தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

UGC-NET டிசம்பர் 2005 தாள்-II – தமிழ் வினாத்தாள் விடைகள் TAMIL PAPER II Original Questions Answers

 

கற்பது தமிழ்

UGC-NET

டிசம்பர் 2005 - தேர்வு வினாத்தாள்

தாள்-II – தமிழ்

TAMIL

PAPER II

Note  :  This Paper contains Fifty ( 50 ) objective type questions of TWO ( 2 ) marks each.  All questions are Compulsory

குறிப்பு  :  இந்த வினாத்தாளில் ஐம்பது (50) விடை தெரிவினாக்கள் உள்ளன. ஒவ்வொரு வினாவும் இரண்டு (2) மதிப்பெண்கள் கொண்டது. அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.

 

1. ஆற்றுப்படை இலக்கியங்களின் எண்ணிக்கை

          A) 5                                                                 B) 6

C) 4                                                                 D) 3 

2. புனிதவதியார் என்றழைக்கப்பட்டவர்

A) திலகவதியார்                         B) காரைக்காலம்மையார்

C) நாச்சியார்                                 D) மங்கையர்க்கரசியார் 

3. ஓரின மன்னர்கள் பற்றிய சங்க இலக்கியம்

A) புறநானூறு                                B),பரிபாடல்

            C) பதிற்றுப்பத்து                         D) பத்துப்பாட்டு 

4. கபிலர் இயற்றியது

A) இனியவை நாற்பது              B) களவழி நாற்பது

C) கார் நாற்பது                            D) இன்னா நாற்பது 

5.'நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்'என்று கூறியவர்

A)திருத்தக்க தேவர்                                C) கம்பர்

B) இளங்கோ                                              D) சேக்கிழார் 

6. 'அருள்மொழித்தேவர்' என்னும் இயற்பெயரினர்

A) சேக்கிழார்                                            B) சாத்தனார்

C) கம்பர்                                                      D) திருத்தக்க தேவர்

 7. விருத்தப்பாக்களால் ஆன காப்பியம்

A) சிலம்பு                                                    B) மேகலை

C) சிந்தாமணி                                          D) வளையாபதி

 8. 'கவிராட்சதன்' எனப்பட்டவர்

A) புகழேந்தி                                              B) ஔவையார்

C) காளமேகம்                                            D) ஒட்டக்கூத்தர்

 9. வச்சணந்திமாலை என்பது

A) சிற்றிலக்கியம்                                    B) சித்திரகவி

C) வெண்பாப் பாட்டியல்                      D) சமய நூல்

 10.வீரசைவம் சார்ந்தவர்

A) இராமலிங்க அடிகள்                         B) குமர குருபரர்

C) தாயுமானவர்                                       D) அருணகிரிநாதர்

 11. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை

A) மறைமலையடிகள்                            B) ரா.பி.சேதுப்பிள்ளை

C) பேராசிரியர் வையாபுரிப்பிள்ளைD) பேராசிரியர் சுந்தரம்பிள்ளை

  12. ஆய்வேட்டின் அடிப்படையில் முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர்

A) அ. சிதம்பரநாதன் செட்டியார்

B) டி.கே.சிதம்பரநாத முதலியார்

C) பம்மல் சம்பந்த முதலியார்

D) டாக்டர் வா.செ. குழந்தைசாமி

 13. தமிழ்ப் பேரகராதியின் பதிப்பாசிரியர்

A) பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை

B) வீரமாமுனிவர்

C) ஜி.யூ. போப்

D) தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் 

14. 'இராசராசன்" விருதினைப் பெற்றவர்

A) மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

B) சுத்தானந்த பாரதியார்

C) பாரதிதாசன்

D) கவிமணி 

15.தமிழில் வெளிவந்த முதல் இதழ்

A) சுதேசமித்திரன்                                   B) குயில்

C) தினமணி                                               D) தமிழ் மேகசீன்

 16.கப்பல் கட்டும் தொழில் நடைபெற்ற அரசர் காலம்

A) சேரர்                                                        B) பல்லவர்

C)சோழர்                                                     D) பாண்டியர்

 17. மொழி முதற் காரணமாம் அணுத்திரள் ஒலி என்பது

A) எழுத்து                                                    B) சொல்

C) மாற்றொலி                                           D) உருபன்

18. 'முட்டாச்சிறப்பின் பட்டினம்'

A) பூம்புகார்                                               B) தூத்துக்குடி

C) உறையூர்                                                D) காயல்பட்டினம்

 19.போர்ச் செய்திகளைத் தரும் நூல்

A) கார் நாற்பது                                        B) களவழி நாற்பது

C) இன்னா நாற்பது                                 D) இனியவை நாற்பது

 20. யாண்டு வாழ்ந்தவர் பலவாயினும் நரையின்றி

A) ஔவையார்                                         B) முடத்தாமக் கண்ணியார்

C) பிசிராந்தையார்                                D) காரைக்காலம்மையார்.

 21. உறுதிக் கூற்று  :  சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச்    

                                          செய்யுள் எனப்படும்.

      காரணம்            : சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் உரை   

                                         எழுதியுள்ளார்.

A) (உ), (கா) இரண்டும் சரி                   B) (உ) சரி, (கா) சரியன்று

C) (உ), (கா) இரண்டும் சரியல்ல        D) (உ) சரியன்று, (கா) சரி

 22. உறுதிக்கூற்று : திவாகரம் 'பூரண நிகண்டு' எனப்படும்.

      காரணம்                 :  நிகண்டுகளுக்குரிய முப்பெரும் தொகுதிகள்  

                                       திவாகரத்தில் இடம் பெற்றுள்ளன.

A) (உ), (கா) இரண்டும் சரி                   B) (உ) சரி, (கா) தவறு

C) (உ) தவறு, (கா) சரி                             D) (உ), (கா) இரண்டும் சரியல்ல

 23. உறுதிக்கூற்று : வேத்தியல் என்பது பண்டைய நாடக வகைகளுள்  

                                      ஒன்று.

      காரணம்           : அரச குடும்பத்தினர் பார்ப்பதற்காக நடத்தப்பட்டது

A) (உ), (கா) இரண்டும் தவறு              B) (உ) சரி, (கா) தவறு

C) (உ) தவறு, (கா) சரி                             D) (உ), (கா) இரண்டும் சரி

 24. உறுதிக்கூற்று : 'வாடாமலர்' என்பதில் உள்ள 'வாடா' என்பது  

                                       ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும்.

     காரணம்           : இறுதி எழுத்து ஒழிந்தது; உடன்பாட்டுப் பொருளில்         

                                     வருவது:   பெயரை அவாவி நிற்பது                         

A) (உ), (கா) இரண்டும் சரி                   B) (உ), (கா) இரண்டும் தவறு

C) (உ) சரி, (கா) தவறு                             D) (உ) தவறு, (கா) சரி

 25. உறுதிக் கூற்று : பாரதி தன் படைப்பொன்றுக்குப் 'பஞ்சாலி சபதம்'   

                                       எனப் பெயரிட்டார்.

    காரணம்             : இது திரௌபதியின் சபதத்தை மையமாகக்       

                                     கொண்டது.

A) (உ), (கா) இரண்டும் சரி                   B) (உ), (கா) இரண்டும் சரியல்ல

C) (உ) சரி, (கா) சரியன்று                     D) (உ) சரியன்று, (கா) சரி

 26. உறுதிக்கூற்று : தமிழ், உயர்தனிச் செம்மொழி என்னும் தகுதி

                                      சான்றது.

     காரணம் : இந்திய அரசு தமிழுக்குச் செம்மொழித் தகுதியை

                           வழங்கியுள்ளது.

A) (உ), (கா) இரண்டும் சரி                   B) (உ), (கா) இரண்டும் சரியல்ல

C) (உ) சரி, (கா) சரியன்று                     D) (உ) சரியன்று, (கா) சரி

 27. உறுதிக்கூற்று சிவப்பிரகாசர் தன் நூலொன்றுக்கு 'நீரோட்டக யமக   

                                       அந்தாதி எனப் பெயரிட்டார்.

      காரணம்          :    இது இதழுகல் யமக அந்தாதி

A) (உ), (கா) இரண்டும் தவறு              B) (உ) தவறு, (கா) சரி

C) (உ) சரி, (கா) தவறு                             D) (உ), (கா) இரண்டும் சரி

 28. உறுதிக்கூற்று : ஔவையார் இயற்றிய நீதிநூல் ஒன்றிற்கு ஆத்திச்சூடி

                                      என்று பெயர்.

     காரணம்           : ஆத்திமாலையைச் சூடியபடி அவர் அதனைப்  

                                     பாடினார்.

A) (உ), (கா) இரண்டும் சரி                   B) (உ), (கா) இரண்டும் சரியல்ல

C) (உ) சரியன்று, (கா) சரி                     D) (உ) சரி, (கா) சரியன்று

 29. உறுதிக்கூற்று  :  நொண்டி நாடகம் 'ஒற்றைக் கால் நாடகம்' எனவும்  

                                        வழங்கப்படும்.

       காரணம்           : தீய வழிகளில் நடந்த ஒருவர் துன்புற்றுக் காலொன்று

                                      இழந்து வாடுவதாகப் பாவித்துப் பாடப்படுவது

A) (உ), (கா) இரண்டும் தவறு              B) (உ) சரி, (கா) தவறு

C) (உ), (கா) இரண்டும் சரி                    D) (உ) தவறு, (கா) சரி

 30. தொல்காப்பிய எழுத்ததிகார வரிசை :

A) நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல். புணரியல்

B) பிறப்பியல். நூன்மரபு, மொழிமரபு புணரியல்

C) பிறப்பியல். புணரியல், மொழிமரபு, நூன்மரபு

D) நூன்மரபு. பிறப்பியல், புணரியல், மொழிமரபு

 31. இடமலைவின் வரிசை :

A) ஆறு, மலை, நாடு

B) ஆறு, நாடு, மலை

C) நாடு, மலை, ஆறு

D) மலை, நாடு, ஆறு

 32. முதலாழ்வார்களின் வரிசை :

A ) பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார்

B ) பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்

C ) பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார்

D ) பூதத்தாழ்வார், பேயாழ்வார், பொய்கையாழ்வார்

 33. மொழியியல் பிரிவுகள்

A ) உருபனியல், தொடரியல், உருபொலியனியல், ஒலியனியல்

B ) உருபனியல், ஒலியனியல், உருபொலியனியல், தொடரியல்

C ) ஒலியனியல், உருபனியல், உருபொலியனியல், தொடரியல்

D ) ஒலியனியல், தொடரியல், உருபொலியனியல், உருபனியல்

 34. தன்மையணியின் வகை :

A ) சாதி, தொழில்,குணம்,பொருள்

B ) பொருள், தொழில், சாதி, குணம்

C ) பொருள், குணம், சாதி, தொழில்

D ) தொழில், சாதி, குணம், பொருள்

 35. தொல்காப்பியரின் நிலத் தெய்வ வரிசை:

A ) மாயோன், வேந்தன், சேயோன், வருணன்

B ) வருணன், வேந்தன், மாயோன், சேயோன்

C ) மாயோன், சேயோன், வேந்தன், வருணன்

D ) மாயோன், வருணன், வேந்தன், சேயோன்

 36. சைவ சித்தாந்த சாத்திரத்தை முன்நிறுத்தும் வெண்பாவில் காணலாகும் வரிசை:

A ) உந்தி, போதம், சித்தியார், களிறு

B ) உந்தி, களிறு, போதம், சித்தியார்

C ) களிறு, போதம், உந்தி, சித்தியார்

D ) சித்தியார், களிறு, உந்தி, போதம்

 37. ஆற்றுப்படை குறித்த தொல்காப்பியர் நூற்பா:

A ) பாணர், விறலி, பொருநர் கூத்தர்

B ) பாணர், பொருநர், கூத்தர், விறலி

C ) விறலி, கூத்தர், பாணர், பொருநர்

D) கூத்தர், பாணர், பொருநர், விறலி

 38. பொருத்துக :

A ) ஞானசம்பந்தர்                       i) வன்தொண்டர்

B ) திருநாவுக்கரசர்                     ii) திருவாதவூரர்

C ) சுந்தரர்                                       iii) தாண்டக வேந்தர்

D ) மாணிக்கவாசகர்                 iv) திராவிடசிசு

 (a)  (b)  (c)  (d)                                   (a)  (b)  (c)  (d)

A) (iv)  ()  (i)  (ii)                             B) (iii)  (iv)  (i)  (i)

C) (iv)  (iii)  (i)   (ii)                            D) (ii)  (iv)   (i)  (ii)

 39. பொருத்துக :

a) பெரும்பாணாற்றுப்படை   i) நக்கீரர்

b) பொருநராற்றுப்படை           ii) நத்தத்தனார்

c) திருமுருகாற்றுப்படை            iii)முடத்தாமக்கண்ணியார்

d) சிறுபாணாற்றுப்படை         iv) உருத்திரங்கண்ணனார்

                 (a)  (b)  (c)  (d)                                  (a)  (b)  (c)  (d)

A) (iv)  (ii)  (i)   (ii)                             B) (i)    (iii)  (iv) (ii)

C) (iv)  (iii) (i)   (ii)                             D) (iii)  (iv) (i)   (i)

 40.பொருத்துக :

a) அகவற்பா                                  i) செப்பலோசை

b) கலிப்பா                                      ii) தூங்கலோசை

c) வஞ்சிப்பா                                 iii) துள்ளல் ஓசை

d) வெண்பா                                   iv) அகவலோசை

                 (a)  (b)  (c)  (d)                                  (a)  (b)  (c)  (d)

A) (iv)  (ii)  (iii) (i)                              B) (iv)  (i)   (ii)  ( iii)

C) (iv)  (iii) (i)   (ii)                             D) (iv)  () (ii)  (i)

41. பொருத்துக :

            a) வீரசோழியம்                            i) வீரமாமுனிவர்

b) இலக்கண விளக்கம்              ii)சாமிகவிராசர்

c), தொன்னூல் விளக்கம்          iii) புத்தமித்திரர்

d) சுவாமிநாதம்                            (iv) வைத்தியநாத தேசிகர்

      (a)  (b)  (c)  (d)                                  (a)  (b)  (c)  (d)

A)  (ii)  (iv) (i)  (iii)                             B) (iii)  (i)  (iv)  (ii)

C)  (iii)  (ii)  (i) (iv)                             D) (iii)  (iv) (ii)  (i)

 42. பொருத்துக :

a) The Pilgrims Progress                  i)

b) The Light of Asia                          ii) விரும்பிய வண்ணமே

c) The Secret Way                             iii) ஆசிய ஜோதி

d) As you like it                                 iv) இரட்சணிய யாத்திரிகம்

       (a)  (b)  (c)  (d)                                  (a)  (b)  (c)  (d)

A)  (iv)  (i)  (iii)  (ii)                            B)  (iv)  ()  (i)  (ii)

C)  (iv)  (iii) (ii)  (i)                             D)  (iv)  (ii)   (i)  ()

 43. பொருத்துக :

            a) திவாகரம்                                   i) இலக்கணம்

b) கரித்துண்டு                              ii) காப்பியம்

c) அவிநயம்                                    iii) நிகண்டு

d) நீலகேசி                                      iv) நாவல்

       (a)  (b)  (c)  (d)                                  (a)  (b)  (c)  (d)

A)  (iii)  (i)   (ii)  (iv)                           B)  ()  (ii)  (i)   (iv)

            C)  ()  (iv) (i)   (ii)                            D)   (ii)  (ii)  (iv)  (i)

 44. பொருத்துக :

a) குறுந்தொகை                           i) உப்பூரிகுடிகிழார்

b) நற்றிணை                                 ii) கூடலூர்கிழார்

c) அகநானூறு                                iii) பன்னாடு தந்த பாண்டியன்

d) ஐங்குறுநூறு                              iv) பூரிக்கோ

        (a)  (b)  (c)  (d)                                  (a)  (b)  (c)  (d)

A)   (iv)  (i)  (iii)  (ii)                           B)   (iv)  (ii) (iii)  (i)

C)   (iv)  (i)   (ii)  (iii)                          D)  (iv)  (iii)  (i)  (ii)

 பின்வரும் பகுதியைப் படித்துப் பார்த்துத் தொடர்ந்து இடம்பெற்றுள்ள வினாக்களுக்கு ஏற்ற விடையைச் சுட்டுக.

பிள்ளைத் தமிழ்

சாதகத்தை முதலாக வையாது பிள்ளைக் கவியை முதலாகக் கொண்டு எண்ணுவதும் உண்டு. இதனைப் பிள்ளைப்பாட்டு எனவும், பிள்ளைத் தமிழ் எனவும் வழங்குவர்.

 குழவி மருங்கினும் கிழவதாகும் என்ற தொல்காப்பியப் புறத்திணையியல் நூற்பாவே இதன் அடிப்படை என்பர்.

 கண்ணனைக் குழந்தையாக எண்ணிப் பலவாறாகப் பாடிய பெரியாழ்வாரும், இராமனைக் குழந்தையாக எண்ணிப் பாடிய குலசேகராழ்வாரும் பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகள். பெரியாழ்வார் திருமொழியில் தாலப்பருவம், அம்புலிப் பருவம், செங்கீரை, சப்பாணி, தளர்நடை, அச்சோப் பருவம், புறம்புல்கள், பூச்சிக்காட்டல், முலையுண்ணல், காதுகுத்தல், நீராட்டல், குழல்வாரக் காக்கையை வாவெனல், கோல் கொண்டு வா எனல், பூச்சூட்டல், காப்பிடல் முதலிய பிள்ளைத் தமிழ்ச் சாயற்பகுதிகள் உள. குலசேகராழ்வார் இராமனின் தாலப் பருவமும் கண்ணனின் வருகைப் பருவமும் பாடினார்.

நாச்சியார் திருமொழியில் சிற்றில் சிதைத்தல், திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் சப்பாணிப் பருவம், வெண்ணையை உண்ட மாட்சி ஆகியன கூறப்பட்டுள்ளன.

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் இயற்றிய குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் தான் முதலில் தோன்றிய முழுமையான தனித்த பிள்ளைத் தமிழ் நூல். இதுவரை 150க்கும் மேற்பட்ட பிள்ளைத் தமிழ் நூல்கள் தோன்றியுள்ளன. பாட்டியல் நூல்களில் பிள்ளைத்தமிழ் இலக்கணம் பற்றிய நூற்பாக்கள் 42 உள.

ஆண்பாற் பிள்ளைத் தமிழ்ப் பருவங்கள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பத்து.

பெண்பாற் பிள்ளைத் தமிழ்ப் பருவங்கள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம்,வாரானை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல் ஆகிய பத்து.

3ஆம் திங்களில் தொடங்கி 21ஆம் திங்கள் வரை பருவத்துக்கு 2 திங்களாகக் கொண்டு பிள்ளைத் தமிழ் பாடப்பெறும் என்பர். இக்கால வரையறை மாறுபடுதலும் உண்டு. பொதுவாக ஒரு பருவத்துக்குப் பத்துப் பாடல்கள் எனப் பத்துப் பருவத்துக்கும் சேர்ந்து நூறு பாடல்கள் பிள்ளைத் தமிழில் இடம் பெறும்.

            பிள்ளைப்பாட்டே தெள்ளிதின் கிளப்பின்

மூன்றுமுதலா மூவேழ் அளவும்

ஆன்ற திங்களின் அறைகுவர்நிலையே

-       பன்னிருபாட்டியல்

பத்து உறுப்பாய் ஒவ்வொன்று விருத்தம்

பப்பத்தாகப் பாடல் என்ப

-        தொன்னூல் விளக்கம்

சிலர் கடைசி மூன்று பருவங்கட்கும் முறையே 3, 5, 7ஆம் ஆண்டுகள் உரியவை என்பர். பிள்ளைத் தமிழ்ப் பாடல் எண்ணிக்கை தேவர்க்கு நூறும், அந்தணர்க்குத் தொண்ணூறும், அரசருக்கு எண்பதும், வைசியருக்கு எழுபதும், வேளாளருக்கு அறுபதும் ஆம் என்னும் பிரபந்த மரபியல் (3).

பிள்ளைத் தமிழுக்குரிய யாப்புவகை

பெரும்பாலும் விருத்தமே, பிறவும் வரலாம்

அகவல் விருத்தமும் கட்டளை ஒலியும்

கலியின் விருத்தமும் கவின்பெறு பாவே

-       பன்னிரு பாட்டியல்

பிறவா யாக்கைப் பெரியோனாதலின் சிவனுக்குப் பிள்ளைத்தமிழ் பாடுவதில்லை. விநாயகர், முருகன், திருமால், உமை, அனுமான் எனத் தெய்வங்களின் மேல் பாடப்பட்டவை மிகுந்துள்ளன .

அம்பலவாணர் பிள்ளைத் தமிழ் என்பது ஆசிரியர் மேலது. சிவந்தெழுந்த பல்லவராயன் பிள்ளைத் தமிழ் புலவர் பற்றியது. இராசாசி பிள்ளைத் தமிழ் தலைவர் மேலது.  பிள்ளைத் தமிழ் நூல்களில் சிறந்தவை:

குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ் ஆகியவை.   காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டு.

 வினாக்கள்

45. ஆண்பாற் பிள்ளைத்தமிழில் இடம் பெறுபவை

1 ) அம்புலி                                                  2 )  சிறுதேர்

3 ) சப்பாணி                                              4 ) கழங்கு

கீழே தரப்பட்டுள்ள விடைதெரி குறிப்பிலிருந்து விடையைக் கண்டு பிடிக்கவும்.

A) (1),  (2) சரி                                              (B) (1),  (2),  (3) சரி

C) (1),  (3),  (4) சரி                                       (D) (2),  (3),  (4) சரி

 46. பெரியாழ்வார் திருமொழியில் இடம்பெறும் பகுதிகள்

1.தாலப்பருவம்                                        2.காதுகுத்தல்

3. ஊசல்                                                        4. பூச்சூட்டல்

 கீழே தரப்பட்டுள்ள விடைதெரி குறிப்பிலிருந்து விடையைக் கண்டுபிடிக்கவும்.

A) (1), (4) சரி                                               B) (1), (2), (4) சரி

C) (1), (2), (3) சரி                                         (D) (1),  (3) சரி

 47. உறுதிக் கூற்று : சிவனுக்குப் பிள்ளைத் தமிழ் பாடுவதில்லை.

     காரணம்             :அவன் பிறவா யாக்கைப் பெரியவன்

A) (உ), (கா) இரண்டும் சரியல்ல        B) (உ) சரி, (கா) சரியன்று

C) (உ) சரியன்று, (கா) சரி                     D) (உ), (கா) இரண்டும் சரி

 48. பிள்ளைத்தமிழின் முதன் மூன்று பருவங்கள்

A) காப்பு, தால், செங்கீரை                  B) தால், காப்பு, செங்கீரை

C) காப்பு, செங்கீரை, தால்                   D) தால், செங்கீரை, காப்பு

  49. பொருத்துக :

a) கண்ணன்                                              i) ஒட்டக்கூத்தர்

b) குலோத்துங்கன்                                  ii) குமரகுருபரர்

c) இராமன்                                                  iii) பெரியாழ்வார்

d) மீனாட்சியம்மை                                 iv) குலசேகரர்

 சரியான விடையைத் தெரிவு செய்க.

      (a)  (b)  (c)  (d)                                             (a)  (b)  (c)  (d)

A) (iv)  (iii)  (ii)  (i)                                         B) (iii)  (i)   (iv) (ii)

            C) (iii)  (ii)   (i)  (iv).                                       D) (ii)   (ii) (iv)  (i)

 50. பொருத்துக :

a) நாச்சியார் திருமொழி                     i) வெண்ணெய் உண்டமாட்சி

b) பெரியாழ்வார்                                    ii) வருகைப்பருவம்

c) திருமங்கையாழ்வார்                       iii) சிற்றில்சிதைத்தல்

d) குலசேகராழ்வார்                               iv) அம்புலிப்பருவம்

 சரியான விடையைத் தெரிவு செய்க.

     (a)  (b)  (c)  (d)                                                (a)  (b)  (c)  (d)

A) (ii)  (iv)  (i)  (iii)                                         B)  (ii)  (iii)  (iv)  (i)

C) (iii  )(iv)  (i)  (ii)                                         D)  (iii)  (ii)   (i)  (iv)

Answers:

1

A

2

B

3

C

4

D

5

B

6

A

7

C

8

D

9

C

10

B

11

A

12

A 

13

A

14

B

15

D

16

C

17

A

18

A

19

B

20

C

21

A

22

D

23

D

24

A

25

A

26

A

27

C

28

D

29

C

30

A

31

D

32

D

33

C

34

C

35

C

36

B

37

D

38

A

39

C

40

D

41

A

42

B

43

C

44

D

45

B

46

B

47

D

48

C

49

B

50

C

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,