நூல்கள் & ஆசிரியர்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நூல்கள் & ஆசிரியர்கள்
நம் தமிழ் மொழியில் உள்ள நூல்கள் இயற்றிய / எழுதிய ஆசிரியர்கள் / தமிழறிஞர்கள் பற்றிய
தகவல்களைக் காண்போம்.
அகத்தியம் : அகத்தியர்
முதுநாரை : ?
முதுகுருகு : ?
தொல்காப்பியம் : தொல்காப்பியர்.
இறையனார் அகப்பொருள் / இறையனார் களவியல் :
இறையனார் / சிவன்.
புறப்பொருள்
வெண்பாமாலை : ஐயனாரிதனார்.
அவிநயம் : அவிநயனார்.
காக்கைப்பாடினியம் : காக்கைப்பாடினியார்.
சங்க யாப்பு : ?
சிறுகாக்கைப்
பாடினியம் : காக்கைப்பாடினியார்.
நற்றத்தம் : நற்றத்தனார்.
பல்காயம் : பல்காயனார்.
பன்னிரு
படலம் :
தொல்காப்பியர் உள்ளிட்ட 12 பேர்.
மயேச்சுவரம்
/ மயேச்சுவர யாப்பு : மயேச்சுவரர்.
புறப்பொருள்
வெண்பாமாலை : ஐயனாரிதனார்.
யாப்பருங்கலம் : அமிர்தசாகரர்.
யாப்பருங்கலக்
காரிகை :
அமிர்தசாகரர்.
இந்திரகாளியம் : இந்திரகாளியர்.
வீரசோழியம் : புத்தமித்திரனார்.
நேமிநாதம் : குணவீரபண்டிதர்.
சின்னூல்
வெண்பாப்
பாட்டியல் : குணவீர பண்டிதர்.
தண்டியலங்காரம் : தண்டி.
தமிழ்நெறி
விளக்கம் : ?
நன்னூல் : பவணந்தி முனிவர்.
அகப்பொருள்
விளக்கம் : நாற்கவிராச நம்பி.
நம்பி அகப்பொருள் : நாற்கவிராச
நம்பி.
களவியற்
காரிகை :
?
பன்னிரு
பாட்டியல் : அகத்தியர், அவிநாயனார் போன்ற 15 பேர்.
நவநீதப்
பாட்டியல் : நவநீத உடையார்
வரையறுத்த
பாட்டியல் : ?
சிதம்பரப்
பாட்டியல் : பரஞ்சோதியார்.
மாறனலங்காரம் : திருக்குருகைப்
பெருமாள் கவிராயர்.
மாறன் அகப்பொருள் : திருக்குருகைப்
பெருமாள் கவிராயர்.
பாப்பாவினம்
: திருக்குருகைப் பெருமாள் கவிராயர்.
பிரபந்த
மரபியல் :
சிதம்பரச்
செய்யுட்கோவை : குமரகுருபரர்.
பிரயோக
விவேகம் : சுப்பிரமணிய தீட்சிதர்.
இலக்கண
விளக்கம் : வைத்தியநாத தேசிகர்.
இலக்கண
கொத்து : சுவாமிநாத தேசிகர்.
தொன்னூல்
விளக்கம் : வீரமாமுனிவர்.
குவலயானந்தம்
: சுப்பைய தீட்சிதர் உள்ளிட்டோர்.
இலக்கண
விளக்கச் சூறாவளி : சிவஞான முனிவர்.
இலக்கண
விளக்கப் பதிப்புரை மறுப்பு : சபாபதி நாவலர்.
பிரபந்த
தீபம் :
?
பிரபந்தத்
திரட்டு : ?
உவமான சங்கிரகம் : திருவேங்கடம்.
முத்து
வீரியம் : முத்துவீர உபாத்தியாயர்.
சுவாமிநாதம்
: சுவாமி கவிராயர்.
அணி இலக்கணம் : திருத்தணிகை
விசாகப் பெருமாளையர்.
