தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

இலக்கண மாதிரி வினாத்தாள் - Grammar Model Questions with Answers

 

                                            யாப்பருங்கலக் காரிகை                                                                      

1.  யாப்பு இலக்கணம் என்பதன் பொருள்?

செய்யுள் இயற்றப் பெறுகின்ற இலக்கணத்தைக் கூறுவது ஆகும்.

 

2.  யாப்பருங்கலக் காரிகையின் முதல் நூல் எது?

யாப்பருங்கலம்

3.  யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகியவற்றிற்கெல்லாம் முந்தைய யாப்பு நூல் எது?

அவிநயம்

4.  அமிர்த சாகரர் எக்கடவுளை வழிபட்டதாகப் பாயிரம் கூறுகிறது?

அருகக் கடவுள்  /  சமணம்


5.  யாப்பருங்கலக்காரிகையின் உரையாசிரியர்?

குணசாகரர்

6.  யாப்பருங்கலக் காரிகை எத்தகைய யாப்பில் இயற்றப்பட்டுள்ளது?

கட்டளைக் கலித்துறை

7.  காரிகை என்று இந்நூலுக்குப் பெயர் வழங்கக் காரணம்?

காரிகை : பெண்; காரிகையை முன்னிலைப்படுத்திப் பேசுவதாக இந்நூல் செய்யுள்கள் அமைந்திருப்பதால்,

8.  கட்டளைக்கலி என்பதன் பொருள்?

எழுத்தெண்ணிப் பாடப்படும் கலி யாப்பு

9.  எழுத்து எண்ணுதல் என்றால்?

ஒற்றெழுத்துகள் அனைத்தையும் விட்டுவிட்டு உயிர்,  உயிர் மெய் எழுத்துகளை மட்டும் எண்ணுதல்

10.  ஓர் அடி நேரசையில் தொடங்கினால், ஒற்று நீக்கி ...எழுத்துகள் என்றும் நிரை அசையில் தொடங்கினால், ஒற்று நீக்கி ...  எழுத்துகள் இருக்குமாறும் பாடுவது மரபு.

நேரசையில்           :  16 

நிரை அசையில்   :  17

 

11.  யாப்பருங்கலக்காரிகையில் நேரசை கொண்டு தொடங்கும் செய்யுள்கள் :

நிரையசை கொண்டு தொடங்கும் செய்யுள்கள் :

நேரசை        :  21 

நிரையசை  :  23

 

12.  யாப்பருங்கலக் காரிகையின் இயல்கள்?

மூன்று   :   உறுப்பியல்,  செய்யுளியல்  &  ஒழிபியல்

13.  உறுப்பியலில் கூறப்படும் செய்திகள் எவை?

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய செய்யுள் உறுப்புகள்

14.  செய்யுளியலில் கூறப்படும் செய்திகள்?

 நால்வகைப் பா, இறுதியில் மருட்பா & பாவினங்கள்


15.  யாப்பருங்கலக் காரிகை ...  ஆம் நூ., இல் தோன்றியது?

கி. பி. 10

16.  கட்டளைக் கலித்துறைக்கு உரிய வேறு பெயர்?

காரிகை

17. யாப்பருங்கலக் காரிகையில் எழுத்துகளின் வகை எத்தனை என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்?

13 வகை

குறில்,                       நெடில்,                         உயிர்,               குற்றியலுகரம், குற்றியலிகரம்,    ஐகாரக் குறுக்கம்,   ஆய்தம்,           மெய்,

வல்லினம்,            மெல்லினம்,               இடையினம்,  உயிர்மெய், அளபெடை

18.  தமக்குரிய மாத்திரையில் இயல்பாக ஒலிப்பன?   /  

குறில்,                      நெடில்,                     உயிர்,                      

ஆய்தம்,                 மெய்,                       வல்லினம்,            

                      மெல்லினம்,          இடையினம்,       உயிர்மெய்        (  9  )

19.  நேரசை என்பன?

தனிக்குறில்,                     தனிக்குறில் ஒற்று,

தனி நெடில்,                      தனி நெடில் ஒற்று

 

20.  செய்யுளின் சந்தத்தை உண்டாக்கும் அடிப்படைச் செய்யுள் உறுப்பு?

அசை. 

                    புறப்பொருள் வெண்பாமாலை 

1.  புறப்பொருள் வெண்பாமாலையின் ஆசிரியர்?

ஐயனாரிதனார்

 

2.  புறப்பொருள் வெண்பாமாலையின் முதல் நூல்?

பன்னிரு படலம்

3. புறப்பொருள் வெண்பாமாலை தோன்றிய ஆண்டு?


9 ஆம் நூ., 

4.  புறப்பொருள் வெண்பாமாலை எந்த அவைக்களத்தில் பாடப்பட்டது?

சேரமன்னனின் அவைக்களத்தில்

 

5. புறப்பொருள் வெண்பாமாலையின் திணைகள் எவ்வாறு பகுக்கப்பட்டுள்ளன?

புறம், புறப்புறம், அகப்புறம்

 

6.  புறப்பொருள் வெண்பாமாலையின் யாப்பு வகை?

வெண்பா

 

7.  புறப்பொருள் வெண்பாமாலையின் எப்படலத்தை ஒழிபியல் என்று குறிப்பிடுகின்றனர்?

பொதுவியல்

 

8.  வெட்சிப் படலத்தின் வகைகள்?

இரண்டு : தன்னுறு தொழில், மன்னுறு தொழில்

 

9.  மன்னுறு தொழில் என்றால்?

மன்னனின் ஏவலால், மறவன் செய்கின்ற தொழில் / வெட்சி

 

10.  கையறுநிலை என்பது?

போரில் இறந்து வீழ்ந்த கரந்தை மறவனின் நிலையைப்

பாணர் இரங்கிப் பாடுதல்.

 

11.  கொற்றவள்ளை எத்திணைக்கு உரியது?

வஞ்சித் திணைக்கு

12.  உழபுல வஞ்சி என்பது?

வஞ்சி வேந்தன், தான் கவரச் சென்ற பகைவனின் நாட்டைத்

தீயிட்டு அழித்ததைக் கூறுதல். 

13.  வேய் என்பது?

பகைவரின் நிலையை ஒற்றர் மூலம் அறிதல்

14.  வழிவழியாகத் துடி கொட்டும் ஒருவனின் குடிநிலையைப் புகழ்ந்து பாடுவது?

துடிநிலை 

15.  கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே ... என்று பாராட்டுவது?

குடிநிலை / கரந்தை 

16.  காஞ்சித் திணையின் துறைகள் எத்தனை?

21

17.  முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை என்றால் என்ன?

முன்தேர்க்குரவை  :  தேர்முன் மறவர் ஆடுதல் ( தும்பை )

முன்தேர்க்குரவை :  தேரின் முன் பேய் ஆடுவது ( வாகை )

பின்தேர்க்குரவை :  தேரின் பின்னர் விறலியரும் மறவரும் கூத்தாடுவது  ( தும்பை  & வாகை )

18.  அரசன் கொடையாகக் கொடுக்கும் பசுவின் சிறப்பைக் கூறும் துறை?

கபிலை கண்ணிய புண்ணிய நிலை 

19.  உழிஞையார் நொச்சியாரின் அரணத்தை எதைக் கொண்டு உழுவர்?

கழுதை 

20.  கந்தழி என்னும் துறை பயின்று வரும் திணைகள்?

உழிஞை, பாடாண்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,