கவிதை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து.
காற்றும் இனிது தீ இனிது நீர் இனிது நிலம் இனிது
ஞாயிறும் நன்று திங்களும் நன்று
ஆஹா! இந்த அழகான உலகிற்கு
என்னை அறிமுகப்படுத்திய
என் அம்மாப்பா....!
உங்களுக்கு எனது
இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!
உங்களுக்கு என் நன்றியும்கூட!
ஆம், குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்!
பண்புகளைக் கற்றுக் கொடுக்கும் தந்தையும்
ஒரு வகையில் ஆசிரியரே!
ஆக, இருவருக்கும் மீண்டும் வாழ்த்துகள்!
கல்லும் உடையாமல்,
சிலையும் சிதறாமல்
நீங்கள் நினைத்த
சீரிய உருவத்தை வடித்திட
சிற்பியாய் . . . . . . நீங்கள்!
தாளும் கசங்கிடாமல்
வண்ணங்களும் குறைந்திடாமல்
நீங்கள் நினைத்த
ஒழுங்கான ஓவியத்தை வரைந்திட
ஓவியராய் . . . . . . நீங்கள்!
சீர்தளைகளும் தட்டாமல்
நயங்களும் குறைந்திடாமல்
நீங்கள் நினைத்த
பாங்கான பாக்களை இயற்றிட
கவிஞராய் . . . . . நீங்கள்!
அசுத்தங்களை நீக்கி,
'அநுசூயா'வாக
நன்மகளாய் ஆக்கிடச்
சிறந்த பெற்றோராய் . . . . . நீங்கள்!
இத்தனையுமாய் . . . இன்னுமாய்
இருந்திட்ட உங்களை
இருகை எடுத்து வணங்குகிறேன்!
நன்றியுடன் நினைக்கிறேன், நாளும்!
மேலும், மாதா பிதாவுக்கு
அடுத்து நீங்கள்தானே .. என் ஆசிரியர்களே!
இன்று என்னை
ஆசிரியராய் நிலைநிறுத்திய
என் பால்ய வயது
குருகுல ஆசிரியர் முதல்
பல்கலைக்கழக ஆசிரியர் வரை
என் அன்பான ஆசிரியப் பெருமக்களே!
உங்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகளைத்
தெரிவிக்கின்றேன் . . . .இதன் வாயிலாக!
வாழ்த்துங்கள் என்னை .. .. .. ..
அடுத்த பிறவியிலும் எப்பிறவியிலும்
உங்கள் மகளாய்!
உங்கள் மாணவியாய்!
இருந்திட, நிலைத்திட, வாழ்ந்திட ...!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

கருத்துகள்
கருத்துரையிடுக