தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

இறையனார் அகப்பொருள்

இறையனார் அகப்பொருள் 

v  வேறு பெயர் - களவியல்
v  தொல்காப்பியத்துக்குப் பின்னர் தோன்றிய நூல்
v  இயற்றியவர் இறையனார்.
v  இந் நூலின் உரையானது 'மதுரை ஆலவாய்ச் சோமசுந்தரக் கடவுள்' என்று  இறையனாரைக் குறிப்பிடுகின்றது.
v  களவியல் என்பது 'சிறப்பினால் பெற்ற பெயர் என்றும், ‘களவு கற்பு என்னும் கைகோள் இரண்டனுள் களவினைச் சிறப்புடைத்தென்று வேண்டும் இவ்வாசிரியன்’ என்றும் இந்நூலின் உரையாசிரியர் நக்கீரர் குறிப்பிடுகின்றார்.
v  நூல் தோன்றிய வரலாற்றை, “அக்காலத்துப் பாண்டியனும் சங்கத்தாரும்
v  பொருளிலக்கணம் பெறாது, இடர்ப்படுவாரைக் கண்டு, 'ஆலவாயிற் பெருமான் அடிகளால்' வெளிப்படுத்தப்பட்டது” என்று சுருக்கமாகக் கூறுகின்றது.
v  நூல் அமைப்பு - பிரிவுகள் - இரண்டு;  களவு & கற்பு
v  நூற்பாக்கள் - 60;  களவு - 33  & கற்பு - 27 நூற்பாக்கள்.
v  ஒட்டக்கூத்தர், ‘அமுத சூத்திரம் அறுபதாய்ச் சமை நூல்’ என்று
v  குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழின் காப்புச் செய்யுளில் பாராட்டுகிறார்.
v  இறையனார் என்ற பெயர், நூல் தோன்றிய கதை பிறப்பதற்குக் காரணமாய் இருந்தது என்பர்.
v  குறுந்தொகையில் இரண்டாம் பாடலான, 'கொங்குதேர் வாழ்க்கை'  என்னும் பாடலை இயற்றிய இறையனார், நக்கீரர் மற்றும் பாண்டிய மன்னன் ஆகியோரை இணைத்துத் தோன்றிய கதை போன்று இந்நூலிற்கும் கூறப்படுகிறது.
v  மு வை. அரவிந்தன், 'உரையாசிரியர்கள்' என்னும் நூலில் கூறுவது
 “அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது.  செல்லவே பசிகடுகுதலும், அரசன் சிட்டரையெல்லாங் கூவி, வம்மின், யான் உங்களைப் புறந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது. நீயிர் நுமக்கு அறிந்தவாறு புக்கு, நாடு நாடாயின ஞான்று என்னை யுள்ளி வம்மின்” என்றான்.
என, அரசனை விடுத்து எல்லாரும் போயின பின்றைக் கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்த பின்னர், நாடு மலிய மழை பெய்தது.
பெய்தபின்னர் அரசன், “இனி நாடு நாடாயிற்றாகலின், நூல் வல்லாரைக் கொணர்க” என்று எல்லாப்பக்கமும் ஆட்போக்க, எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைக் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்கும் தலைப்பட்டிலேம்” என்று வந்தார்.
வர அரசனும் புடைபடக்கவன்று, “என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே; பொருளதிகாரம் பெறேமேயெனின், இவை பெற்றும் பெற்றிலேம்” எனச் சொல்லா நிற்ப, மதுரை ஆலவாயில் அழல்நிறக் கடவுள் சிந்திப்பான்: “என்னை பாவம்! அரசர்க்குக் கவற்சி பெரிதாயிற்று; அது தானும் ஞானத்திடைய தாகலான், யாம் அதனைத் தீர்க்கற் பாலம்” என்று இவ்வறுபது சூத்திரத்தையும் செய்து மூன்று செப்பிதழகத்து எழுதிப் பீடத்தின் கீழிட்டான்.” என்று கூறுகின்றார்.
v  முதல் நூல் - சோமசுந்தரக் கடவுள் அருளியதாகக் கூறப்படும் இந்நூலை,
v  ‘முதல்நூல்’ என்றே உரை குறிப்பிடுகின்றது.
v  ஆனால், இந்நூல்,  தொல்காப்பியத்தைப் பின்பற்றி அமைந்துள்ளது.
v  தொல்காப்பியம் கூறும் அகப்பொருள் இலக்கணத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் கூறுகின்றது.
v  எனவே, இதனைத் தொல்காப்பியத்தின் வழி நூல் என்பது பொருந்தும் என்றும்
மு. வை. அரவிந்தன் குறிப்பிடுகிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,