அறுவகை
இலக்கணம் : வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார்.
குவலயானந்தம் : மாணிக்கவாசகர்.
விருத்தப்
பாவியல் : வீரப்ப முதலியார்.
மாணவர்
தமிழ் இலக்கணம் : திருமலைவேல் கவிராயர்.
தமிழ் இலக்கணக்
கும்மி :
துரை கனகசபை.
தமிழ் நூல் ( தமினூல் )
: சரவணத் தமிழன்.
யாப்பு
நூல் : சரவணத் தமிழன்.
தென்னூல் : ச. பாலசுந்தரனார்.
இவற்றைத்
தவிர,
வண்ணத்தியல்பு,பொருத்த விளக்கம்,யாப்பொளி,திருவலங்கல்
திரட்டு, காக்கைபாடினியம், இலக்கண தீபம் ஆகிய நூல்களும் இசைநுணுக்கம் : சிகண்டி ( அகத்தியரின் சீடர் )
வரி, சிற்றிசை, பேரிசை, கூத்தநூல்(1), சாத்தனார் இயற்றிய
கூத்த நூல் ( 2 ), இந்திர காளியம்( 1 ),
இந்திர காளியம் ( 2 ) : யமளேந்திரர்,
பஞ்சமரபு : சேறை அறிவனார்.
பரதசேனாபதியம் : ஆதிவாயிலார்.
மதிவாணர்
நாடகத் தமிழ் : மதிவாணன்.
கணக்கு
நூல் :
காக்கைப்பாடினியார்.
கணக்கதிகாரம் : காரிநாயனார்
ஆகிய நூல்களும் இருந்திருக்கின்றன.
இலக்கண நூல்களைப் போன்றே நிகண்டுகள் மற்றும்
அகராதிகளும் முக்கியப் பங்கினை வகிக்கின்றன.
நிகண்டுகள்
சூடாமணி : மண்டல
புருடர்.
திவாகரம் : திவாகர
முனிவர்
பிங்கலந்தை : பிங்கல
முனிவர்
கயாதரம் : கயாதர முனிவர்
அகராதிகள்
அகராதி
நிகண்டு : இரேவண சித்தர்
சதுரகராதி : வீரமாமுனிவர்
சென்னைப்பல்கலைக்கழகப் பேரகராதி : சென்னைப் பல்கலைக்
கழகத்தார் /1920களில் ... / ஏழு தொகுதிகள்...
க்ரியாவின்
தற்காலத் தமிழ் அகராதி :
முதல் பதிப்பு : 1982 / அண்ணாமலை, பா. ரா. சுப்பிரமணியன், க்ரியா
எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழு ..
இரண்டாம்
பதிப்பு : 2008 ஜூன்.
மூன்றாம் பதிப்பு :2020, நவம்பர்.
கலைக்களஞ்சியங்கள்
அபிதான சிந்தாமணி : சிங்காரவேலு முதலியார் / 1910 / மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடு.
தமிழ்க் கலைக்களஞ்சியம் : தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில், பலர் / தொகு : பெ. தூரன். / 1947 /இல் தொடக்கம். முதல் தொகுதி : 1954 முதல் ... 10 தொகுதிகள் ( 1968 ) / இந்தியாவில் முதல்...
குழந்தைகள் கலைக்களஞ்சியம் : தமிழ் வளர்ச்சிக் கழகம் / 10 தொகுதிகள் / இன்று இணையத்தில்...
அறிவியல் களஞ்சியம் : தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகம் / 19 தொகுதிகள்.
இவற்றைப் போன்றே வாழ்வியல் கலைக் களஞ்சியம், சைவக் களஞ்சியம், இஸ்லாமியக் கலைக் களஞ்சியம், மருத்துவக் கலைக்களஞ்சியம், பிரிட்டானிகா தகவல் களஞ்சியம், வேளாண்மைக் கலைக் களஞ்சியம், தமிழ்க் களஞ்சியம், பாலியல் கலைக் களஞ்சியம், மூலிகைக் கலைக் களஞ்சியம் முதலான பல களஞ்சியங்கள் உள்ளன.
பதினெண்மேல் கணக்கு நூல்கள்
( பாட்டும்
தொகையும் )
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை : நக்கீரர்./
முருகன்
பொருநராற்றுப்படை : முடத்தாமக்கண்ணியார். / கரிகால்
பெருவளத்தான்.
சிறுபாணாற்றுப்படை : நல்லூர் நத்தத்தனார் / நல்லியக்கோடன்.
பெரும்பாணாற்றுப்படை : கடியலூர் உருத்திரங்கண்ணனார். /
இளந்திரையன்.
முல்லைப்பாட்டு
: நப்பூதனார். / பாண்டியன் நெடுஞ்செழியன்.
மதுரைக்காஞ்சி : மாங்குடி மருதனார். / பாண்டியன்
நெடுஞ்செழியன்.
நெடுநல்வாடை : நக்கீரர். / பாண்டியன் நெடுஞ்செழியன்.
குறிஞ்சிப்பாட்டு : கபிலர். /
ஆரிய அரசன் பிரகதத்தன்.
பட்டினப்பாலை : கடியலூர் உருத்திரங்கண்ணனார் / கரிகால் பெருவளத்தான்.
மலைபடுகடாம்: பெருங்குன்றூர்க் கிழார் / நன்னன்சேய் நன்னன்.
எட்டுத்தொகை
நற்றிணை : 175 புலவர்கள் / தொகு : ? / தொகுப்பி :
பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி.
குறுந்தொகை : 205 புலவர்கள் / தொகு : பூரிக்கோ / தொகுப்பி
: ?
ஐங்குறுநூறு : ஐந்து புலவர்கள் / தொகு : கூடலூர்க் கிழார் /
தொகுப்பி
: யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
பதிற்றுப்பத்து : 10 புலவர்கள் / தொகு
& தொகுப்பி : ?
பரிபாடல் : 22 புலவர்கள். / தொகு & தொகுப்பி : ?
கலித்தொகை : ஐந்து புலவர்கள். / தொகு : நல்லந்துவனார் /
தொகுப்பி
: ?
அகநானூறு : பல புலவர்கள். / தொகு : உருத்திர சன்மனார் /
தொகுப்பி : பாண்டியன்
உக்கிரப்பெருவழுதி.
புறநானூறு : பல புலவர்கள். / தொகு
& தொகுப்பி : ?
பதினெண்
கீழ்க்கணக்கு நூல்கள்
நாலடியார் : சமண முனிவர்கள்.
நான்மணிக்கடிகை : விளம்பிநாகனார்.
இன்னா நாற்பது : கபிலர்.
இனியவை
நாற்பது : பூதஞ்சேந்தனார்.
கார் நாற்பது : மதுரைக்கண்ணங்
கூத்தனார்.
களவழி நாற்பது : பொய்கையார்.
ஐந்திணை
ஐம்பது : மாறன் பொறையனார்.
ஐந்திணை
எழுபது :
மூவாதியார்.
திணைமொழி
ஐம்பது : கண்ணஞ்சேந்தனார்.
திணைமாலை
நூற்றைம்பது : கணிமேதாவியார்.
திருக்குறள்
: திருவள்ளுவர்.
திரிகடுகம் : நல்லாதனார்.
ஆசாரக்கோவை : பெருவாயின்
முள்ளியார்.
பழமொழி
நானூறு :
முன்றுறை அரையனார்.
சிறுபஞ்சமூலம் : காரியாசான்.
இன்னிலை : பொய்கையார்.
முதுமொழிக்காஞ்சி : மதுரைக்
கூடலூர்க் கிழார்.
ஏலாதி : கணிமேதாவியார்.
கைந்நிலை : புல்லங்காடனார்.
பிற நீதி நூல்கள்
நல்வழி : ஒளவையார்.
கொன்றைவேந்தன் : ஒளவையார்.
ஆத்திச்சூடி : ஒளவையார்.
/ 12
ஆம் நூ.,
நீதிநெறி
விளக்கம் : குமரகுருபரர்.
உலகநீதி : உலகநாதர்.
மூதுரை
/ வாக்குண்டாம் : ஒளவையார்.
நீதிவெண்பா
: ?
நன்னெறி : சிவப்பிரகாசர்.
காப்பியங்கள்
பெருங்கதை: கொங்குவேளிர்(குணாட்டியர்:வடமொழி:பிருகத்கதா
1. ஐம்பெருங் காப்பியங்கள்
சிலப்பதிகாரம் : இளங்கோவடிகள்
மணிமேகலை : சீத்தலைச் சாத்தனார்.
சீவக சிந்தாமணி
: திருத்தக்க தேவர்.
வளையாபதி : ?
குண்டலகேசி
: நாதகுத்தனார்.
2. ஐஞ்சிறு
காப்பியங்கள்
உதயணகுமார
காவியம் : கொங்குவேளிர் ...
நாககுமார
காவியம் : ?
யசோதர காவியம் : ?
நீலகேசி : ?
சூளாமணி : தோலாமொழித்
தேவர்.
பன்னிரு திருமுறைகள்
தேவாரம் / 8227 பாடல்கள்.
முதலாம்
திருமுறை : திருஞான சம்பந்தர்.
இரண்டாம்
திருமுறை : திருஞான சம்பந்தர்.
மூன்றாம் திருமுறை
: திருஞான சம்பந்தர்.
நான்காம்
திருமுறை : திருநாவுக்கரசர்.
ஐந்தாம்
திருமுறை : திருநாவுக்கரசர்.
ஆறாம் திருமுறை : திருநாவுக்கரசர்.
ஏழாம் திருமுறை : சுந்தரர்.
எட்டாம்
திருமுறை : மாணிக்கவாசகர்.
ஒன்பதாம்
திருமுறை : ஒன்பது பேர்.
1. திருவிசைப்பா : திருமாளிகைத் தேவர், சேந்தனார்,
கருவூர்த்தேவர், பூந்துருத்தி காடவநம்பி, கண்டராதித்தர்,
வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி,
சேதிராசர்.
2. திருப்பல்லாண்டு
: சேந்தனார்.
பத்தாம்
திருமுறை : திருமூலர்
/ திருமந்திரம்.
பதினோராம்
திருமுறை
பன்னிருவர்
பாடியது / 40 நூல்கள்
1. திருவாலவாய் உடையார்
2. காரைக்கால் அம்மையார்.
3. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்.
4. சேரமான் பெருமாள் நாயனார்.
5. நக்கீர தேவ நாயனார்.
6. கல்லாடதேவ நாயனார்.
7. கபிலதேவ நாயனார்.
8. பரணதேவ நாயனார்.
9. இளம்பெருமான் அடிகள்.
10. அதிராவடிகள்.
11. பட்டினத்துப் பிள்ளையார்.
12. நம்பியாண்டார் நம்பி.
பன்னிரண்டாம்
திருமுறை
பெரிய புராணம் : சேக்கிழார்.
வைணவ சமய
நூல்கள்
பன்னிரு
ஆழ்வார்கள் / 24 நூல்கள்.
பொய்கை
ஆழ்வார்
பூதத்தாழ்வார்.
பேயாழ்வார்.
திருமழிசை
ஆழ்வார்
நம்மாழ்வார்
மதுரகவி
ஆழ்வார்
பெரியாழ்வார்.
ஆண்டாள்.
திருமங்கை
ஆழ்வார்.
தொண்டரடிப்
பொடியாழ்வார்.
திருப்பாணாழ்வார்.
குலசேகர ஆழ்வார்.
கருத்துகள்
கருத்துரையிடுக