இளைஞர்களே...இளைஞியரே!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இளைஞர்களே...இளைஞியரே!
தகவல் தொழில் நுட்பமோ நாளுக்கு நாள் அன்று...நிமிடத்திற்கு நிமிடம் பெருகி வருகிறது. இத்தகைய நாளில் உங்களைப் பெருமையுடன் நினைக்கிறேன்.
காரணம், கல்வி, தொழில், வணிகம், மேலாண்மை, கணினி என்று பல துறைகளிலும் நீங்கள் மிகவும் சிறப்பாகச் செயலாற்றி வருகிறீர்கள். பாராட்டுகள்! 'நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள்; புதிய இந்தியாவை உருவாக்கித் தருகிறேன்' என்றார் விவேகானந்தர் அன்று! இன்றோ உங்களுள் பலரும் புதிய இந்தியாவை உருவாக்குவது மட்டுமன்று... வழிநடத்தவும் செய்கின்றனர்.
கனவு காணுங்கள்; என்று நமக்குள் கனவு என்னும் சொல்லை விதைத்த அப்துல் கலாம் அவர்களும் 'உன்னைத் தூங்க விடாமல் செய்வதுதான் கனவு' என்று கனவிற்குச் சரியான சொல்வடிவம் தந்தார். அவர்களது கூற்றுப் போலவே இளைஞர்கள் பலரும் சமூகம், பண்பாடு, கலை, நாட்டு முன்னேற்றம் சார்ந்த துறைகளில் தங்கள் செம்மையான முத்திரைகளைப் பதித்து வருகின்றனர்.
நம் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான 'சல்லிக்கட்டு' என்பதைத் தங்களது 'அறப் போராட்டத்தின்' மூலம் மீட்டெடுத்தனர். இங்கே மற்றொன்றும் நினைவிற்கு வருகிறது.. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் ஆகியவற்றில் இளைஞர்கள் பலரும் தம்முயிர் கருதாது உதவி செய்தனர். பசியால் துன்புற்றவர்களுக்கு உணவும், வயதான பெரியோர் மற்றும் கருப்பிணிப் பெண்கள், குழந்தைகள் என்று பலரையும் காப்பாற்றினர். இதற்காகத் தங்களுக்குள் ஓர் உதவிச் சங்கிலியை ஏற்படுத்தி அவர்களின் துன்பங்களை நீக்கினர்.
இன்னும் சில இளைஞர்கள் தாங்கள் கற்ற கல்வியின்படிப் பணியாற்றுகின்றனர் எனினும் சிலர் தங்கள் படிப்புக்குத் தொடர்பில்லாத பணிகள் எனினும் அதிலும் சிறப்பான முத்திரை பதித்து வருகின்றனர். இனி, இளைஞர்களின் நினைவிற்காக....! தகவல் தொழில் நுட்ப வேகத்தால் பல செயலிகள் தேவையற்று நம்மில் பலரிடையே உலவி வருகின்றன. புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் இன்று அலைபேசி உட்கார்ந்திருக்கிறது. அதில் தம்மையும் அறியாமல் தேவையற்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்து தங்கள் நேரத்தை வீணடிக்கின்றனர். இதுகூட பரவாயில்லை; தங்கள் பெற்றோர் உறவினர் என்னும் பாதுகாப்பு வலையிலிருந்து அறியாமல் விலகி விடுகின்றனர். விளைவு : தாழ்வு மனப்பான்மை, பிரச்சனைகளைப் புரிந்து கொல்லாமை, சவால்களை எதிர்கொள்ள இயலாமை என்று பலவிதமான 'மை'களுடன் நடமாடுகின்றன; தவறான முடிவுகளையும் எடுக்கின்றனர். இன்னும் சிலரோ வீட்டில் தனது பெற்றோரின் கடின உழைப்பு, அன்பு ஆகியவற்றைப் புரிந்து கொள்ளாமல் ...நினைவிலும் கொள்ளாமல்.... அலைபேசியில் வீழ்ந்து கிடக்குகின்றனர். Facebook, Whatsapp, instaram youtube twitter போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றனர். முகம் தெரியாத எவருக்கோ like முதலானவற்றை இடுகின்றனர்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக