கண்ணதாசன்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ரோஜா மலரே / வீரத்திருமகன்
பாடல் : கண்ணதாசன்
இசை : எம். எஸ். விஸ்வநாதன்.
பாடியவர்கள் : P. B. ஸ்ரீனிவாஸ் & P. சுசீலா.
பாடம் : வீரத்திருமகன்.
ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா?
வருவதும் சரிதானா? உறவும் முறைதானா?
வாராய் அருகே மன்னவன் நீயே!
காதல் சமமன்றோ
வேதம் இலையன்றோ! காதல் நிலையன்றோ!
ஏழை என்றாலும் ராஜகுமாரன்
ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ?!
உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ!
வானத்தின் மீதே பறந்தாலும் காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது
ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலரன்றோ
ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலரன்றோ
மன்னவர் நாடும் மணிமுடியும் மாளிகை வாழ்வும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும் படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ?
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ?
(ரோஜா மலரே)
பாடும் பறவைக் கூட்டங்களே பச்சை ஆடைத் தோட்டங்களே
விண்ணில் தவழும் ராகங்களே வேகம் போகும் மேகங்களே
ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வாழிய பாடல் பாடுங்களேன்
ரோஜா மலரே ராஜகுமாரி
ஏழை என்றாலும் ராஜகுமாரன்
உண்மை இதுவன்றோ
உலகின் முறையன்றோ
என்றும் நிலையன்றோ
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக