தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

College TRB Tamil Model Descriptive Questions with Answers - கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு மாதிரி வினாத்தாள்

 

கற்பது தமிழ்

கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு

விளக்க முறை வினாக்கள்

முக்கியமான பாடல் வரிகள்

காப்பியங்கள்

முத்தொள்ளாயிரம்  &  பெருங்கதை

 

முத்தொள்ளாயிரம்

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள்

ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் : 2,700

தொள்ளாயிரம் என்ற சிற்றிலக்கிய வகை :  எண் செய்யுள் என்று பாட்டியல் நூல்கள்

“ஊரையும் பேரையும் உவந்தெண் ணாலே,

சீரிதிற் பாடல்எண் செய்யு ளாகும்”  : இலக்கண விளக்கப்பாட்டியல்

கிடைப்பவை

கடவுள் வாழ்த்து  :  ஒரு பாடல்

சேரன்                     :  22

சோழன்                 :  29

பாண்டியன்         :  56

·         மூவேந்தர்களின் நாடு, அரண், படைச் சிறப்பு, போர்த்திறம், வீரம், ஈகை முதலான  செய்திகள்

·         மன்னர்களைப் புகழ்வதற்குக் கைக்கிளை என்னும் அகத்திணைப்

·         பெரும்பான்மையான பாடல்கள் பெண்பாற் கைக்கிளையாகவே..... 

கடவுள் வாழ்த்து  :  முக்கண்ணனான சிவபெருமான் பற்றியது. 

மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை

முன்னம் படைத்த முதல்வனைப் – பின்னரும்

ஆதிரையான் ஆதிரையான் என்றென்(று) அயருமால்

ஊர்திரைநீர் வேலி உலகு 

சேர நாடு

தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்

தேயத் திரிந்த குடுமியவே – ஆய்மலர்

வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்

கண்டுலாஅம் வீதிக் கதவு

 வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேல் கண்டவர்

மாமையை அன்றோ இழப்பது – மாமையிற்

பன்னூறு கோடி பழுதோ,என் மேனியிற்

பொன்னூறி யன்ன பசப்பு

 

கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில்

அடைத்தாள் தனிக்கதவம் அன்னை – அடைக்குமேல்

ஆயிழையாய் என்னை அவன்மேல் எடுத்துரைப்பார்

வாயும் அடைக்குமோ தான் 

மல்லல்நீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினும்

சொல்லவே வேண்டும் நமகுறை - நல்ல

திலகங் கிடந்த திருநுதலாய்! அஃதால்

உலகங் கிடந்த இயல்பு.

 

நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய

ஊரிரே என்னை உயக்கொண்மின் - போரிற்

புகலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக்

கழலுமென் னெஞ்சங் கிடந்து.

 அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்

புள்ளினம்தம் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு” 

சோழ நாடு

திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர்

இறந்துபடின் பெரிதாம் ஏதம் - உறந்தையர்கோன்

தண்ணார மார்பின் தமிழ்நர் பெருமானைக்

கண்ணாரக் காணக் கதவு.

                                நாணொருபால் வாங்க நலனொருபா லுள்நெகிழ்ப்பக்

காமருதோள் கிள்ளிக்கென் கண்கவற்ற - யாமத்

திருதலைக் கொள்ளியி னுள்ளெறும்பு போல

திரிதரும் பேருமென் நெஞ்சு. 

என்னெஞ்சு நாணு நலனும் இவையெல்லாம்

மன்னன் புனனாடன் வௌவினான் – என்னே

அரவகல் அல்குலாய் ஆறில் ஒன் றன்றோ

புரவலர் கொள்ளும் பொருள்.

பாண்டிய நாடு 

காப்படங்கென் றன்னை கடிமனை யிற்செறித்து

யாப்படங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன்

நன்னலம் காணக் கதவம் துளைதொட்டார்க்

கென்னைகொல் கைம்மா றினி. 

களியானைத் தென்னன் இளங்கோவென் றெள்ளிப்

பணியாரே தம்பார் இழக்க – அணியாகங்

கைதொழு தேனும் இழக்கோ நறுமாவின்

கொய்தளிர் அன்ன நிறம் 

ஓராற்றல் என்கண் இமைபொருந்த அந்நிலையே

கூரார்வேல் மாறன் என் கைப்பற்ற – வாரா

நனவென் றெழுந்திருந்தேன் நல்வினையொன் றில்லேன்

கனவும் இழந்திருந்த வாறு

 

ஆடுகோ சூடுகோ ஐதாக் கலந்துகொண்டு

ஏடுகோ டாக எழுதுகோ – நீடு

புனவட்டப் பூந்தெரியல் பொற்றேர் வழுதி

கனவட்டங் கால்குடைந்த நீறு

 நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்

பந்தர் இளங்கமுகின் பாளையும் சிந்தித்

திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன்

நகைமுத்த வெண்குடையான் நாடு”

 

பெருங்கதை

           அகத் தூது :  செல்வோர்க்கான வாயில்கள்  -  12

 தொல்காப்பியர்,

              ‘‘தோழி தாயே பார்ப்பான் பாங்கன்

              பாணன் பாடினி இளையர் விருந்தினர்

              கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்

              யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப’’     ( தொல். பொருள். கற்பு.52  )

 புறத்தூது  : 

                ‘‘இயம்புகின்ற காலத்து எகினமயில் கிள்ளை

              பயம்பெறு மேகம்பூவை பாங்கி – நயந்தகுயில்

              பேதை நெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்துமே

              தூதுரைத்து வாங்கும் தொடை’’  

 

 ‘‘அருமை சான்ற வாருணி யரசன்

ஆயிரத் தெண்ம ரரங்கியன் மகளிர்

ஆடலும் பாடலு நாடொன்று நவின்ற

நன்நுதன் மகளிரை மின்னோர் மின்னிடை’’  

‘‘வாசவ தத்தைக்கும் பதுமா பதிக்கும்

கூறுநனி செய்து வீறுயர் நெடுந்தகை

கொடுத்த காலை……’’        

                                                      ‘‘பீலியும் மயிரும் வாலிதின் வலந்து

நூலினுங் கயிற்றினு நுண்ணிதிற் சுற்றிக்

கோலமாகக் கொண்டனர் பிடித்துப்

பாம்பின் றேலும் பீலிக் கண்ணும்

பூம்புன னுரையும் புரையக் குத்தி’’

 ‘‘சுழன்றன தாமங் குழன்றது கூந்தல்

அழன்றது மேனி யவிழ்ந்தது மேகலை

எழுந்தது குறுவிய ரிழிந்தது புருவம்

ஓடின தடங்கண் கூடின புருவம்

அங்கையி னேற்றம் புறங்கையி னோட்டியும்

தங்குற வளைத்துத் தான் புரிந் தடித்தும்’’ 

‘‘ஒன்றிய வியல்போ டொன்றுக் கொன்றவை

ஒளித்தவும் போலுங் களித்தவும் போலும்

வேலென விலங்குஞ் சேலென மிளிரும்

மாலென நிமிருங் காலனைக் கடுக்கும்

குழைமே லெறியுங் குமிழ்மேன் மறியும்

மலருங் குவியும் கடைசெல வளரும்

சுழலு நிற்குஞ் சொல்வன பொலும்

கழுநீர் பொருவிச் செழுநீர்க் கயல்போல்

மதர்க்குந் தவிர்க்குஞ் சுருக்கும் பெருக்கும்’’

 ‘‘பற்றிய யவன பாடையி லெழுத்தவள்

பூந்தா தோடு சாந்துறக் கூட்டி

ஒடியா விழுச்சீ ருதயண னேலை

மான னீகை காண்க சேணுயர்

பந்துவிளை யாட்டினுட் பாவைதன் முகத்துச

கொந்தழற் புண்ணொடு நொந்துயிர் வாழ்தல்

ஆற்றே னவ்வழ லவிக்குமா மருந்து

கோற்றேன் கிளவிதன் குவிமுலை யாகும்’’ 

‘‘மறுமொழி கொடுக்கு நினைவின ளாகி

நெறிமயிர்க் கருகே யறிவரி தாக

எழுதிய திருமுகம் பழுதுபட லின்றிக்

பொருந்திய பல்லுரை யுயர்ந்தோர்க் காகும்

சிறியோர்க் கருளிய வுயர்மொழி வாசகம்

பேணு செய்தல் பெண்பிறந் தோருக்

புறஞ்சொலு மன்றி யறந்தலை நீங்கும்’’


           ‘திருத்தகு மார்பன் கருத்தொடு புகுந்து

விருப்பொடு தழுவி நடுக்கந் தீரக்

கூடிய வேட்கையி னெருவர்க் கொருவர்

ஊடியுங் கூடியு நீடுவிளை யாடியும்

இருந்த பின்றை யிருவரு முறைமுறை

திருந்திய முகத்துப் பொருந்திய காதலொ

டெழுதிய வாசக மெல்லா முரைத்து

குறியெனக் கூறிச் சிறுவிரன் மொதிரம்

கொடுத்தன னருளிக் கோயிலு ணீங்க’’

         ‘‘தனக்குந் தங்கை  யியற்பது மாபதி

இருந்ததுங் கேட்டேன் வசுந்தரி மகளெனப்

பயந்த நாளொடு பட்டதை யுணர்த்தாள்

தன்பெயர் கரந்து மான னீகையென

அன்புடைய மடந்தை தங்கையை நாடி

எய்திய துயர்தீர்த் தியான் வரு காறும்’’

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,