாக்கைச் சாப்பிடுங்கள் என்று கூறாமல் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றோமே! இதற்கு என்ன காரணம்? யோசிக்காமல் சொல்லுங்கள்" என்றார்.
நான் உடனே பதில் கூறினேன். "பசியை ஆற்றுகின்ற உணவுப் பொருள்களைச் சாப்பிடுங்கள் என்றும் அலங்காரப்பொருள்களாகிய ஆடை, அணிகலன்களை போட்டுக் கொள்ளுங்கள் என்றும் கூறுகின்றோம்.
வயிறு நிறைய உண்டபின் வாய்க்கு அலங்காரமாக வெற்றிலை பாக்கைப் போட்டுக் கொள்கின்றோம். கண்ணுக்கு மை போட்டுக் கொள்வது போல் வாய்க்கு அலங்காரமாகத் தாம்பூலம் போட்டுக் கொள்கின்றோம். ஆகவே,தாம்பூலம் போட்டுக் கொள்ளுங்கள் என்ற வார்த்தை, அலங்காரப் பொருள் என்று குறிப்பிடுகின்றது. நமது பெரியோர்களின் பேச்சில் நுட்பங்கள் இருக்கின்றன" என்று கூறினேன். அதைக் கேட்டு, அவர் ஆச்சரியம் அடைந்தார். "ஐயா! நான் ஓர் ஆயிரம் பேரைக் கேட்டிருப்பேன். எனக்கும் விஷயம் விளங்காமல் தான் கேட்டேன். யாரும் சரியான பதில் சொல்லவில்லை. தாங்கள் கூறிய பதில் எனக்கு வெகு திருப்தியைத் தருகிறது" என்று கூறினார்.
பாருங்கள்! "விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்" என்னும் திருவள்ளுவரின் கூற்றிற்கு ஏற்ப, கிருபானந்த வாரியாரின் பதில் அமைந்துள்ள நயத்தை!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
Alangaram and required, easy definition
பதிலளிநீக்குAlangaram and required, easy definition
பதிலளிநீக்குAlangaram and required, easy definition
பதிலளிநீக்குமிக்க நன்றி!
பதிலளிநீக்கு